ஆகஸ்ட் 7: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமில்லை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 555 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து 78 ரூபாய் 30 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கருணாநிதி நினைவுநாள் பேரணியில் நடந்துசென்ற மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றுகாலை நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் பேரணியில் கலந்துகொண்டு நடந்து சென்ற திமுக மாமன்ற உறுப்பினர், திடீரென மயங்கி கீழே விழுந்து பலியானார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 5வது நினைவு தினம் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றருது.  இந்த பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையே நிரந்தர தீர்வு காண இந்தியா தயார்! அஜித் தோவல்

ஜெட்டா: ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியாவுக்கு  இதைவிட வேறு எதுவும் மகிழ்ச்சியைத் தராது என்று சவூதி அரேபியால் நடைபெற்ற உலக நாடுகள் பிரதிநிதிகளின் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்திருக்கிறார். நேட்டோவில்,  தங்களையும் இணைத்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்தது. இந்த போர் 2021  பிப்ரவரி மாதம்  தொடங்கிய நிலையில், … Read more

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது டெல்லி சேவைகள் மசோதா…

டெல்லி: டெல்லி பிரதேச அரசை கட்டுப்படுத்தும் டெல்லி சேவைகள் மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  இன்று  (ஆகஸ்ட் 7) ராஜ்யசபாவில் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2023ஐ அறிமுகப்படுத்துகிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பான்மை இருப்பதால், ஏராளமான மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றப்பட்டு வருகிறது.  தேசிய தலைநகரில் சேவைகளை … Read more

நிலவுக்கு நெருக்கமாகச் சென்று சந்திரயான்-3 எடுத்த முதல் படம்…. இஸ்ரோ வெளியிட்டது…

நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் சந்திரயான்-3 கடந்த ஜூலை மாதம் 14 ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. மார்க்-III ஏவுகணை வாகனம் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலவை நெருங்கிச் செல்ல ஆரம்பித்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசையை உணர்வதாக தகவல் அனுப்பியது. The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, … Read more

உத்தரப் பிரதேசத்தில் இரு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

சித்தார்த் நகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிலர் இரு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்ஹ்டு துன்புறுத்தி உள்ளனர். சித்தார்த் நகர் மாவட்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு திருட்டு சந்தேகத்தின் பேரில் 2 சிறுவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை தேய்த்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு சித்ரவதைக்கு ஆளான சிறுவர்கள் இருவரும் 10 மற்றும் 15 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இத்தகைய கொடூரமான செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. … Read more

ஒரு மணி நேரமாக சென்னையில் மின்சார ரயில் சேவை  பாதிப்பு

சென்னை சென்னையில் கடந்த ஒரு மணி நேரமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கிண்டி ரயில் நிலையம் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அமைந்துள்ளது.  இந்த ரயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது  எனவே மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த வளைந்த தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  … Read more

இன்று பாகிஸ்தானில் ரயில் விபத்து : 22 பேர் பலி

கராச்சி இன்று பாகிஸ்தானில் நடந்த ரயில் விபத்தில் 22  பேர் உயிரிழந்து 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று பாகிஸ்தானில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகியது.  இந்த விபத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் உள்ள இடத்தில்  நடந்துள்ளது. இதுவரை இந்த விபத்தில் 22 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த ஹசரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 … Read more

பதிவு கட்டணம் உயர்வு : அடுக்குமாடிக் குடியிருப்புகள் விலை அதிகரிப்பு

சென்னை பதிவு கட்டணம் உயர்ந்துள்ளதால் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.  இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு ரூ.50 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கும் நிலையில் விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் எனத் தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினால் போதுமானதாக … Read more

மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : ஒருவர் கைது

மும்பை மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து மும்பை புறநகர் ரெயிலில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார். காவல்துறையினர் உடனடியாக அந்த மொபைல் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். அந்த அழைப்பு மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  காவல்துறையினர் அங்கு சென்று மிரட்டல் விடுத்த நபரைக் … Read more