தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 11-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வு எழுதியுள்ளார். சவேரியார் பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ரட்சகர், நேற்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், 11-ம் வகுப்பு படிக்கும் அவரது இளைய மகன் ராபின், இன்று கணக்குப்பதிவியல் தேர்வை எழுதினார். பின்னர் அவர் வீட்டிற்கு சென்று தந்தைக்கு இறுதிச்சடங்குகளை செய்தார். Source link

உக்ரைனை வீழ்த்த வல்லமை படைத்த கூடிய அதிசிய ஆயுதத்தை ரஷ்யா தேடி வருகிறது – செலன்ஸ்கி கிண்டல்

உக்ரைன் படைகளை வீழ்த்தும் வல்லமை படைத்த அதிசய ஆயுதத்தை ரஷ்யா தேடி வருவதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கிண்டலடித்துள்ளார். 5 கிலோமீட்டர் தொலைவிலேயே உக்ரைன் நாட்டு டிரோன்களை சுட்டெரிக்கும்  லேசர் ஆயுதங்களையும், பூமியில் இருந்து 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைகோள்களை கூட கண்காணிக்க விடாமல் செய்யக்கூடிய பெரஸ்வெட் (Peresvet) என்ற வான் தடுப்பு அமைப்பையும் களமிறக்கி உள்ளதாக ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் (Yury Borisov) தெரிவித்திருந்தார். இந்நிலையில், தோல்வி பயத்தில் ரஷ்யா இவ்வாறு … Read more

பாம்பிடமிருந்து எஜமானரின் உயிரைக் காப்பாற்றி விட்டு தன்னுடைய உயிரை விட்ட பாசக்கார நாய்..

கர்நாடக மாநிலம் கோலார் அருகே, நாய் ஒன்று நாகப்பாம்பிடமிருந்து எஜமானரின் உயிரை காப்பாற்றிள்ளது. பங்காரப்பேட்டை பீரண்டஹள்ளியைச் சேர்ந்த அரசு பேருந்து  ஊழியரான வெங்கடேசன் வீட்டில் வளர்க்கப்பட்ட அமெரிக்கன் புல்லி (American Bully) என்ற இனத்தைச் சேர்ந்த 3 வயது பெண் நாய் அதன் உரிமையாளர் செல்போனில் பேசியபடியே  புல் வெளியில் படுத்திருந்த பாம்பை கவனிக்காமல் சென்ற நிலையில், அதனை கண்ட நாய் உடனடியாக சென்று, பாம்பை கொன்றது. பாம்புடன் ஏற்பட்ட சண்டையில்  பாம்பு கழுத்தில் கொத்தியதால்  அந்த … Read more

நகைக்கடையில் இருந்து 1 சவரன் மதிப்பிலான தங்க நாணயங்கள் திருடிச்சென்ற குருவிக்கார பெண்கள்..

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையில் இருந்து 1 சவரன் மதிப்பிலான தங்க நாணயங்களை திருடிச்சென்ற விழுப்புரத்தை சேர்ந்த 2 குருவிக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்கள் திருடிச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தன. புகாரின் பேரில் இருவரையும் தேடி வந்த போலீசார் ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது, பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.  Source link

ஒரே நாளில் ஒரே சமயத்தில் ஆண் குழந்தைகளை பெற்ற இரட்டை சகோதரிகள்..

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில்  ஒரே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Jill Justiniani  மற்றும் Erin Cheplak பெயர் கொண்ட அந்த இரட்டை சகோதரிகள் ஒன்றாக கருவுற்ற நிலையில் பிரசவத்திற்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் ஒரே நாளில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஒரே சமயத்தில் மருத்துவர்களால் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது இருவருக்கும் ஒரே சமயத்தில் இரு அழகான ஆண்குழந்தைகள் பிறந்தன. இரு குழந்தைகளும் தலா … Read more

காஞ்சனா பேயை விரட்ட 18 வயது பெண்ணின் கை கால்களை கருக்கிய களவாணி பாபா..! அக்னிகுண்டம் வளர்த்து அத்துமீறல்.!

காஞ்சனா பட பாணியில் பேய் ஓட்டுவதாக கூறி அக்னி குண்டம் வளர்த்து இளம் பெண்ணின் கால் கைகளை தீயில் கருக்கிய சம்பவம் தொடர்பாக தலைமறைவான களவானி பாபாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். டம்மி பாபாவால் கை கால் கருகிய நிலையில், பெரிய கட்டுக்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் அஸ்விணி இவர்தான்..! தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் குக்கிந்தா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடையா, மஞ்சுளா தம்பதியினரின்18 வயது மகள் அஸ்வினி கடந்த சில … Read more

நெல்லை கல்குவாரி விபத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் குவாரி உரிமையாளரின் வீடு, அவரது மகன் வீடுகளில் போலீசார் சோதனை.!

நெல்லை கல்குவாரி விபத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் கல்குவாரி உரிமையாளர் செல்வராஜின் வீடு, அவரது மகன் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அடைமிதிப்பான்குளம் குவாரி இடிபாடுகளில் சிக்கிய 6ஆவது நபரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கல்குவாரியில் உள்ள செல்வராஜின் அலுவலக பூட்டை உடைத்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். செல்வராஜின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்தும் வரும் போலீசார், அவரது வங்கிக் கணக்கில் உள்ள ஒரு கோடி ரூபாயை … Read more

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகம், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிப்பு.!

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகம், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. கீவ் நகரம் மீதான தாக்குதலை ரஷ்யா சில வாரங்களாக நிறுத்தியிருப்பதால் தூதரகம் மீண்டும் செயல்படவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். கீவ்-வுக்கு திரும்பும் ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனம் போட்ட முதலமைச்சர்.. ஸ்டெப்பு வேர லெவல்..

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குன்னூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுகவினர் அளித்த வரவேற்புக்கு பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த பத்து ஆண்டுகளில் செய்யாத நலத்திட்டங்களை ஒரே ஆண்டில் செய்துள்ளதாக கூறினார். பின்னர் உதகை சென்ற முதலமைச்சரை வரவேற்று தோடர் பழங்குடியின மக்கள் நடனமாடினர். அவர்களுடன் இணைந்து முதலமைச்சரும் நடனமாடினார். ஊட்டியில் நடைபெறும் மலர்க்கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். Source link

போரின் போது முதியவரை கொலை செய்த ரஷ்ய வீரர்… உக்ரைன் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்..

உக்ரைன் போரில் முதியவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ரஷ்ய வீரர், கீவ் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். வாடிம் ஷிஷிமரின் என்ற 21 வயதான ரஷ்ய வீரர், வடகிழக்கு உக்ரைனிய கிராமமான சுபாகிவ்காவில் (Chupakhivka) போர் புரிந்த போது 62 வயதான முதியவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் கீவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்தவரின் மனைவியிடம் மன்னிப்புக் கோரிய ரஷ்ய வீரர், தான் செய்த அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக் கொள்வதாக கூறினார். படையெடுப்பின் போது மக்களுக்கு எதிரான … Read more