13-வது நாளாக தொடரும் ரஷ்ய தாக்குதல்: இன்றாவது சாத்தியப்படுமா மனிதாபிமான வழித்தடம்; மக்கள் தவிப்பு

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று 13வது நாளாக தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் சிக்கியுள்ள மக்கள் உயிர் பிழைக்கவாவது எங்காவது தப்பிவிட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஏற்கெனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்ட ரஷ்ய போர் நிறுத்த அறிவிப்பு செயல்பாட்டுக்கே வராத நிலையில், 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் மனிதாபிமான வழித்தடங்கள் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், ரஷ்ய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் போர் … Read more

அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்: சசிகலா உறுதி

சென்னை: அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு, ஏக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருச்செந்தூரில் சசிகலாவைச் சந்தித்ததற்காக ஓபிஎஸ்-ஸின் சகோதரர் ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்களுக்கு நான்மேற்கொண்டது ஆன்மிகப் பயணமாக இருந்தாலும், அந்தந்த மாவட்ட மக்கள் எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து, எல்லையற்ற மகிழ்ச்சியில் … Read more

பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு; உ.பி. உட்பட 4 மாநிலங்களில் பாஜக முந்துகிறது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிஅமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற் றது. வரும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை நேற்று மாலை வெளியிட்டன. உத்தர பிரதேசத்தில் மொத்தம் … Read more

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கனமழை எச்சரிக்கை விலக்கம்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்காமல் கடலிலேயே வலுவிழந்ததால், தமிழகத்துக்கான கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: வங்கக் கடலில் நிலவி வந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துவிட்டது. இது தற்போது மேலும் வலுகுறைந்து, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. அதனால் தமிழகத்துக்கு ஏற்கெனவே … Read more

உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவருக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் நேரில் ஆறுதல்

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்துவந்தனர். இதனிடையே உக்ரைன்மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ளதால் அங்குள்ள மாணவர்களை ஆபரேஷன் கங்கா மூலம் இந்திய அரசு மீட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் குண்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் போலந்து எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது காயமடைந்த மாணவர் ஹர்ஜோத் சிங்கை, போலந்தின் ருசெஸ்ஸோ விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் … Read more

ரஷ்ய ராணுவ தாக்குதலை சமாளிக்க உக்ரைன் இளைஞர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி

லிவ்: உக்ரைன் மீது கடந்த 12 நாட்களாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் மிகக் குறைந்த ராணுவ பலத்தைக் கொண்டிருந்தாலும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு தக்கபதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஆர்வமுள்ளவர் கள் போரில் ஈடுபடலாம் என உக்ரைன் அதிபர் அறிவித்தார். இதையடுத்து, இளைஞர்களுக்கு குறுகிய கால துப்பாக்கிச் சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து உக்ரைனைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஆந்திரி சென்கிவ் கூறியதாவது: நான் இதுவரை துப்பாக்கியைக் கையில் பிடித்தது கூட … Read more

மார்ச் 7: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.6 வரை மார்ச்.7 மார்ச்.6 … Read more

குண்டு வீச்சு காரணமாக உக்ரைனின் சுமி பகுதியில் மாணவர்களை மீட்பதில் சிக்கல்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது. எனினும், சுமி பகுதியில் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுவ தால் அங்குள்ள மாணவர்களை மீட்கும் பணியில் சிக்கல் உள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணை செயலாளர் அரிந்தம் பக்‌ஷி கூறியதாவது:- உக்ரைனில் இருந்து இதுவரை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 63 விமானங்களில் சுமார் … Read more

மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம்: இரு நாடுகளுக்கு இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையின்படி ரஷ்யா அறிவிப்பு

மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையின்படி இந்த போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக எல்லையோர நகரங்கள், தலைநகர் கீவ், முக்கிய நகரமான கார்கிவ் பகுதிகள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. மேலும் … Read more

மார்ச் 7: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more