NeoCov வைரஸ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலா?- உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

ஜெனீவா: சீன விஞ்ஞானிகள் கண்டறிந்து குறிப்பிட்டுள்ள ‘நியோகோவ்’ என்ற வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள், கரோனா குடும்பத்தைச் சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற வைரஸ் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கை https://www.biorxiv.org/அறிவியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ‘வவ்வால்களிடம் நியோகோவ் என்ற கரோனா வைரஸ் காணப்படுகிறது. நியோகோவ் வைரஸில் ஒரு மரபணு … Read more

பிப்ரவரி 16: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,40,531 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது? – கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வாதம்

பெங்களூரு: ‘வளையல்கள் உள்ளிட்ட 100 அடையாளங்களை அணிந்துகொண்டு மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு வருகிறார்கள். ஆனால், அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது?’ என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி இஸ்லாமிய மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்லாமிய … Read more

பிடிஎஸ் குழு குறித்து சர்ச்சை கருத்து: அமெரிக்க டிவி தொகுப்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு

நியூயார்க்: பிரபல பிடிஎஸ் இசைக் குழு குறித்து இன ரீதியாக அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த இசைக் குழுவான பிடிஎஸ், உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. இக்குழுவில் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும், காமெடி நடிகருமான ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் பேசும்போது, 90-களிலிருந்து அறிமுகமான பல்வேறு இசைக் குழுகளை பற்றி கூறிவிட்டு … Read more

இறுதிக்கட்ட பணியில் சீமை கருவேல மரங்களை அழிக்கும் திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சீமை கருவேலம் மரங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பொதுத்தளத்தில் இதுகுறித்து வெளியிடப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்த … Read more

9 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ஜல் ஜீவன் இயக்கம் வாயிலாக 9 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜல் ஜீவன் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குழாய் நீரை வழங்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில், கோவிட்-19 தொற்றுநோய் பரவல் மற்றும் ஊரடங்கு போன்ற இடையூறுகள் இருந்தபோதிலும், இரண்டரை ஆண்டுகளில், ஜல் ஜீவன் திட்டத்தின் … Read more

உக்ரைனில் அடுத்த மாதம் ரஷ்யா படையெடுக்கும்: ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைனில் அடுத்த மாதம் ரஷ்யா படையெடுக்கும் வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனின் எல்லையில் ரஷ்யா நிறுத்தியதால் ரஷ்யா – உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்தன. ஆனால், இதனை ரஷ்யா மறுத்து வருகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன் பேசும்போது, “பிப்ரவரி மாதம் உக்ரைனில் ரஷ்யா படை எடுக்கும் … Read more

புதுச்சேரியில் விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கும்: ஆளுநர் தமிழிசை உறுதி

புதுச்சேரி: “புதுச்சேரியில் விமான சேவை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும்” என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் 126-ம் ஆண்டு மாசிமக கடல்தீர்த்தவாரி உற்சவம் இன்று (பிப். 16) நடைபெற்றது. இதில் புதுச்சேரி மணக்குள விநாயகர், காந்தி வீதி காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலிருந்து 70-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள், நேற்று வைத்திக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு, கடல் தீர்த்தவாரி உற்சவத்தில் … Read more

பஞ்சாப் தேர்தலில் விவாதப் பொருளாகும் சீக்கிய தலைப்பாகை; பிரியங்கா சரமாரி கேள்வி

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு சீக்கிய தலைப்பாகை விவாதப் பொருளாக மாறியுள்ளது. தலைப்பாகை கட்டி விட்டால் நீங்கள் சீக்கியர்கள் ஆக முடியுமா? என பிரதமர் மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டவர்களை பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது. பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த … Read more

சஹர் கோடயாரியால் எற்பட்ட மாற்றம்: 3 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்தாட்டத்தை கண்டு களித்த ஈரான் பெண்கள்!

தெஹ்ரான்: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஈரான் – இராக் இடையே நடந்த கால்பாந்தாட்ட போட்டியைக் காண பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டி தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் ஈரான் – இராக் ஆகிய நாடுகள் பங்கெடுத்தன. இப்போட்டி ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சுமார் 10,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 1000 டிக்கெட்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இப்போட்டியை பெண்கள் … Read more