முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தலைவர்கள் புகழாரம்: தமிழக பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்

சென்னை: முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 99-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: சிறந்த தொலைநோக்கு பார்வையாளர், புகழ்பெற்ற அரசியல் தலைவர், சிறந்த எழுத்தாளர், கவிஞர், ஈர்க்க வைக்கும் பேச்சாளர் என பன்முகத் திறனுடன் திகழ்ந்த வர்வாஜ்பாய். பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். இந்தியாவை முன்னேற்ற வைக்கும் அவரது பார்வை, வளர்ச்சி அடைந்த … Read more

கொட்டித் தீர்த்த அதிகனமழை.. அரசியலான அறிவியல்: வானிலை சேவையில் நாம் எங்கே இருக்கிறோம்?

சென்னை: தமிழகத்தின் மறக்க முடியாத பேரிடர் ஆண்டாக 2023 அமைந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, புறநகரிலும், 3-வது வாரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் பரவலாக அதிகனமழை பெய்தது. புதிய வரலாற்றை படைத்த இரு பேரிடர்களும், அவற்றால் ஏற்பட்ட துயரங்களின் வடுக்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனங்களில் இருந்து மறையாது. இவ்விரு பேரிடர்களின்போதும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை பணிகள் திருப்தி இல்லை என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக உள்ளது. ஆனால், முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் வானிலை … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர், உணவு வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கொச்சி: ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சபரிமலை செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெரிசலை குறைக்க … Read more

இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து

பெத்லகேம்: உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. பெத்லகேம் நகரில் மாட்டுத் தொழுவத்தில் மரியாள், இயேசுவை பெற்றெடுத்தார் என்று இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மத சான்றோர் குறிப்பிட்டு உள்ளனர். அந்த இடத்தில் கிரேக்க மன்னர் கான்ஸ்டன்டைன் ஏற்பாட்டின் பேரில் கடந்த 333-ம் ஆண்டில் தேவாலயம் கட்டப்பட்டது. சமாரியர் கலகத்தின்போது அந்த தேவாலயம் அழிக்கப்பட்டது. பின்னர் ரோம மன்னர் முதலாம் ஐஸ்டீனியன் … Read more

ஓ.எம்.ஆரில் ஓடிய வெள்ளத்தால் மூழ்கிய தையூர் தரைப்பாலம் உயர்மட்ட பாலமாகுமா?

தையூர்: கேளம்பாக்கம் அருகே தையூரில் பழைய மகாபலிபுரம் சாலை (ஒ.எம்.ஆர்) மழைக்காலத்தில் வெள்ளம் வரும் போது, தரைப்பாலத்தில் போதிய தண்ணீர் செல்ல வழியில்லாததால், சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிதாக அமைக்கப்பட்டு வரும் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்வதற்காக, ஓ.எம்.ஆரில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்தால் தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். … Read more

வறட்சி நிவாரண நிதி கேட்க‌ சொகுசு விமானத்தில் சித்தராமையா சென்றது ஏன்? – கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கேள்வி

பெங்களூரு: ‘‘வறட்சி நிவாரண நிதி கேட்பதற்கு சொகுசு விமானத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா சென்றது ஏன்?’’ என அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த 20ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது கர்நாடகா வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 17 ஆயிரம் கோடியை நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோவை கர்நாடக அமைச்சர் ஜாஹிர் அகமது நேற்று … Read more

மூத்த குடிமக்களின் புகாருக்கு வீடு தேடி சென்று தீர்வு – சென்னை காவல் ஆணையர் அணுகுமுறைக்கு வரவேற்பு

சென்னை: மூத்த குடிமக்கள் புகார் அளித்த அன்றே, அவர்களின் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகளை அனுப்பி, பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் சென்னை காவல் ஆணையரின் அணுகுமுறை வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட அனைத்து வகையான குற்றச்செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் … Read more

நாடாளுமன்றத்தில் அத்துமீறல் முக்கிய குற்றவாளி லலித் ஜாவின் காவல் ஜனவரி 5-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த 2001-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் நினைவு தினம் டிசம்பர் 13-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் எம்.பி.க்களின் இருக்கையில் எகிறி குதித்து வண்ண புகை குப்பிகளை வீசி எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதேநேரம், நாடாளுமன்றத்துக்கு வெளியே நீலம் மற்றும் அமோல் ஆகிய இருவர் அதேபோன்ற வண்ண புகை குப்பிகளை வீசி கோஷங்களை எழுப்பினர். இதனால், நாடாளுமன்றத்தில் … Read more

ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனுக்கு தமிழக காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி

சென்னை: ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார். 1935-ம் ஆண்டு பிறந்த ராஜேந்திரன் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். 1957-ம் ஆண்டு … Read more

சத்தீஸ்கர் அமைச்சரவை விரிவாக்கம்: முதல் முறை எம்எல்ஏ.க்கள் 3 பேர் உட்பட 9 பேர் பதவியேற்பு

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று கடந்த 13-ம் தேதி ஆட்சி அமைத்தது. முதல்வராக விஷ்ணு தியோ சாயும், துணை முதல்வர்களாக அருண் ஷா மற்றும் விஜய் சர்மா ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது. இதில் முதல் முறை எம்எல்ஏ.க்கள் 3 பேர் உட்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலில் நுழைந்த ஓ.பி.சவுத்ரி, டேங்க் ராம் வர்மா, லட்சுமி ராஜ்வதே ஆகிய 3 பேரும் … Read more