“இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: “இண்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம்” என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் என்ற இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பேரணி நடந்தது. இதில் பங்கேற்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு … Read more

“தேர்தல் களத்தில் எதிர்ப்பு அலையால் மக்களை அச்சுறுத்தும் பாஜக தலைவர்கள்” – முத்தரசன் காட்டம்

சென்னை: “இண்டியா கூட்டணி வென்றால் நாட்டில் கலவரங்கள் அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் பேசுவது மக்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்தி, ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். பாஜக தலைவர்களின் பொறுப்பற்ற, தரம் தாழ்த்த பேச்சுக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தலில் கடுமையான தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைக்கு பாஜகவும், அதன் கூட்டணியும் தள்ளப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி நாளொரு மேனியும், … Read more

கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய சட்ட மாணவருக்கு ரூ.75,000 அபராதம்

புதுடெல்லி: டெல்லி மதுப்பான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைபட்டுள்ள முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ததோடு, அதைத் தாக்கல் செய்த சட்ட மாணவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. … Read more

சென்னையில் சட்டவிரோத ‘பார்க்கிங்’கை தடுக்கும் கொள்கைகள் 3 மாதங்களில் இறுதி செய்யப்பட்டும்: அரசு

சென்னை: சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுப்பதற்கான கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவத் என்பவர்,சென்னையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதுசம்பந்தமாக விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க கொள்கை வகுக்கும்படி … Read more

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார்

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி வெறுப்பு பேச்சுக்களை பேசியதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார் அளித்துள்ளது. ராஜஸ்தானில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்… … Read more

“தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” – பிரதமர் மோடி பேச்சுக்கு அமைச்சர் பிடிஆர் எதிர்வினை

சென்னை: பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்து வருகின்றன. வெறுப்புப் பேச்சு என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பேசியதை பகிர்ந்து, “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவின் தேர்தல் அத்துமீறல்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதை உணர்ந்தும் விதமாக … Read more

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் கை கூப்பி மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை

பெங்களூரு: கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொலையாளி ஃபயஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி தனது மகனின் செயலுக்காக இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹுப்ளியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத், ஹுப்பள்ளியில் … Read more

தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கை தேவை: அன்புமணி

சென்னை: பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், ”கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் … Read more

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்…” – மோடியின் பேச்சும், ராகுல் காந்தி எதிர்வினையும்!

ஜெய்ப்பூர்: “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வம் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும்” என்று ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே வார்த்தைப் போருக்கு வித்திட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி … Read more

“உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா” – ஆய்வறிக்கை

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். இது மனிதர்களின் உடல்நலன், பனிப்பாறை உருகுதல், பொருளாதார நடவடிக்கைகளின் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கின்றது. ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தான் இந்த அதிர்ச்சித் தகவல் இடம்பெற்றுள்ளது. இதனால் ஐரோப்பிய … Read more