போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகரை தாக்கிய போலீசார்.. மூன்று போலீசாருக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்..!

திரைப்பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய புகாரில் தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் கார்த்தியின் ‘தோழா’ படம் வெளியான போது அதன் போஸ்டரை ஒட்ட திரவிய ரத்தினராஜ் என்ற காவலர் லஞ்சம் கேட்டதாகவும், அதனை தர மறுத்த மூவரை காவல்நிலையத்தில் வைத்து ஆய்வாளர் சுரேஷ், எஸ்.ஐ. ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கியதாகவும் புகார் மனு … Read more

ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம்.. பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் கட்டப்பட்டுள்ள உணவகம்..!

ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. டேஷ்பாஷ் பள்ளத்தாக்கிற்கு நடுவே தரையில் இருந்து 200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிப்பாலம் 240 மீட்டர் நீளமுடையது. பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் உணவகத்திற்கு சென்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உணவருந்தி மகிழ்ந்து வருகின்றனர். Source link

“பண்டிட் சமூகத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டது வெளிநாட்டு சதி” – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் பண்டிட் சமூகத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு சதி உள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில் பேசிய அவர், நமது அண்டை நாடு வெறுப்பு விதைகளை விதைக்கிறது என்றும், அத்தகைய முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். எந்த மதம் சார்ந்தவரையும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையரை நிறைவடைந்து விட்டதால்,நடப்பு ஆண்டின் இறுதியில் தேர்தல் … Read more

வெங்காயம் விற்க வந்த அண்ணண் – தம்பி கொடூரமாக கொலை.. பரபரப்பு வாக்குமூலம் அளித்த கொலையாளிகள்..!

நெல்லையில், கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த ஆத்திரத்தில் அண்ணன், தம்பியை கொடூரமாக கொலை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த வெங்காய வியாபாரியான மணிகண்டன், தனது 13 வயது தம்பி சபரீஸ்வரனுடன் வெங்காயம் விற்க கடந்த 1ம் தேதி நெல்லைக்கு வந்துள்ளார். இருவரும் வீடு திரும்பாததாலும் செல்போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியாததாலும் அவர்களது தந்தை போலீசில் புகாரளித்தார். இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், … Read more

ஆணிகளால் ஓவியங்களை உருவாக்கும் நைஜீரிய இளைஞர்.. 700 டாலருக்கு மேல் விலைபோகும் வித்தியாச படைப்புகள்..!

நைஜீரியாவை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் இரும்பு ஆணிகளை கொண்டு அற்புத ஓவியங்களை உருவாக்கி வருகிறார். அண்மையில் இவர் நைஜீரியாவின் புகழ்பெற்ற காமெடி நடிகரின் ஓவியத்தை மொத்தம் 55 ஆயிரம் ஆணிகளை கொண்டு உருவாக்கியுள்ளார். இவரது ஓவியங்கள் 700 டாலருக்கு மேல் அதன் வடிவம் மற்றும் அளவை வைத்து விலைப்போகின்றன. ஒரு ஆணி ஓவியத்தை உருவாக்க 3 மாதங்கள் வரை ஆகும் என்று அந்த இளைஞர் கூறுகிறார். Source link

“கிடா முட்டு சண்டை நடத்துவது அடிப்படை உரிமை அல்ல” – நீதிபதிகள்

தேனி மாவட்டம் கம்பம், அனிஷ் தோப்பு, மணிக்கட்டி ஆலமரம் பகுதிகளில் வருகிற 26 ஆம் தேதி கிடா முட்டு சண்டை போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ஏற்கனவே 2 முறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுநல வழக்காக தாக்கல் செய்தது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். கிடா முட்டு சண்டைபோட்டியை நடத்த வேண்டும் என்று யாரும் அடிப்படை உரிமையாக கோர … Read more

வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து..!

கொரோனா பரவல் குறைந்து வருவதால், தாய்லாந்தில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடான தாய்லாந்திற்கு செல்ல, வெளிநாட்டு பயணிகள் பாஸ் பெற்று முன்பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடு அமலில் இருந்தது. அந்த நடைமுறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.  Source link

போராட்டத்தின் நடுவே மாணவர்களுடன் சிக்கிய பள்ளி பேருந்து.. அச்சம் காரணமாக பேருந்துக்குள் அழுத மாணவனின் வீடியோ வைரல்..!

பீகாரின் தர்பங்கா நகரில், போராட்டத்தின் நடுவே சிக்கிய பள்ளி பேருந்தில் மாணவன் ஒருவன் அச்சத்தில் அழும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சியாளர்கள் செய்த சாலை மறியலில், மாணவர்களுடன் வந்த பள்ளி பேருந்து சிக்கியது. போலீசாரின் நடவடிக்கைக்கு பின்னர் பேருந்து பாதுகாப்பாக அந்த இடத்தை கடந்து சென்றது.

சாலையில் கிடந்த செல்ஃபோனை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவர்கள்.. பாராட்டி வாழ்த்து தெரிவித்த காவலர்கள்..!

புதுச்சேரியில் சாலையில் கிடந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய செல்ஃபோனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களை பாராட்டி போலீசார் சால்வை அணிவித்தனர். மங்கலம் பகுதியை சேர்ந்த மாரி, ஆதி ஆகிய 2 சிறுவர்கள் உறுவையாறு செல்லும் சாலையில் விளையாடிக்கொண்டிருந்தபோது செல்ஃபோன் ஒன்று கீழே கிடப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அதனை எடுத்துச்சென்று மங்கலம் காவல்நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.  Source link

அமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்.. 2000 கால்நடைகள் பரிதாபமாக பலி..!

அமெரிக்காவின் கென்சாஸில் நிலவும் கடும் வெப்பத்தினால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பல மாகாணங்களில் வரலாறுகாணாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவிவருகிறது. இதில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் கென்சாசும் ஒன்று. கடும் வெப்பத்தால் அங்கு பண்ணை புல்வெளிகளில் கால்நடைகள் உயிரிழந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புவி வெப்பமயமாதலால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். Source link