மூன்று கிரகங்களில் பெயர்ச்சி! ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார் ? நாளைய ராசிப்பலன்

மே மாதத்தில் புதன் பெயர்ச்சி (மே 10), சூரிய பெயர்ச்சி (மே 15), செவ்வாய் பெயர்ச்சி (மே 17), சுக்கிரன் பெயர்ச்சி (மே 23) போன்ற முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. இந்தப்பெயர்ச்சியால் ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும். அந்தவகையில் நாளைய நாள் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                … Read more

போர் பிரகடனமா? முற்றாக மறுத்த ரஷ்யா: வெளிவரும் பின்னணி

உக்ரைன் மீது உத்தியோகப்பூர்வ போர் பிரகடனம் முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக பரவும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா எதிர்வரும் மே 9ம் திகதி உக்ரைன் மீது போர் பிரகடனம் மேற்கொள்ளும் என்ற தகவல் வெளியாகியது. ஆனால், அவ்வாறான திட்டம் எதுவும் ரஷ்யாவுக்கு இல்லை எனவும், உக்ரைன் மீது முன்னெடுக்கப்பட்டு வருவது போர் அல்ல, சிறப்பு இராணுவ நடவடிக்கை மட்டுமே எனவும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது. ரஷ்ய செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov இந்த … Read more

உக்ரைன் இராணுவதளத்தில் சாத்தான் முத்திரை: உக்ரைன் வீரர்கள் மந்திரவாதத்தை பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றச்சாட்டு

உக்ரைனிலுள்ள பயன்பாட்டிலில்லாத இராணுவதளம் ஒன்றில் இருள் சக்திகளின் சாத்தான் முத்திரை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ரஷ்யா, உக்ரைன் வீரர்கள் மந்திரவாதத்தைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனிலுள்ள Luhansk பகுதியில் அமைந்துள்ள Trekhizbenka என்ற கிராமத்தின் வெளியே இருக்கும் கைவிடப்பட்ட இராணுவதளம் ஒன்றில் ஒரு முத்திரை வரையப்பட்டுள்ளது. இதுபோன்ற முத்திரைகளை இரத்தத்தால் வரையப்பட்டிருக்கலாம் என்றும், இது உக்ரைன் வீரர்கள் மந்திரவாதத்தைப் பயன்படுத்துவதைக் காட்டுவதாகவும் ரஷ்ய செய்தி ஏஜன்சி தெரிவித்துள்ளது. இருள் உலகின் சக்திகளின் சீடர்கள், தங்கள் ஆயுதங்கள் எதிரியைத் தாக்கும்போது, … Read more

சில விடயங்கள் எதிர்பாராத விதமாக நடக்கும்.. வன்கொடுமை குறித்து பெண் அமைச்சரின் சர்ச்சை கருத்து!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து பெண் அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை, கர்ப்பிணிப் பெண் ஒருவரை ரயில் நிலையத்தில் மூன்று பேர் கூட்டு வன்கொடுமை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இதற்கு முன், பால்நாடு மாவட்டத்தில் தனது குழந்தையுடன் ரயில் நிலையத்தில் இருந்த பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் … Read more

உக்ரைனில் கோரம்… வாகனங்கள் மீது மோதி எரிபொருள் டிரக் வெடித்து சிதறியதில் 26 பேர் பலி

 உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. உக்ரைனின் மேற்கில் இருக்கும் Rivne பகுதியில் உள்ள நெடுஞ்சாலையிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது. பேருந்து மற்றும் மினி பேருந்துடன் எரிபொருள் டிரக் மோதி வெடித்து சிதறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதில் 3 வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. பேருந்து போலந்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் 24 பயணிகள் மற்றும் பேருந்து,  மினி பேருந்தின் ஓட்டுநர்கள் … Read more

தகவல் தொடர்பை இழந்த மரியுபோல் ராணுவ வீரர்கள்: பரபரப்பு தாக்குதல் வீடியோ!

மரியுபோலின் இரும்பு ஆலைக்குள் நுழைந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைனின் ராணுவ படையினருடனான தகவல் தொடர்பை இழந்து இருப்பதாக அந்தப் பகுதியின் மேயர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுப்போலின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக முற்றுகையிட்டு இருந்த ரஷ்ய ராணுவத்தினர், தற்போது ஆலைக்குள் அதிரடியாக நுழைந்து உக்ரைன் ராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, இரும்பு ஆலையில் உக்ரைன் ராணுவம் நடத்திய மீட்பு நடவடிக்கையில், 100 மேற்பட்ட … Read more

ரஷ்யாவுடன் சேர்த்து பெலாரஸை எதிர்க்கவும் தயார்: உக்ரைன் பாதுகாப்பு செய்திதொடர்பாளர் அதிரடி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்கையில் பெலாரஸ் இணைந்தால், அவர்களையும் எதிர்க்க உக்ரைன் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் மாநில எல்லைப் பாதுகாப்பு படையின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம் உச்சகட்டத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் உக்ரைனின் மிக நெருங்கிய அண்டை நாடான பெலாரஸ், புதன் கிழமையான இன்று மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். இந்த ராணுவ பயிற்சியானது, வழக்கமான ராணுவ … Read more

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசியது போல ரஷ்யா உக்ரைன் மீது அணுகுண்டு வீசவேண்டும்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய ஊடகவியலாளர்

உக்ரைனுக்கு 40 நாடுகள் உதவுவதை நிறுத்தாவிட்டால், கடைசி நடவடிக்கையாக அணுகுண்டு வீசுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று கூறியுள்ளார் புடின் ஆதரவு ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவர். Alexander Sladkov என்னும் அந்த நபர், அமெரிக்கர்கள் ஜப்பான் மீது அணுகுண்டு வீசினார்கள், அவர்களைப் போலவே, ரஷ்யாவும் உக்ரைனில் அதை செய்து, நேட்டோ நாடுகளை அவமதிக்கும் வகையில் மற்ற 40 நாடுகளுக்கும் அதை செய்துகாட்டவேண்டும். எல்லாம் சாத்தியம்தான், அதை அமெரிக்கர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் கற்றுக்கொள்கிறோம் என்று கூறும் … Read more

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களை எதிர்த்து சண்டையிடும் இஸ்ரேலியர்கள்! வெளியுறவுத்துறை தகவல்

உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக இஸ்ரேலிய கூலிப்படையினர் சண்டையிடுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹிட்லர் யூத இரத்தம் என ரஷ்யா கூறியதை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. உக்ரைனில் அசோவ் போராளிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிடுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக்கத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்துள்ளார். அசோவ் படைப்பிரிவு ஒரு தீவிர வலதுசாரி, அனைத்து தன்னார்வ காலாட்படை இராணுவப் பிரிவாகும், அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் நியோ-நாசி சித்தாந்தத்தை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள். … Read more

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த 25 வயது இளம்பெண்! இந்த ஆச்சரியம் நினைவிருக்கா?

கடந்த 2021ஆம் ஆண்டு இதே நாளை உலகம் மறந்திருக்காது. ஏனெனில் உலகமே கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயைப் பற்றிய செய்தியும் பெரிய அளவில் பேசப்பட்டது. மாலி நாட்டைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸி, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 9 குழந்தைகளும் உயிருடன் ஆரோக்கியமாக இருந்தது ஆச்சரியத் தகவலாகப் பார்க்கப்பட்டதும். ஹலிமா சிஸ்ஸி என்ற 25 வயது பெண் 2020ஆம் ஆண்டு கர்ப்பமுற்றார். அவரை ஸ்கேன் … Read more