ரஷ்யப் படையினரின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் பாலத்தை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்திய உக்ரைன் படை வீரர்கள்.!

உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் பாலம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தனர். இந்த பாலம் Sievierodonetsk மற்றும் Lysychansk வை Rubizhne பகுதியுடன் இணைக்கும் பாலமாகும். அந்த பாலத்தில் உக்ரைன் வீரர்கள் வெடிகுண்டுகளை பொருத்தி திட்டமிட்டபடி வெடிக்கச் செய்யும் வீடியோ காட்சியினை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படையினருடனான போர் பல வாரங்கள் நீடிக்கும் என்று … Read more

உடல் ஆரோக்கியத்திற்கு யோகாசனம் செய்ய வேண்டும் – தமிழிசை

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள NIT-ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், இன்றைய தலைமுறையினர் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகாசனங்களை செய்யுமாறு அறிவுறுத்தினார்.  Source link

கல்குவாரி விபத்து.. கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் – ஆட்சியர்

நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சதப் பாறை உருண்டு விழுந்த விபத்து தொடர்பாக, கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். அடைமிதிப்பான்குளம் குவாரி இடிபாடுகளில் சிக்கிய 6ஆவது நபரை மீட்கும் பணியை பார்வையிட்டபின் பேட்டியளித்த அவர், சிறிய அளவில் வெடிவைத்து பாறைகளை தகர்த்து மீட்புப் பணி நடைபெறுவதாக கூறினார். இதனிடையே, குவாரி உரிமையாளர் செல்வராஜின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மற்றும் அவரது மகனின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் … Read more

பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு.. கடுமையான ஊரங்கு அமல்..

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் பகுதிகளில் கடுமையான ஊரங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகர நிர்வாக பணியாளர்கள் முழு கவச உடையணிந்து சென்று பொருட்களை விநியோகம் செய்தனர். சாவோயங் (Chaoyang) மாவட்டத்தில் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதன் எதிரொலியாக, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.  Source link

ஞானவாபி மசூதி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு தடை – உச்சநீதிமன்றம்

ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாரணாசி கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  ஆஜரான வழக்கறிஞர் ஹூசிபா அஹ்மதி (Huzefa Ahmadi)  இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதேநேரம், இந்த வழக்கை நாளை விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் வாதிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நாளை … Read more

கோவையில் தொல்பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோயம்புத்தூரில் பண்டைய கால தொல்பொருட்களின் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வ.உ.சி. மைதானத்தில், தொல்லியல் துறை மற்றும் செய்தித்துறை சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் கீழடி, பொருநை ஆற்றங்கரை மற்றும் மயிலாடும்பாறை அகழ்வாய்வில் கிடைத்த தொன்மையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். Source link

வளர்ந்துவரும் தொழில்நுட்ப மையமாகக் கோவை உருவாகும் – முதலமைச்சர்

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாகக் கோவை உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்று முதலமைச்சர் பேசினார். அப்போது, தொழில்களில் சிறந்த நகரம் கோவை என்றும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளதாகவும் தெரிவித்தார். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில எடுப்புப் பணிகளுக்காக 1132 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார். புத்தாக்கம், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், வான்வெளி, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவும் வாய்ப்பு – வானிலை மையம் Source link

உலகின் புதிய நம்பிக்கையாக இந்தியா விளங்குகிறது – பிரதமர் மோடி

உலகளாவிய அமைதியின்மை, தகராறு ஆகியவற்றின் நடுவில் உலகின் புதிய நம்பிக்கையாக இந்தியா விளங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சுவாமி நாராயண் கோவிலில் நடைபெற்ற இளைஞர் முகாமில் பிரதமர் மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது, எந்தவொரு சமுதாயத்தின் அடித்தளமும், முன்னேற்றமும் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டது எனத் துறவிகளும், நூல்களும் கூறியுள்ளதாகத் தெரிவித்தார். செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியத்தில் வேரூன்றிய புதிய சிந்தனையின் மீது புதிய இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.  Source link

தமிழகத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தற்காலிக பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link