அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து.. கட்சியை பலவீனப்படுத்த முயல்கிறது பாஜக.. தமீமுன் அன்சாரி பேட்டி

Tamilnadu oi-Mani Singh S மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வை திட்டமிட்டு சீரழித்து கட்சியை பலவீனப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருவதாக மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வானதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி கலந்துகொண்டார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களை … Read more

மரபணு மாறிய கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் புதிய அச்சுறுத்தல்; WHO என்ன சொல்கிறது?

International oi-Halley Karthik ஜெனீவா: உலகம் முழுவதும் பல லட்சம் மனித உயிர்களை பலிவாங்கியுள்ள கொரோனா தொற்று குறித்து மேலும் ஒரு புதிய அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. Recommended Video உலகம் முழுவதும் தற்போதும் ஒவ்வொரு வாரமும் சுமார் 15,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்துள்ளது. இந்நிலையில் மரபணு மாற்றங்களை கொண்ட வேகமாக பரவும் கொரோனா தொற்று வைராஸ் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019ம் … Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு, மண் சரிவு – 5 மாநிலங்களில் சுமார் 50 பேர் பலியான சோகம்

India oi-Halley Karthik சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் 22 பேர் உயிரிழந்த நிலையில் ஒடிசா மற்றும் உத்தகாண்ட் மாநிலத்திலும் மழை தொடர்ந்து வருகிறது. Recommended Video இந்நிலையில் இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இந்த மூன்று மாநிலங்களில் சுமார் 50 உயிரிழந்துள்ளனர். பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத மழை காரணமாக பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் … Read more

தலித் இளைஞரை செருப்பால் தாக்கிய கிராமத் தலைவர்.. உ.பியில் கொடூரம்.. வெளியான பரபர வீடியோ

India oi-Jackson Singh முசாஃபர்நகர்: உத்தரபிரதேசத்தில் கிராமத் தலைவர் ஒருவர் தலித் இளைஞரை செருப்பால் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். Recommended Video வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தானில் உள்ள பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு தனது பானையில் தலித் சிறுவன் தண்ணீர் எடுத்து குடித்ததற்காக அவனை ஆசிரியர் மூர்க்கமாக தாக்கியதில் அவன் உயிரிழந்தான். இதேபோல, உத்தரபிரதேசத்தில் சில … Read more

காங். கில் தீவிர மோதல்.. இமாச்சல பிரதேச வழிகாட்டு குழு தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா ராஜினாமா

India oi-Halley Karthik சிம்லா: காங்கிரஸ் கட்சியின் இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவராக நியமிக்கப்பட்டிருந்த கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதே போல சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் பதவி விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள … Read more

அசாமில் 4 மணி நேரம் இணைய சேவை முடக்கம்.. எதற்காக என்பது தான் டிவிஸ்ட்!

India oi-Mani Singh S திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் நடந்த அரசுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்துவிடக்கூடாது என்பதற்காக 4 மணி நேரம் இணைய சேவையை துண்டித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு வேலை என்பது பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாகவே உள்ளது. இதற்காக கல்லூரி படிப்பை படித்து முடித்துவிட்டு பல ஆண்டுகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். அரசு வேலையை எப்படியாவது எட்டிவிட வேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் படித்து வருகின்றனர். வேலைவாய்ப்பும் குறைந்துள்ளதால் … Read more

வளர்ந்த நாடுகளில் இப்படியா இருக்கு.. 'கர்வா சௌத்' மூட நம்பிக்கை..ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

India oi-Mani Singh S ஜெய்பூர்: வளர்ந்த நாடுகளில் பெண்கள் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இன்னமும் சல்லடை வழியாக நிலவை பார்த்து தங்கள் கணவர் ஆயுள் விருத்திக்காக பெண்கள் வேண்டுவது துரதிருஷ்டவசமானது என்று ராஜஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இவரது அமைச்சரவையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக இருப்பவர் கோவிந்த் ராம் மேக்வால். கணவரின் நீண்ட ஆயுள் … Read more

அஸ்ஸாமில் மேலும் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் சிக்கினர்.. தொடரும் தீவிர தேடுதல் வேட்டை!

India oi-Mathivanan Maran குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த மேலும் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். அஸ்ஸாமில் பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்திருந்தன. அஸ்ஸா மாநில அரசும் இது தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் அஸ்ஸாமில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 11 பயங்கரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டது … Read more

\"அணு ஆயுதங்கள் இருக்கு.. எங்க ராணுவ பலம் தெரியுமா!\" காஷ்மீர் விவகாரம் குறித்தும் பாக். பிரதமர் பரபர

International oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக இப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லதொரு உறவு இருந்ததில்லை. எப்போதும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வரும். குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தைச் சொல்லலாம். இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரை தங்களுக்குச் சொந்தம் எனப் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருவதே இரு நாடுகளுக்கும் … Read more

இது பாஜகவின் மத பயங்கரவாதம்.. வேறென்ன ஆதாரம் தேவை? பாஜக தலைவர் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

India oi-Noorul Ahamed Jahaber Ali ஜெய்பூர்: பசு வதை செய்ததற்காக 5 பேரை நாங்கள் கொலை செய்து இருக்கிறோம் என்று ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஞான் தேவ் அஹுஜா பேசியுள்ள நிலையில், இது பாஜகவின் மத பயங்கரவாதம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. ராஜஸ்தானில் முந்தைய வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிகாலத்தில் ராம்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் ஞான் தேவ் அஹுஜா. அந்த … Read more