2 பேருக்குக் கரோனா: டோங்காவில் ஊரடங்கு அமல்; எரிமலை சீற்றத்திலிருந்து விடுபடுவதற்குள் புதிய சிக்கல்

நுகு அலோபா: பல மாதங்களுக்குப் பின் புதிதாக இரண்டு பேருக்குக் கரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று ஒரு நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தீவு தேசமான டோங்கா. ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான தீவுக் கூட்டம்தான் டோங்கா. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் கடல் தேசமாகப் போற்றப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. இந்த … Read more

தமிழக ஆளுநர், பிரதமரை சீண்டுவது பொறுப்புமிக்க அரசுக்கு அழகல்ல: அண்ணாமலை

தஞ்சாவூர்: “தமிழக ஆளுநர், பிரதமரை சீண்டுவது போன்றவை பொறுப்புமிக்க அரசுக்கு அழகல்ல” என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவி்த்தார். தஞ்சாவூரில் இன்று பாஜக வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: ”பாஜகவுக்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதேநேரத்தில் திமுக அரசு மீது மக்களிடையே சலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைக் கூறி வருகின்றனர். இதற்காக திமுகவினர் வீடு, வீடாகச் செல்கின்றனர். இதற்கான அரசாணையோ, பட்ஜெட்டோ போடாமல் … Read more

‘‘நான் உண்மையை மட்டுமே பேசுவேன்; பொய்யான வாக்குறுதி என்றால் அவரை கேளுங்கள்’’- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

சண்டிகர்: “பொய்யான வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன்; பொய்யான வாக்குறுதிகளை நீங்கள் கேட்க விரும்பினால் பிரதமர் மோடி பேசுவதைக் கேளுங்கள்“ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது. பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் … Read more

ஐந்து மாதங்களுக்குப் பின் வெளியுலகில் தென்பட்ட வடகொரிய அதிபர் கிம்மின் மனைவி

பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மனைவி ரி சோல் ஜு, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டுள்ளார். கரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே வட கொரிய அதிபரின் குடும்பத்தினர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில், பொதுவெளியில் வருவதில்லை. இந்நிலையில், வட கொரியாவின் புத்தாண்டை ஒட்டி தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மன்சுடே கலையரங்கில் நடைபெற்றக் கலை நிகழ்ச்சியைக் காண கணவர் கிம் ஜோங் உன்னுடன் வந்தார் ரி சோல் ஜு. இதனை வட கொரியாவின் … Read more

திருச்சியில் வாக்குச்சாவடிகளுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில், கரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 401 வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் பிப்.19ம் தேதி நடைபெறவிருகிறது. இந்தத் தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,262 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, துறையூர் நகராட்சி 10-வது வார்டு, … Read more

‘‘பிஹாரை கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்’’- சுஷில் மோடி வரவேற்பு

பாட்னா: கால்நடைத் தீவன 5-வது ஊழல் வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வரவேற்றுள்ளார். பிஹாரை கொள்ளையடித்தவர்கள் இப்போது தண்டிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் … Read more

ரஷ்யாவை மட்டுப்படுத்த உக்ரைனை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துகிறது: புதின் சரமாரி குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். இதில், அமெரிக்காவின் நட்பு நாடுகளும் கூட்டாளிகளாக இணைந்துள்ளதாக அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார். மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், “உக்ரைனை மேற்கத்திய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்ற கோரிக்கையை நாம் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளிடம் கொடுத்துள்ளோம். ஆனால், அதற்கு அவர்கள் அளித்த பதில் எவ்விதத்திலும் திருப்திகரமாக இல்லை. ரஷ்யாவின் … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ’உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், … Read more

முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் காங்கிரஸில் இருந்து திடீர் விலகல்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வினி குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் அஸ்வனி குமார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். காங்கிரஸ் சார்பில் பல்வேறு வழக்குகளில் வழக்கறிஞராகவும் ஆஜராகி வந்தார். அஸ்வினி குமார் இந்தநிலையில் அஸ்வினி குமார் காங்கிரஸில் இருந்து … Read more

போர் பதற்றம்: உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்பட இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி: போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் வெளியேறலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணைந்தால், அது தங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்று குற்றம்சாட்டி உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது ரஷ்யா. அண்மையில் கிடைத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. அதிபரின் வீடியோவால் சர்ச்சை: உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1,30,000 வீரர்களை நிறுதியுள்ளது. … Read more