கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,910 கோடி அபராதம் விதித்தது மெக்சிகோ நீதிமன்றம்.!

அவதூறான வலைதள பதிவுக்காக கூகுள் நிறுவனத்துக்கு ஆயிரத்து 910 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனம் அவதூறு செய்தி பரப்பியதாக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், மெக்சிகோ சிட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் பிற அடிப்படைக் கொள்கைகளை குறைத்து மதிப்பீடும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  Source link

அக்னிபாத் திட்டம் விவகாரம்.. பீகாரில் ரயில்வே வளாகங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு.!

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பீகாரில் ரயில்வே வளாகங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தானாப்பூர் கோட்டத்தில் வன்முறையாளர்கள் தீவைத்ததில் 50 ரயில் பெட்டிகளும், 5 ரயில் எஞ்சின்களும் முற்றிலும் எரிந்துபோனதாகக் கோட்ட ரயில்வே மேலாளர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.  Source link

இன்று ஒற்றை தலைமை தீர்மானம்? 9 மா.செக்கள் ஓபிஎஸ் உடன் சந்திப்பு..!

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் 5 வது நாளாக இன்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வரும் நிலையில், 5 வது நாளாக இன்றும் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் … Read more

உக்ரைனில் அமெரிக்க வீரர்களைச் சிறைபிடித்த ரஷ்ய ராணுவம்.!

உக்ரைனில் அமெரிக்க முன்னாள் ராணுவவீரர்கள் இருவர் சிறைபிடிக்கப்பட்டது குறித்த வீடியோவை ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யப் படைகளை முறியடிக்க உக்ரைன் ராணுவத்துக்குத் துணையாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றின் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் போரிட்டு வருகின்றனர். அவர்களில் இருவரை ரஷ்யப் படையினர் சிறைபிடித்துள்ளனர். இந்நிலையில் ஜேம்ஸ் லாங்மேன் என்கிற மற்றொரு வீரரையும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.  Source link

காஷ்மீரில் உதவி ஆய்வாளர் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை.!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாம்பூரில் உதவி ஆய்வாளர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது மிரின் உடல் இன்று காலை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது. சம்பூராவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது பயங்கரவாதிகள் கடத்திச்சென்று கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.  Source link

பிராம்புரா அட்வென்ச்சர் பார்க்கில் தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு.. சுற்றுலாப்பயணிகளை வியப்பு..!

ருமேனியாவின் அவ்ரிக் நகரத்தில் உள்ள ஃபேகராஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிராம்புரா அட்வென்ச்சர் பார்க்கில் தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 7 டிகிரி சாய்வாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் சிறிய சிறிய பொருட்கள் கூட தலைகீழாகவே வைக்கப்பட்டுள்ளன. பார்க் வளாகத்திற்குள் உணவகம், மதுபான பார், சிறிய உயிரியல்பூங்கா மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் பல்வேறு சிறப்பம்சங்களும் உள்ளன.  Source link

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை.. ரப்பர் படகு மூலம் மக்களை மீட்டு வரும் மீட்புக்குழுவினர்..!

திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. மேலும், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதிகளில் அதிகளவில் மழை நீர் தேங்கியதால், வீடுகளுக்குள் சிக்கி தவித்த மக்களை மீட்புக்குழுவினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர் . அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த … Read more

புயல் மற்றும் மோசமான வானிலையால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை நிறுத்தம்.. சுற்றுலா பயணிகள் வேதனை..!

அமெரிக்காவில் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. கோடைகால விடுமுறை மற்றும் நினைவு தின விடுமுறைகளை கொண்டாட காத்திருந்த மக்கள் வேதனைக்குள்ளாகினர்.  மிஸ்ஸெசசெபி, விர்ஜிணா, நியூ யார்க், வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணத்தில் வீசிய புயல் காற்று மற்றும் மோசமான வானிலையால் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 8 ஆயிரத்து 800 விமானங்கள் தாமதாக இயக்கப்பட்டன. Source link

“வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும்” – மத்திய அரசு அறிவிப்பு

தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் 4 அறிவிப்புகளை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும் வகையில் மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத்துணை எனக் குறிப்பிட்டு திருத்தம் செய்யப்படும் என்றும் தொலைத்தூர பகுதிகள், வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் வாழ்க்கைத்துணை வாக்களிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி..!

மெக்சிகோவில் மத வழிபாட்டு பயணத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். புனித ஸ்தலமான திலா பகுதியில் உள்ள கிறிஸ்து தேவலாயத்திற்கு சென்றவர்கள், தபாஸ்கோ நோக்கி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது சியாபாஸ் பகுதியில் இந்த விபத்து நேர்ந்தது. பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் விபத்து நேர்ந்ததாக கூறப்படும் நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. Source link