கனடாவில் பதற்றம்: குடும்பத்துடன் தலைமறைவான ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பலமாக எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது. நூற்றுக்கணக்கானவர்கள் தலை நகரில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் … Read more

தென் மாவட்ட பயணியர் ரயில்களை முன்பு போல இயக்க அனுமதிக்க வேண்டும்: சரத்குமார்

சென்னை: ’மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தென் மாவட்ட பயணியர் ரயில்களை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும்’ என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில், தென் மாவட்ட பயணியர் ரயில்கள் முன்பு போல இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்ட நிலையில், இன்று கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. ஹிஜாப் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக இவ்விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம், ”கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது” என உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த திங்கள்கிழமை 10-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது … Read more

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குறைப்பு: போர் பதற்றம் தணியும் என எதிர்பார்ப்பு

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில், உக்ரைன் எல்லையில் இருந்து சில படைப்பிரிவுகள் தங்கள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால், போர் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. இதனால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டதால் போர் … Read more

'ஆக்கிரமிப்பு வேறு… சபா வேறு…' – திமுக கொள்கையை பரப்பிய 95 ஆண்டு கால தஞ்சை சுதர்சன சபா அகற்றத்தால் ஆதங்கம்

தஞ்சாவூர்: திமுகவின் கொள்கைகளை நாடகமாக பரப்பிய தஞ்சாவூரில் 95 ஆண்டு பழமையான சுதர்சன சபா இடித்து அகற்றப்பட்டுள்ளதற்கு ஆதங்கமும் பதிவாகி வருகிறது. திமுகவின் கொள்கைளை நாடகமாக பொதுமக்களிடையே பரப்பிய, தஞ்சாவூரில் 95 ஆண்டு பழமையான சுதர்சன சபா நாடக மன்றம் நேற்று இடித்து அகற்றப்பட்டது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 40,793 சதுர அடி பரப்பளவில் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில், தஞ்சாவூர் மாநகராட்சி இடத்தினை, 1927-ம் ஆண்டு சுதர்சன சபா என்ற நாடக மன்றம் … Read more

குரு ரவிதாஸ் ஜெயந்தி: டெல்லி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்; பக்தர்களுடன் கீர்த்தனையில் பங்கேற்பு

புதுடெல்லி: 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் குரு ரவிதாஸின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி கரோல்பாகில் உள்ள ரவிதாஸ் கோயிலில் பிரதமர் நரேந்திர் மோடி தரிசனம் செய்தார். குரு ரவிதாஸ் திரு உருவச்சிலைக்கு அவர் தீப ஆராதனை காட்டி பூஜைகள் செய்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்களுடன் அமர்ந்து, அவர்கள் பாட்டுப்பாட அதற்கேற்ப இசைக்கருவி ஒன்றை இசைத்து கீர்த்தனையில் ஆர்வமுடன் பங்கேற்றார். பிரதமர் மோடி தனது தலையில் துணி ஒன்றையும் கட்டியிருந்தார். ரவிதாஸ் ஏற்படுத்திய ரவிதாஸியா … Read more

மேற்கத்திய நாடுகளின் மனநோய் தீர மருத்துவ நிபுணர்கள் உதவி தேவை: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கிண்டல்

மாஸ்கோ: அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாட்டவருக்கு தேவையற்ற பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களது சித்தப்பிரம்மை தெளிய நிபுணர்கள் தேவையென கிண்டல் செய்துள்ளது ரஷ்யா. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. இதனால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவ திட்டமிட்டுள்ள தாகவும் இதற்காக தனது … Read more

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிப்.22 முதல் 28 வரை அறிவியல் திருவிழா கொண்டாட்டம்: விக்யான் பிரச்சார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தகவல்

சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தேசிய அறிவியல் திருவிழா கொண்டாடப்படும் என்று மத்திய அரசின் விக்யான் பிரச்சார் அமைப்பு அறிவித்துள்ளது. சர். சி.வி.ராமன் தனது புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ குறித்து 1928-ம் ஆண்டு பிப்.28-ம் தேதி உலகுக்கு அறிவித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புக்கு 1930-ம் ஆண்டில் நோபல்பரிசு வழங்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பிப்.28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய … Read more

மீண்டும் 30,000ஐ தொட்ட அன்றாட கரோனா பாதிப்பு: பரவல் விகிதம் 2.45% ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 27,409 என்றளவில் அன்றாட கரோனா தொற்று பதிவாகியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இது சற்றே அதிகரித்து மீண்டும் 30,000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,615 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று மீண்டும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்தது. நேற்று புதிதாக 756 பேருக்கு தொற்று உறுதியானது. * அன்றாட … Read more

எச்ஐவி தொற்றிலிருந்து மீண்ட நியூயார்க் பெண்: தொப்புள் கொடி ஸ்டெம் செல் சிகிச்சையில் இன்னொரு மைல்கல்!

நியூயார்க்: எச்ஐவி தொற்றிற்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் நிரந்தர குணமளிக்க முடியும் என அண்மையில் விஞ்ஞானிகள் நிரூபித்தனர். ஏற்கெனவே இருவர் இந்த முறையில் குணமடைந்த நிலையில் மூன்றாவதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார். உலகிலேயே எச்ஐவி பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண்ணுக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. போன் மேரோ எனப்படும் எலும்பு மஞ்சை சிகிச்சை … Read more