11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடலோர பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 18-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் … Read more

உ.பி.யில் திருமண விழாவில் சோகம்; இரும்பு வலை உடைந்ததால் கிணற்றில் விழுந்து பெண்கள், குழந்தைகள்: 13 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் திருமண விழாவின் போது கிணற்றில் மேல் போடப்பட்ட இரும்பு வலை உடைந்ததால் அதன் மீது அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் 13 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட் டத்தில் உள்ள நெபுவா நவுராங்கியா என்ற கிராமத்தில் நேற்று ஒரு திருமண விழா நடந்தது. திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்டி’ எனும் சடங்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அங்கிருந்த பெரிய கிணறு ஒன்றின் மீது இரும்பு வலையுடன் … Read more

பிரேக்த்ரூ தொற்றால் உடலில் வலுவான ஆன்டிபாடி உருவாகிறது: ஆய்வில் தகவல்

கரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவதை பிரேக்த்ரூ தொற்று என மருத்துவ உலகில் கூறப்படுகிறது. ஆனால், இந்த பிரேக்த்ரூ தொற்று ஏற்படுபவர்களுக்கு உடலில் வலுவான ஆன்டிபாடி உருவாகிறது எனக் கூறுகிறது ஓர் ஆய்வறிக்கை. ஜர்னல் செல் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை பிரசுரமாகியுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்களே இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். கரோனா ஒரிஜினல் வைரஸைவிட டெல்டா, ஒமைக்ரான் திரிபுகள் அதிகமான பரவும் தன்மையும், எதிர்ப்பாற்றலை மீறி தாக்கும் திறனும் … Read more

பிப்ரவரி 17: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,41,783 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 30,757: கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட சற்றே அதிகம். தொற்றின் காரணமாக 541 பேர் உயிரிழந்துள்ளனர்.அன்றாட பாதிப்பு குறைந்துள்ளதால் மாநிலங்கள் கரோனா கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் … Read more

மைக்கில் தரக்குறைவாக திட்டிய அமெரிக்க அதிபர் பைடன்: 'கூலாக' கையாண்ட நிருபர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முன் இருந்த மைக் செயல்பாட்டில் இருப்பதை உணராமல் செய்தியாளரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பைடன் பேசியவை இணையத்தில் வெளியாகி வைரல் செய்தியாகியுள்ளது. இந்நிலையில், அதிபர் தன்னை விமர்சித்த விஷயத்தை மிகுந்த நிதானத்துடன் கையாண்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் அந்தப் பத்திரிகை நிருபர். Biden: What a stupid son of a bitch pic.twitter.com/K8H74Vfv8m — Acyn (@Acyn) January … Read more

உள்குத்து அரசியல் ஏராளம் – மதுரை மாநகராட்சியில் முந்துவது யார்?

மதுரை: மதுரை மாநகராட்சியில் இன்று மாலையுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இதுவரை நடந்த பிரச்சாரம், தேர்தல் வியூகம் அடிப்படையில் இங்கே முந்துவது யார்? – இதோ ஒரு பார்வை. தமிழகத்தின் தொன்மை நகரம், பண்பாட்டுத் தலைநகரமாக திகழும் மதுரை மாநகரம், மாநகராட்சியாகி 50 ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஆனால், நகரின் அடிப்படை வசதிகள் முழுமையாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நகரின் சாலைகள், குண்டும், குழியுமாக கோடை காலத்தில் புழுதி பறந்தும், மழைக் காலத்தில் தெப்பம்போல் தண்ணீர் நிறைந்தும் … Read more

காஷ்மீர் புலனாய்வு பிரிவு சோதனையில் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பின் 10 ‘ஸ்லீப்பர் செல்கள்’கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு திரைமறைவில் உதவி செய்பவர்களை கண்டறிதல் மற்றும் பிரிவினைவாத குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் வகையில் மாநில புலனாய்வு ஏஜென்சி (எஸ்ஐஏ) என்ற தனிப் பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் காஷ்மீரின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக உதவி வந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர். … Read more

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள்: ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் ஜோ பைடன் ஆலோசனை

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் ஒரு … Read more

திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிய மனு தள்ளுபடி

மதுரை: திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 5 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்சி தென்னூரைச் சேர்ந்த ஏ.ரிஸ்வான் ஹூசேன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 4-வது பெரிய நகரம் திருச்சி. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்சி மாநகருக்குள் வர 11 வழித்தடங்கள் உள்ளன. திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ஒரு இடத்திலிருந்து … Read more