சென்னையில் பட்டப்பகலில் பைனான்சியர் வெட்டிக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்.!

சென்னை அமைந்தகரை செனாய் நகரில், பைனான்சியர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கள்ளகுறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சேத்துப்பட்டைச் சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகம் நேற்று ஷெனாய் நகர் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதனையடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் சந்திரசேகர், ரோஹித் … Read more

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – இந்தோனேசிய அதிபர்

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 23 ஆம் தேதி முதல் விலக்குவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசியா நிறுத்தியதால், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது. உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசிய அரசின், இந்த முடிவைக் கண்டித்து விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். தற்போது 60 லட்சம் டன் பாமாயில் … Read more

அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்குப் புதிய வசதி

அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் பிற வங்கிகளுக்கும், பிற வங்கிகளில் இருந்தும் மின்னணு முறையில் பணத்தைப் பரிமாற்றும் வசதி மே 31ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் நெப்ட், ஆர்டிஜிஎஸ் ஆகியவற்றின் மூலம் உடனடியாக மின்னணு முறையில் பணத்தைப் பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றும் வசதி ஏற்கெனவே உள்ளது. இந்நிலையில் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் பிற வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றவும், பிற வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைப் பெறவும் … Read more

மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசு ஏற்ற நிலையில் அவர் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதி.!

இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாமல் தவிக்கும் மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்ற நிலையில், அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபால் வீராங்கனையான சிந்து, கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன. எழுந்து நிற்க முடியாத நிலையிலும் மாணவி சிந்து, தன்னம்பிக்கையுடன் பொதுத் தேர்வு எழுதினார். சிந்துவின் மருத்துவ செலவை … Read more

உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்.. ரஷ்யா அறிவிப்பு

மரியுபோல் உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் இதுவரை சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடத்தை ரஷ்யா திறந்தது. அங்கிருந்து வெளியேறும் வீரர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் உள்ள நோவோ-அசோவ்ஸ்க் (Novoazovsk) நகரில் வெளி உலகத் தொடர்பின்றி தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ள 80 வீரர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

மோதல்களுக்கு மத்தியில் உலகின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இந்தியா மாறி உள்ளது – பிரதமர் மோடி

மோதல்களுக்கு மத்தியில் உலகின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இந்தியா மாறி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதரவில் நடைபெற்ற இளைஞர்களுக்கான கருத்தரங்கில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனா தொற்றுக்காலத்தில் உலகின் பல நாட்களுக்கு தடுப்பூசிகளையும், மருந்துகளையும் இந்தியா வழங்கியது என்றார். மோதலும், நிச்சயமற்ற தன்மையும் நிலவும் நிலையில், உலகின் வினியோக சங்கிலியை மீட்டெடுக்கும் பணியிலும் இந்தியா திறம்பட செயலாற்றுவதாக அவர் கூறினார். இதன் மூலம் உலகின் புதிய நம்பிக்கையாக … Read more

பேரறிவாளன் தியாகி போல் கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல – அண்ணாமலை திட்டவட்டம்

உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தியாகி போல் கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள் தான் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்றார்.  Source link

அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..

இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த அவர், ஏப்ரல் இறுதியில் கனடாவிற்கு சொந்த வாகனத்தில் சென்று விட்டு, மே மாத தொடக்கத்தில் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னம்மையை உண்டுபண்ணும் வைரஸ்கள் குடும்பத்தை சேர்ந்த ஒரு வைரஸ் பாதிப்பாலேயே குரங்கம்மை பாதிப்பு ஏற்படும் நிலையில் சின்னம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி குரங்கம்மைக்கும் பலனளிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதிப்பு ஏற்பட்டு 4 நாட்களுக்குள் தடுப்பூசி … Read more

வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடச் சென்ற பாஜக எம்.எல்.ஏவை முதுகில் துக்கிச்சென்ற மீட்புப் பணியாளர்..

அசாமில் வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடச் சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரை மீட்புப் பணியாளர் முதுகில் சுமந்து படகுக்குக் கொண்டு சென்ற காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அசாமின் லும்டிங் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிபு மிஸ்ரா, ஓரடி ஆழமுள்ள தண்ணீரில் கால் படாமல் ஒருவரின் முதுகில் ஏறித் தொங்கிக் கொண்டு படகுக்குச் சென்றார். 

சென்னையில் பள்ளி மாணவிகளை கிண்டலடித்ததாக கூறி 10-ம் வகுப்பு மாணவனை தாக்கிய சக மாணவர்கள்.!

சென்னை அடுத்த ஆவடியில், பள்ளி மாணவிகளை கிண்டலடித்ததாக கூறி பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், சக மாணவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கோணம்பேடு அரசு பள்ளி மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதுவதற்காக ஆவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்துள்ளனர். அந்த மாணவிகளை ஆவடி அரசு பள்ளி மாணவர் ஒருவர் கிண்டலடித்ததாக கூறப்படுகிறது. தேர்வு முடித்து வெளியே வந்த அந்த மாணவரை சக மாணவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சரமாரியாகத் தாக்கினர். … Read more