பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி எனத் தீர்ப்பு

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், குற்றச்சதி, தேசத்துரோகம் உள்ளிட்ட பல பிரிவுகளில் யாசின் மாலிக் மீது தேசியப் புலனாய்வு முகமை குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றம், யாசின் மாலிக் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்தது. தண்டனை பற்றிய விவரம் மே 25ஆம் … Read more

திடீரென வண்டிக்குள் புகுந்த பாம்பு.. படம் காட்டியதால் படபடப்பான ஆசிரியர்..

திருப்பூர் மாவட்டம் வஞ்சிப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியரின் இருசக்கர வாகனத்தில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பை, பாம்பு பிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். ஆசிரியர் துரையரசன் பள்ளி முடிந்து தனது பைக்கை எடுக்க சென்ற  போது வண்டியின் முன்புறத்தில் நாகப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பாம்பு பிடி வீரர்கள் வரவழைக்கப்பட்டு பாம்பு பத்திரமாக பிடித்துச்செல்லப்பட்டது. பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

பெங்களூருவில் 24 மணி நேரமாகக் கொட்டி தீர்த்த கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீரில் மூழ்கின.!

பெங்களூருவில் 24 மணி நேரமாகக் கொட்டி தீர்த்த கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உல்லால் பகுதியில் உள்ள ஏரி அருகே காவிரி குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கனமழை பெய்து மழை வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் குழிக்குள் சிக்கிய அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில் ராஜராஜேஸ்வரி நகர், ஒசகெரஹள்ளி, கோரமங்கலா ஆகிய பகுதிகளில் மழையால் … Read more

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக, பாமக ஆதரவு

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தரக்கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னையில் பாஜக அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலையை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வைத்தியலிங்கம் ஆகியோர், ஆதரவு கோரி கடிதத்தை வழங்கினர். இதனை அடுத்து பேட்டியளித்த அண்ணாமலை, மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே, மாநிலங்களவைத் … Read more

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை விசாரிக்க 4 நாட்கள் காவல் வழங்கி டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.!

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை விசாரிக்க 4 நாட்கள் காவல் வழங்கி டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 263 சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு விசா நீட்டிக்கப்பட்ட வழக்கில் பாஸ்கர ராமனை சென்னையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய அதிகாரிகள் … Read more

சாலைத் தகராறில் ஒருவரைக் கொன்ற வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துக்கு ஓராண்டு சிறைத் தண்டனை..

1988ஆம் ஆண்டு சாலைத் தகராறில் ஒருவரைக் கொன்ற வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. சாலையில் வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் குர்ணாம் சிங் என்பவரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்த சித்து கைகளால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து அவரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. மேல்முறையீட்டில் பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் … Read more

ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை – ரயில்வே அமைச்சர்

ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடி மாணவர்களின் அடுத்த தலைமுறை போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டத்திற்கு 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மத்திய ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் எழும்பூர்,காட்பாடி,மதுரை,ராமேஸ்வரம், கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் 760 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளதாக கூறினார். விரைவில் புறநகர் ரயில்களில், மெட்ரோ ரயில்களைப் போன்று ஏசி வசதி … Read more

நாட்டிலேயே முதன் முறையாக அரசு ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளது கேரள அரசு.!

நாட்டிலேயே முதன் முறையாக அரசு ஓடிடி தளத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. அமேசான், நெட்பிளிக்ஸ் போன்று செயல்பட உள்ள இந்த ஓடிடி தளத்திற்கு சி ஸ்பேஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன், கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1ஆம் தேதி அந்த ஓடிடி தளம் செயல்பாட்டுக்கு வரும் என்றார். இதன் மூலம் மலையாள திரைப்படத்துறை அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறும் என்றும், உயர் தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன் அந்த தளம் … Read more

டான் படத்தை பார்த்த ரஜினிகாந்த் சொன்னது என்ன.? மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்.!

டான் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் தன்னை செல்போனில் அழைத்து மனம் திறந்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டான் படத்திற்கான தெலுங்கு மொழிக்கான புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்தியன் , டான் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் தன்னை செல்போனில் அழைத்து மனம் திறந்து பாராட்டியதாக தெரிவித்தார். மகிழ்ச்சியால் வேறு வார்த்தை ஏதும் வராததால்,இயக்குனர் சிகிசக்கரவர்த்தி லவ் யூ சார் … Read more

வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடச் சென்ற பாஜக எம்.எல்.ஏவை முதுகில் தூக்கிச்சென்ற மீட்புப் பணியாளர்..

அசாமில் வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடச் சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரை மீட்புப் பணியாளர் முதுகில் சுமந்து படகுக்குக் கொண்டு சென்ற காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அசாமின் லும்டிங் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிபு மிஸ்ரா, ஓரடி ஆழமுள்ள தண்ணீரில் கால் படாமல் ஒருவரின் முதுகில் ஏறித் தொங்கிக் கொண்டு படகுக்குச் சென்றார்.    Source link