மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு காட்சிப்படுத்தப்படும் குடியரசு தின அலங்கார ஊர்திகள்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பும் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி கூறியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் … Read more

சென்னை பக்தரின் உயில்படி நன்கொடையாக ஏழுமலையானுக்கு ரூ.9.2 கோடி: தேவஸ்தானத்திடம் உறவினர்கள் வழங்கினர்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னை பக்தர் ரூ.9.2 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர். பர்வதம் (76). திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், தனக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 2 வீடுகள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.3.2 கோடி பணத்தை ஏழுமலையானுக்கு சேர வேண்டுமென உயில் எழுதி வைத்திருந்தார். டாக்டர் பர்வதம் தற்போது பர்வதம் காலமானதையடுத்து, சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் அவரது சகோதரி ரேவதி மற்றும் … Read more

மாறும் சவுதி… ரயில் ஒட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

ரியாத்: சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து அரபு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், “கடந்த ஓர் ஆண்டாக அதிவேக ரயில்களை இயக்க விருப்பமுள்ள பெண்களுக்கு சவுதி பயிற்சி அளித்தது. இதன் அடிப்படையில் தற்போது பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெண் ரயில் ஓட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். பழமைவாதங்களும், கட்டுப்பாடுகளும் நிறைந்த சவுதியில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை விளம்பரப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி … Read more

அஞ்சல்துறை தபால் பிரிக்கும் பணி: 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்- சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

மதுரை: அஞ்சல்துறை; தபால் பிரிக்கும் பணிக்கு தேர்வானவர்களில் 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.தேர்வுகள் மையப்படுத்தப்படாமல் மாநில அளவில் நடத்தப்பட வேண்டும்.இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அஞ்சல் துறையில் தமிழ் நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக 10.02.2022 வெளியிடப்பட்டுள்ள 946 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலின் நிலைமை … Read more

2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

அகமதாபாத்: 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 21 குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 70 நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்தது. இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஹர்கத் உல் … Read more

மண்டை ஓட்டுக்குள் சிப்: எலான் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனத்தால் 15 குரங்குகள் உயிரிழப்பு

குரங்குகளின் மண்டை ஓடுக்குள் சிப் வைத்து சோதனைக்கு உள்ளாக்கியதில் 15 குரங்கள் இறந்ததாக வெளியான செய்தியை எலான் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் வகையில் கடந்த 2017-இல் நியுராலிங் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியிருந்தார். நியூரோலிங்க் நிறுவனம் குரங்குகளின் மண்டை ஓடுக்குள் சிப் வைத்து சோதனைக்கு உட்படுத்தியது. நியூரோலிங்கின் இந்தச் சோதனைகள் 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டுவரை நடந்து வந்தது. சுமார் 23 குரங்குகள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. கடந்த … Read more

நடப்பாண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கை: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: நடப்பாண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது: “நடப்பாண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டி 100 மாணவர்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ராமநாதபுரத்தில் 150 மாணவர்கள் வரை தங்கி … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 25,920: கோவாவில் 100% மக்களுக்கு இருதவணை தடுப்பூசி செலுத்தி சாதனை

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றின் காரணமாக 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நாட்டிலேயே முதல் மாநிலமாக கோவா மாநிலத்தில் 100% மக்களுக்கும் இரு தவணை தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 2.07 … Read more

கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலான் மஸ்க்: குவிந்த கண்டனங்களால் ட்வீட் நீக்கம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு பதிவிட்ட ட்வீட்டை நீக்கினார் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமாவார். முன்னதாக, கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் 29-ம் … Read more

பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு: பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் போலீஸார் ஈடுபடுகின்றனர்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இவற்றில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடக்கிறது. அரசியல் கட்சிகள் அடிப்படையில் நடக்கும் … Read more