உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் அரசியல் ஆதாயம் தேடும் தமிழக அரசு: பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

சென்னை: உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும்விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காகவே எம்.பி., எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். வானொலியில் பிரதமர் மோடி நிகழ்த்திய ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) உரைகளை தொகுத்து, தமிழில் ‘மனதின் குரல்’ என்ற பெயரிலேயே 5 தொகுதி நூலை செந்தில் பதிப்பகம் உருவாக்கியுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நடந்து வரும் புத்தகக் காட்சியில் நேற்று நடைபெற்றது. நூலை … Read more

உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் சவப்பெட்டி வைக்கும் இடத்தில் 10 பேர் அமர முடியும்: கர்நாடக பாஜக எம்எல்ஏ பேச்சால் பெரும் சர்ச்சை

பெங்களூரு: உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் சவப்பெட்டியை விமானத்தில் வைக்கும் இடத்தில் 10 பேர் அமர முடியும் என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். க‌ர்நாடக மாநிலத்தின் ஹாவேரி பகுதியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன் (22) கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் போரில் உயிரிழந்தார். உணவுப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று வரிசையில் காத்திருந்த போது தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாயின. அவரது பெற்றோர் தங்களது மகனின் உடலை … Read more

ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தவறாக சித்தரித்தால் 15 ஆண்டுகள் சிறை: புதின் சட்டம்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தவறாக சித்தரித்தால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிபர் புதின் ஒப்புதலுடன் உடனடியாக சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று (மார்ச் 5) பத்தாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யா பொதுமக்கள் உயிருக்கு குந்தகம் விளைவித்து போர்க் குற்றம் புரிந்துவருவதாக அந்நாட்டின் மீது உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. மேலும், … Read more

சென்னை உட்பட 21 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர்கள் பதவியேற்றனர்: சில நகர்ப்புற உள்ளாட்சிகளில் மறைமுக தேர்தல் தள்ளிவைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் நடந்த மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மேயர்,துணை மேயர்களாக பதவியேற்றுக்கொண்டனர். சில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், கடந்த 2-ம் தேதி அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சிகளில்மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர்,துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. … Read more

ஸ்திரமான எரிசக்தி வளங்கள் மூலம்தான் நிலையான வளர்ச்சி சாத்தியம்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அளவுக்கு பசுமை எரிசக்தி வளங்கள் உள்ளன. பிற நாடுகளுக்கு ஹைட்ரஜன் எரிசக்தியை வழங்கும் கேந்திரமாக மாறும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது. நாட்டில் இயற்கையாக அமைந்த சாதக அம்சங்களை பயன்படுத்தி ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியும் என்று பிரமதர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொளி கருத்தரங்கில் அவர் பேசியதாவது: நிலையான வளர்ச்சியை சீராக எட்ட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் இலக்காகும். இத்தகைய ஸ்திரமான வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் நிலையான எரிசக்தி வளங்கள் … Read more

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் அமெரிக்க உறவை துண்டித்தது ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே 2-வது சுற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் இன்ஜின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி … Read more

ரூ.564 கோடி மோசடி; பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகி கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: ரூ.564 கோடி மோசடி செய்த தாக பிரபல நிலக்கரி நிறுவன நிர்வாகியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகி அகமது ஏ.ஆர் புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் பண மோசடி செய்ததாக கடந்த 2018-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. குறிப்பாக 2011-12 மற்றும் 2014-15-ம் ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட … Read more

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதியில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் சுமார் 22 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 85 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். சுமார் 15 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பின்னணியில் பாகிஸ்தானின் பெஷாவர் நகர், கோச்சா … Read more

உக்ரைன் அணு மின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது: போரை நிறுத்த இந்தியா வேண்டுகோள்

கீவ்: உக்ரைனின் மிகப்பெரிய அணு மின்நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. செர்னிஹிவ் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் வீசிய குண்டுகளில் 47 பேர் உயிரிழந்தனர். போர் தீவிரமடைந்திருப்பதால் உக்ரைன் அதிபர் ஜெலன்கிபோலந்தில் தஞ்சமடைந் திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் நேற்று 9-வது நாளாக நீடித்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள், போலீஸ் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் நேற்று குண்டுகளை … Read more

ஆரணி நகராட்சி துணைத் தலைவர் பதவி: திமுக அணி கவுன்சிலர்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றி; காங்கிரஸ் தோல்வி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால், காங்கிரஸ் தோல்வி அடைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் 15 வார்டுகளை அதிமுகவும், 12 வார்டுகளை திமுகவும், தலா 2 வார்டுகளை காங்கிரஸ் மற்றும் மதிமுகவும், தலா ஒரு வார்டில் சுயேச்சை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் … Read more