காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் – கர்நாடக காங்கிரஸ் துணைமுதல்வர் மீண்டும் முரண்டு…

சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வரான டி.கே.சிவகுமார், கர்நாடகா மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது போக, மீதம் இருந்தால்  தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு குருவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இல்லை. இதனால், கர்நாடக மாநில அரசு, தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய … Read more

முதல் முறையாகத் திருநங்கைக்குப் பிறப்பு சான்றிதழ் வழங்கிய ராஜஸ்தான்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாகத் திருநங்கைக்குப் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதல் முறையாகத் திருநங்கைக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா,இந்த பிறப்புச் சான்றிதழை வழங்கினார். இனி ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார். மேலும் திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். நூர் ஷெகாவத்தின் பாலினம் பிறப்பின் போது ‘ஆண்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நூர் ஷெகாவத் ஆங்கில … Read more

மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் : நடிகை குஷ்பு மீது அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம்

சென்னை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்புவை அமைச்சர் கீதா ஜீவன் மணிப்பூர் விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார். நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார்.  இவர் சமீபத்தில் தன்னைப் பற்றி ஆபாசமாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் பேட்டி அளித்தார்.   அதன்படி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தற்போது மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழக அமைச்சர் கீதா ஜீவன், ”இதயம் உள்ள … Read more

பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு

சென்னை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பாஜக தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இன்று சத்தியமூர்த்தி பவனில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார் செய்தியாளர்களிடம் இளங்கோவன், ”இந்தியாவில் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது இந்தியப் பிரதமர் மோடி வெளிநாடுகளில் உல்லாசப் பயணம் சென்று தலைவர்களைக் கட்டிப்பிடித்து உற்சாகமாக இருக்கிறார்.   இப்போது நாட்டில் … Read more

எதிர்க்கட்சிகள் அமளியால் திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டில்லி எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் புயலைக் கிளப்பியது.  இன்று மக்களவை கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எனவே மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பிறகு அவை கூடியதும் மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையொட்டி மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் வரும் திங்கட்கிழமை கூட … Read more

வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி

வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி நகரில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இப்பகுதியில் இந்தியத் தொல்லியல்துறை அறிவியல் பூர்வ கள ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை எழுப்பின. அந்த அமைப்புக்கள் இது குறித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த 14ஆம் தேதி இந்த … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ  பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3 ஆம் நீதிபதி கார்த்திகேயன் தமது விசாரணைக்குப் பின்பு, செந்தில் … Read more

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து பொதுமக்களால் சிறை பிடிப்பு

திருத்தணி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசுப் பேருந்தை திருத்தணி மக்கள் சிறை பிடித்து மறியல் செய்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திருத்தணிக்குப் பேருந்தில் சென்று படிக்கும் சூழல் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்ல பேருந்தைத்தான் நம்பி உள்ளனர். கடந்த சில நாட்களாகப் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முருகூர் பேருந்து நிறுத்தத்தில் … Read more

ரஜினியைத் தொடர்ந்து கமலஹாசன் நிறுவனத்தின் பெயரில் மோசடி : ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெயரில் மோசடி நடந்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக … Read more

மழைக் கால நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மருந்து கடைகளில் வலிநிவாரணிகள் விற்பனைக்கு கட்டுப்பாடு

டெல்லியில் மழைக்கால நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஆஸ்பிரின், ப்ரூபின், டைக்லோபினாக் உள்ளிட்ட வலி நிவாரணிகளை விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட தொற்று காய்ச்சல் பரவிவருவதை அடுத்து மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த வகை மாத்திரைகளை விற்க வேண்டாம் என்று மருந்து கடைகளுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வகை மருந்துகள் ரத்த பிளேட்டிலெட்டுகளை மேலும் சிதைக்கக் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.