’வந்தால் செல்ல நாய்க்குட்டியுடன்தான் வருவேன்’ – சொன்னதைச் செய்து காட்டிய டேராடூன் மாணவர்!

புதுடெல்லி: உக்ரைனில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர், ’எனது செல்ல நாய்க்குட்டியுடன்தான் இந்தியா திரும்புவேன்’ என்று கூறிவந்த நிலையில், அவர் விருப்பப்படியே அனைத்து தடைகளையும் தகர்த்து தனது சொந்த ஊரான டேராடூனுக்கு செல்ல நாய்க்குட்டியுடன் வந்து சேர்ந்தார். உக்ரைனில் பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர் ரிஷப் கவுஷிக். இவர் தனது செல்ல நாய்க்குட்டி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். தனது செல்ல நாய்க்குட்டிக்கு அவர் வைத்துள்ள பெயர் மாலிபு. அதனையும் தன்னோடு அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு … Read more

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் ஆணைய தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ஜெனிவா: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுதந்திரமான ஆணையம் ஒன்று அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வருவதற்காக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் இன்று (மார்ச் 4) வாக்கெடுப்பு நடத்தியது. உக்ரைனில் நிலவி வரும் மனித உரிமைகள் குறித்தான … Read more

'தி மயிலாப்பூர் கிளப்'-புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவு

சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கான வாடகை பாக்கியை செலுத்தவில்லை எனக் கூறி, ‘தி மயிலாப்பூர் கிளப்’புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் 24 கிரவுண்ட் நிலத்தை ‘தி மயிலாப்பூர் கிளப்’ குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த நிலத்துக்கு 3 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, அத்தொகையை செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் … Read more

”உக்ரைனில் இருந்து மாணவர் நவீன் உடலுக்கு பதிலாக…” – கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கருத்தால் சர்ச்சை

பெங்களூரு: “உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடலுக்கு பதிலாக 10 மாணவர்களை அங்கிருந்து மீட்டு வந்துவிடலாம்” என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்த மாணவர் நவீன். இவர் கார்கிவ் தேசிய மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த நிலையில், போர்ச் சூழலுக்கு இடையே அந்நகரில் உள்ள கடைக்கு உணவு வாங்க சென்றபோது வான்வழித் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

போர்ச் சூழலில் 600 மைல் பயணம்: உக்ரைனில் இருந்து போலந்துக்கு 6 சிங்கங்கள், 6 புலிகள் பத்திரமாக அனுப்பிவைப்பு

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் நீடித்து வரும் நிலையில், கீவ் நகரிலிருந்து ஆறு சிங்கங்களும், ஆறு புலிகளும் போலந்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உக்ரைன் மீது ரஷ்யா தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லைப் பகுதியில் தொடங்கியத் தாக்குதல் இப்போது குடியிருப்பு பகுதிகள் வரையில் தொடர்கிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டினரை பாதுகாப்பாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற வசதி செய்தும் வருகின்றன. லட்சக்கணக்கான உள்நாட்டினரோ … Read more

அதிமுக ஆதரவுடன் பதவியைக் கைப்பற்ற முயன்ற திமுக பெண் கவுன்சிலர் – மோதல் வெடித்ததால் உதயேந்திரம் பேரூராட்சியில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பத்தூர்: உதயேந்திரம் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற கவுன்சிலர், அதிமுக ஆதரவுடன் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற முயன்றதால் கவுன்சிலர்களிடையே இன்று திடீர் மோதல் ஏற்பட்டு பேரூராட்சி அலுவலகம் போர்க்களமாக மாறியது. இதைதொடர்ந்து, மறு தேதி அறிவிக்கப்படும் வரை மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக செயல் அலுவலர் குருசாமி அறிவித்தார். இதைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டமும், திமுக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், … Read more

தமிழகத்தில் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு: நாளை ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி: 2024 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. பெங்களுருவில் நாளை (5 ஆம் தேதி) நடைபெறவுள்ள 6 தென்மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேச அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் உள்பட 6 தென்மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேச அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் … Read more

"ரஷ்யாவின் பொறுப்பற்ற செயல்" – உக்ரைன் அணுமின் நிலையத் தாக்குதலுக்கு நேட்டோ, ஜெர்மனி கண்டிப்பு

புருஸல்ஸ்: உக்ரைன் மீது ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்சமடைந்துள்ளது. ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தாக்குதல் குறித்து நேட்டோ தலைவர் ஜென் ஸ்டோலன்பெர்க் கூறுகையில், “உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது ரஷ்யாவின் பொறுப்பற்ற செயலைக் காட்டுகிறது. ரஷ்யா தனது … Read more

மதுரை திமுகவின் உருவம், பிம்பம் மாற்றப்பட்டிருக்கிறது: நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: ‘‘மதுரையில் தவறான திசையில் சென்ற திமுகவின் உருவம், பிம்பம் தற்பாது திருத்தும் வகையில் புதிய வழியில் செல்லத் தொடங்கியிருக்கிறது’’ என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி புதிய மேயராக இந்திராணி பொன்வசந்த் பொறுப்புபேற்றுக் கொண்ட நிலையில் அவர், நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது: “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 6 ஆண்டுகள் தாமதமாக தற்போது தேர்தல் நடந்து. அதில் தேர்வு பெற்றவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். … Read more

உக்ரைன்- ரஷ்யா போர்; இந்தியர்கள் மீட்பு: பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்றும் ஆலோசனை நடத்தினார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் அவர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்தச் சூழலில் இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். இந்தநிலையில் உக்ரைன் நிலவரம் … Read more