மாநிலங்களவை தேர்தல்- தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

சென்னை: டெல்லி மேல்-சபையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜஷே்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவ நீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற 29-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 6 டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். … Read more

திருப்பதியில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது

திருப்பதியில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கு திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகரித்தது. இதனால் பக்தர்கள் சுமார் 48 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் காத்திருப்பு அறையான வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டனர். திருப்பதியில் … Read more

தலைமைச் செயலகம் அருகே ஒருவர் தீக்குளிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்  பொன்னுசாமி. இவர் சுப்பிரமணி என்பவரிடம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தை திருப்பித் தரவில்லை.  இதனால் மனமுடைந்த பொன்னுசாமி பணத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம்  அருகே உள்ள பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் பொன்னுசாமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

கொரோனா தொற்றுக்கு பிறகு மோடிக்கு மக்கள் ஆதரவு 2 மடங்கு அதிகரிப்பு

புதுடெல்லி: நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பிரதமராக பதவி ஏற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ‘லோக்கல் சர்கிள்ஸ்’ என்ற அமைப்பு சுமார் 64 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் 67 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். … Read more

செல்லப்பிராணிகளுக்கும் ‘காப்பீடு’ செய்யலாம்

சென்னை: மனிதர்களை போலவே செல்ல பிராணிகளுக்கும் காப்பீட்டு திட்டங்கள் இருக்கிறது. ஆனால் சிலர் அவற்றை உபயோகப்படுத்துவதில்லை. அதன் பயன் தெரியாமல் தங்களுடைய செல்ல பிராணிகளுக்காக அதிகம் செலவிடுகிறார்கள். உங்களுடைய செல்ல பிராணிகளான நாய், பூனை உடல்நலம் பாதிக்கப்பட்டால் காப்பீடு மூலம் எளிதில் மருத்துவ சிகிச்சை பெற முடியும். தொலைந்து போனாலோ, திருட்டு போனாலோ காப்பீடு செய்வதன் மூலம் அதற்கான தொகையை பெற முடியும். ஆபத்தான நோய்களால் இறந்தாலும் காப்பீடு தொகையை பெறலாம். செல்ல பிராணிகளின் இனம், அளவு, … Read more

தென்மேற்கு பருவ மழை 103 சதவீதமாக இருக்கும்- இந்திய வானிலை மையம் தகவல்

புதுடெல்லி: தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந்தேதி அன்று தொடங்கும். ஆனால் 3 தினங்களுக்கு முன்னதாக கடந்த 29-ந்தேதி அன்றே கேரளாவில் பருவ மழை தொடங்கி விட்டது. நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுசூசய் மொகபத்ரா கூறியதாவது:- தற்போதைய தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் … Read more

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் … Read more

தடையை மீறி பா.ஜனதா பேரணி- அண்ணாமலை உள்பட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு

சென்னை: பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோட்டை நோக்கி பா.ஜனதா கட்சி பேரணி நடத்தியது. இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திரண்டு அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் சென்னையில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே போலீசார் … Read more

இந்த ஆண்டில் இந்தியாவில் யூ-டியூப்பில் இருந்து 11 லட்சம் வீடியோ நீக்கம்

புதுடெல்லி: பிரபல சமூக வலைதளமான யூ-டியூப்பில் இருந்து ஆட்சேபத்துக்குரிய வீடியோ நீக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 11 லட்சத்து 75 ஆயிரத்து 859 வீடியோக்கள் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்கம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் யூ-டியூப்பில் இருந்து அதிக வீடியோக்கள் நீக்கப்படுகிறது. யூ-டியூப் நிறுவனம் சமூக ரீதியில் அனுமதிக்கக்கூடாத வீடியோக்களுக்கான விதிகளை அமைத்து சமூக வழிகாட்டுதல் அமலாக்கம் மூலம் கண்காணிக்கிறது.

குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது

லண்டன்: கொரோனாவைத் தொடர்ந்து இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை மிரட்டி  வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.  கொரோனா போன்று குரங்கு அம்மையும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. … Read more