செய்தித் தெறிப்புகள் @ மே 17: மோடியின் ‘ராமர் கோயில் வார்னிங்’ முதல் கேஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை

‘காங். ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயில்…’ : “சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘ராம் லல்லா’வை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்புவார்கள். ராமர் கோயில் மீது புல்டோசரை ஏற்றுவார்கள். எங்கே புல்டோசரை ஏற்ற வேண்டும், எங்கே ஏற்றக்கூடாது என்பது குறித்து அவர்கள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பாடம் படிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மரக்காணம் கோயில் திருவிழாவுக்கு மீண்டும் தடை: உயர் நீதிமன்ற … Read more

“நான் என்ன நினைக்கிறேனோ அதை பிரதமர் பேசுவார்” – ராகுல் காந்தி கிண்டல் @ ரேபரேலி

ரேபரேலி (உத்தரப் பிரதேசம்): தான் விரும்பபவற்றை எல்லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் இன்று (மே 17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது: நான் என்னவெல்லாம் விரும்புகிறேனோ பிரதமரை அதை என்னால் பேச செய்யமுடியும். அதானி – அம்பானியின் பெயரை நரேந்திர மோடி உச்சரிக்கவே மாட்டார் என்று … Read more

இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க திமுகவில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை அதிகரிக்க முடிவு

சென்னை: இளைஞரணி மாவட்ட செயலாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுகவில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை, நிர்வாக ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. அதிகபட்சம் 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த மாவட்டங்கள் அமைகின்றன. பெரும்பாலும், மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மூத்த நிர்வாகிகள் செயலாளர்களாக உள்ளனர். அந்தந்த மாவட்ட அளவில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கட்சிப்பணிகளை மேற்கொள்வது, தேர்தலின் போது அதற்கான பணிகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

டெல்லியில் கன்னையா குமார் மீது தாக்குதல்: பாஜக வேட்பாளர் மீது குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் மீது பாஜக வேட்பாளர் அனுப்பிய ஆட்கள் தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் வேட்பாளர் கண்ணையா குமார் குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் காண்கிறார் கன்னையா குமார். டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளில் ஒன்றான இதில், பாஜக சார்பில் இரண்டு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ … Read more

“ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறுவதில் தவறு இல்லை!” – செல்வப்பெருந்தகை

கோவை: ”காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் எனக் கூறுவதில் தவறு இல்லை” என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். கோவை சிந்தாமணிபுதூரில் கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டமும், கணபதியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டமும் இன்று (மே 17) மாலை அடுத்தடுத்து நடந்தது. இதில், கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டங்களில் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா … Read more

“யோகியின் ‘புல்டோசர்’ இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” – மோடிக்கு பதிலடி கொடுத்த ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர்’ தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இண்டியா கூட்டணியினர் புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் என்பதை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், யோகியின் … Read more

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து இல்லை: மின்வாரியம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் ஒரே இணைப்பாக இணைக்கப்படுவதுடன், இணைக்கப்பட்ட இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட … Read more

‘‘எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்… அவர் ஏமாற்ற மாட்டார்’’ – சோனியா காந்தி @ ரேபரேலி

ரேபரேலி (உத்தரப் பிரதேசம்): “எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்… அவர் ஏமாற்ற மாட்டார்” என்று ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் இன்று (மே 17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதியின் தற்போதைய எம்பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்களுடன் இருக்கும் … Read more

கார்ப்பரேட் நிறுவன தேவைக்காக தண்ணீர் திறப்பு: அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

உடுமலை: மக்களின் குடிநீர் தேவைக்காக என்ற பொய்யான காரணத்தை கூறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. அதில் தற்போது 37 அடி உயரம் தான் தண்ணீர் உள்ளது. இதிலும் 22 அடி உயரத்துக்கு வண்டல் மண் தான் தேங்கி உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர் மட்டம் … Read more

“தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தோரின் நிலை…” – ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய தொழிற்கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒப்பந்தங்கள் அவமதிக்கப்பட்டதாலும், சட்டத்தின் ஆட்சி புறக்கணிக்கப்பட்டதாலும் நிலத்திலும் கடலிலும் புதிய பதற்றங்களை ஆசியா காண்கிறது. இந்தச் சூழலில், தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ள நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாத … Read more