மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி

இம்பால்: மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் டெங்னோபால் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 13 பேரும் உயிரிழந்ததாக பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புப் படை தரப்பில், “டெங்பால் மாவட்டம் சைபால் பகுதியில் உள்ள லெய்து கிராமத்தில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வந்தது. சம்பவப் பகுதியில் இருந்து 10 கிமீ தொலைவில் பாதுகாப்புப் படையினர் முகாம் ஒன்று இருந்தது. அந்த … Read more

சென்னையில் இன்று நள்ளிரவு வரை மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேசுகையில், “சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புயல் மேற்கு நோக்கி நகர்ந்துவிட்டது. தற்போது பழவேற்காடு அருகே உள்ள கடற்கரையில் மையம் கொண்டுள்ளது. மேலும் நகர்ந்து நெல்லூர் அருகே நாளை கரையைக் கடக்கிறது. இருப்பினும் மேற்கு மற்றும் தென் … Read more

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் | பாஜக கூட்டணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது ஜோரம் மக்கள் இயக்கம்

அய்ஸ்வால்: மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அங்கு ஆளும் பாஜக கூட்டணி ஆட்சியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றுள்ளது ஜோரம் மக்கள் இயக்கம். முன்னதாக, 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 70 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அந்த மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை … Read more

புயல், கனமழை மீட்புப் பணிகள் | 10 NDRF குழுக்கள் அனுப்பிவைப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 250 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 குழுக்கள் பெங்களூருவிலிருந்து வரவழைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட … Read more

சத்தீஸ்கரில் பாஜக வெற்றியால் நக்ஸல்களுக்கு சிக்கல்

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியில் அமர உள்ளது. இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் பாதுகாப்புக்கு அதிக அளவில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. முதல் முறையாக நக்சல்கள் ஆதிக்கம் உள்ள கிராமங்களில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த 12 தொகுதிகளில் 9 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘‘பஸ்தர் … Read more

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க அரசு அறிவுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை, வெள்ளம் என இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் நாளை டிச.5 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 4 மாவட்டங்களில் அரசுப் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. 90 கிமீ தொலைவில் … Read more

தெலங்கானா மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே

வட மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டு, வரும் மக்களவை தேர்தலுக்கு இண்டியா கூட்டணியுடன் இணைந்து தயாராவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட தகவலில் கூறியதாவது: தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் எங்கள் … Read more

“5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு தரும் செய்தி இதுதான்” – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை: ராகுல் காந்தியின் கொள்கைப் பாதையை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் மேற்கொள்வதன் மூலமே 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து மோடி ஆட்சியை அகற்ற முடியும். அதற்காக காங்கிரஸ் கட்சியினர் முழு வீச்சில் செயல்படுவது தான் 5 மாநில தேர்தல் தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு தருகிற செய்தி ஆகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட ஏமாற்றமளிக்கிற … Read more

2 முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக பிரமுகர்: தெலங்கானா அரசியலில் சுவாரஸ்யம்

தெலங்கானாவின் காமாரெட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவையும், தெலங்கானாவின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டியையும், பாஜக வேட்பாளர் வெங்கடரமணா ரெட்டி தோற்கடித்துள்ளார். தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் இது வரை நடந்த தேர்தல்களில் தோல்வியை சந்திக்காதவர். தெலங்கானா போராட்டத்தில் அவர் பல முறை தனது பதவிகளை ராஜினாமா செய்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். கஜ்வேல், சித்திப்பேட்டை ஆகிய தொகுதிகளில் சந்திரசேகர ராவ் போட்டியிடுவது வழக்கம். ஆனால், இம்முறை … Read more

சென்னையில் சமாளிக்க முடியாத வெள்ள பாதிப்புகள்; கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் 

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்தால் அதை சமாளிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அதிக அளவில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், … Read more