பிரச்சாரக் களத்தில் ஒதுங்கும் முக்கிய நிர்வாகிகள்: கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள்

மதுரை: மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூவுடனான கோஷ்டி பூசலால் ஒதுங்கி நிற்கும் மாநகர முக்கிய நிர்வாகிகள் கடைசி நேரத்தில் ஏதாவது உள்ளடி வேலைப்பார்பார்களோ என்ற கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். மதுரை மாநகராட்சி அதிமுக மேயராக 2011-2016-ம் ஆண்டு வரை விவி.ராஜன் செல்லப்பா இருந்தபோது, மாநகர செயலாளராக இருந்த செல்லூர் கே.ராஜூ அமைச்சராகவும் இருந்தார். அதனால், மாநகர அதிமுகவில் இருவரும் இரு பெரும் கோஷ்டியாக செயல்பட்டனர். மாநகரத்தில் நடந்த மாநகராட்சி விழாவுகளுக்கு மேயர் … Read more

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி மாணவிகளுக்கு பல மாவட்டங்களில் அனுமதி மறுப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பல மாவட்டங்களில் ஹிஜாப் அணிந்து வந்ததன் காரணமாக மாணவிகளுக்கு வகுப்புக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஹிஜாப்பை நீக்கிய பிறகே மாணவிகள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மாண்டியாவில் ரோட்ரி சோசைட்டி பள்ளியில் புர்கா அணிந்து வந்த ஆசிரியர்களும், புர்காவை … Read more

அமெரிக்காவின் அச்சுறுத்தலை கேட்டு பின்வாங்கப் போவதில்லை: ரஷ்யா

வாஷிங்டன்: ‘அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் கேட்டு நாங்கள் பின்வாங்கப் போவதில்லை’ என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனின் எல்லையில் ரஷ்யா நிறுத்தியதால் ரஷ்யா – உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்தன. உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால், ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று திங்கள்கிழமை அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள ரஷ்யா … Read more

அனுதாபத்தில் வாக்களிக்காதீர்… என் 10 ஆண்டு சேவையை பாருங்கள்! – மதுரையில் மாற்றுத்திறனாளி அதிமுக வேட்பாளர்

மதுரை: அனுபதாபத்தை உருவாக்கி கட்சியில் ‘சீட்’ பெறுவது, அதையே மூலதனமாக கொண்டு தேர்தலில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களுக்கு மத்தியில் மதுரை திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 26-வது வார்டு அதிமுக வேட்பாளர் கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி எஸ்.செல்வராஜ் சற்று வித்தியாசமானவர். வாக்காளர்களிடம் தவிழ்ந்து சென்று ஆதரவு கேட்கும் இவர், ‘‘நான் இப்படியிருப்பதால் அனுதாபத்தில் யாரும் வாக்களிக்க வேண்டும். எந்த பதவியும், அதிகாரமும் இல்லாமல் கடந்த 10 ஆண்டாக நமது பகுதியில் செய்த என்னுடைய சமூகப்பணியைப்பார்த்து வாக்களியுங்கள்,’’ … Read more

விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சிங் சித்து உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில் தொடர்புடைய பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றியவர் பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து. இவர்தான் ஒரு பகுதி விவசாயிகளைத் தூண்டி ஊர்வலத்தில் மாற்றங்கள் செய்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. … Read more

 லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை: ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டா: “லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது, “இந்த கரோனா காலம் அனைவரையும் வெறுப்படைய செய்துள்ளது. நாம் இன்னமும் கரோனாவுக்கு எதிரான போரில் வெல்லவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக நாட்டின் தலைநகரில் போராட்டம் நடத்தும் சிலரின் நடவடிக்கையால் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் கனடா பயப்படவில்லை. இந்த நடத்தைக்கு கனடாவில் இடமில்லை. நான் மிகவும் தெளிவாக இருக்க … Read more

'கோட்டையில் பணிகள், கரோனா கட்டுப்பாடுகள்…' – காணொலி பிரச்சாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“நான் கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, காணொலி வழியாகப் பரப்புரை செய்வதை சிலர் குறை சொல்கிறார்கள்; விமர்சனம் செய்கிறார்கள். நான் நேரடி பரப்புரை செய்தால், கூடுகின்ற கூட்டத்தை பார்த்து இவர்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும்” என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி வாயிலாக அவர் இன்று ஆற்றிய உரை: காவிரியில் தமிழ்நாட்டின் … Read more

'இருசக்கர வாகனங்களில் வந்த எருமைகள், பசு மாடுகள்' – லாலுவின் கால்நடை ஊழல் வழக்கில் 'அசரடிக்கும்' அம்சம்!

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனரான லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இதில், ஹரியானாவிலிருந்து பிக்கு எருமைகளும், பசுமாடுகளும் இரண்டு சக்கர வாகனங்களில் வந்திருப்பதாக குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பிஹாரின் முதல்வராக இருந்த லாலுவின் ஆட்சியில் கால்நடை தீவன வழக்குகள் பதிவானது. இதனால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த லாலு மீதான ஊழல் வழக்குகள் ஜார்க்கண்டின் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. ஜார்க்கண்டின் ராஞ்சியிலுள்ள சிபிஐ விசாரித்தவற்றில் … Read more

அதிவேகமாகப் பரவும் உருமாறிய ஒமைக்ரான் 57 நாடுகளில் கண்டுபிடிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்ட உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 57 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 10 வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2021 நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்டது. இதற்கு BA.1 என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இப்போது உலகளவில் உள்ள 96% தொற்றுக்கு BA.1, BA.1.1 திரிபுகளே காரணமாக உள்ளன. இதுதவிர BA.2, BA.3 கண்டறியப்பட்டன. ஆனால் இப்போது BA.2 திரிபு அதிகமாகப் பரவிவருவதாக ஜிஐஎஸ்ஏஐடி அமைப்பு … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு

சென்னை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. குழந்தைகளைத் தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல், சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தஞ்சாவூர்‌ பள்ளி மாணவி தற்‌கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம்‌ அனுமதி அளித்தது. சிபிஐ விசாரணைக்கு தடை கோரிய தமிழக அரசின்‌ கோரிக்கையை ஏற்க மறுத்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது‌. தஞ்சாவூர்‌ … Read more