தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் … Read more

சோனியா காந்திக்கு கீழ் சுவாசக் குழாயில் பூஞ்சைத் தொற்று.. தீவிர கண்காணிப்பில் உள்ளார் – காங்கிரஸ்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு, கீழ் சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சோனியாவிற்கு, மூக்கில் ரத்தம் வந்ததை அடுத்து கடந்த 12ஆம் தேதி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  Source link

சாராய வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்திய போலீசார்.. கூண்டோடு இடமாற்றம் செய்த டிஐஜி..!

நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 காவலர்கள் ஒரே சமயத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் மதுவிலக்கு போலீசார் சாராய வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 75 ஆயிரம் ரூபாய் சிக்கியது. பொறுப்பு ஆய்வாளர் ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, உதவி ஆய்வாளர் சேகர், தலைமை காவலர் தேவராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்த தஞ்சை சரக டிஐஜி கயல்விழி … Read more

அக்னிபாதை திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு விரைவில் துவக்கம்.. வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ராணுவ தளபதி வேண்டுகோள்..!

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக பணியாற்றும் அக்னிபாதை திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு விரைவில் துவங்கும் என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே அறிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் பேசிய அவர், இன்னும் 2 நாட்களில் ராணுவத்தின் இணையதளத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றார். மேலும், இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் அக்னிபாதை திட்டத்தில் இணையும் அக்னிவீரர்களுக்கான பயிற்சிகள் தொடங்கும் என குறிப்பிட்ட ராணுவ தளபதி, இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு ராணுவத்தில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  Source … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!

சேலத்தில் இருந்து இன்று கள்ளக்குறிச்சி வழியாக  திருவண்ணாமலை சென்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ஒற்றை தலைமை தேவை என்று அதிமுகவில் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில் சேலத்தில் நேற்று கட்சியின் மூத்த நிர்வாகிகளான தம்பிதுரை மற்றும் கேபி முனுசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்திய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை சென்றார். வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு … Read more

“மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகன விலைக்கு இணையாக இருக்கும்” – மத்திய அமைச்சர்

அனைத்து மின்சார வாகனங்களின் விலையும் ஓராண்டுக்குள் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு இணையாக இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் பேசிய அவர், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, எத்தனால் பயன்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக, இதன்மூலம் அந்த இரு எரிபொருளுக்காக செலவிடும் தொகையை மிச்சப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். மேலும், சாலையை விட நீர்வழி போக்குவரத்து மலிவானது என்றும் வரும் நாட்களில் அதனை பெரிய அளவில் அமல்படுத்தப்படும் என … Read more

அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி பயங்கர விபத்து.. சுக்குநூறாக நொறுங்கிய இருசக்கர வாகனம்..!

கேரள மாநிலத்தில் வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இருசக்கர வாகனம் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்தார். அம்மாநிலத்தின் மலப்புரம் அருகே காரத்தூர் பகுதியில் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் சாலையில் சரிவர கவனிக்காமல் திரும்பினார். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அந்த வாகனம் சுக்குநூறாக நொறுங்கியதை அடுத்து, அதனை ஓட்டிய இளைஞர் படுகாயமடைந்தார். கண்காணிப்பு கேமரா … Read more

அரசுப் பணி வாங்கித் தருவதாகக்கூறி 100 பேரிடம் ரூ.3 கோடி மோசடி.. போலி பணி நியமன ஆணை வழங்கி உடைந்தையாக இருந்தவர் கைது..!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து சுமார் 100 பேரிடம் மொத்தம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோகன்ராஜ் என்பவர் போலி கன்சல்டன்சி நடத்தி, ஆவின் உள்ளிட்டவற்றில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி அசல் கல்விச்சான்றிழை பெற்று மோசடி செய்ததாக தனசேகர் என்பவர் புகாரளித்திருந்தார். இதனை விசாரித்த போலீசார், இதேபோல் பலரிடம் தலா 15 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த மோகன்ராஜை … Read more

வடகொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு.. மக்கள் குடல் தொற்று நோயால் பாதிப்பு..!

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொழிற்சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் பியாங்யாங்கில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கவச உடை அணிந்து ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து, ஊழியர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டனர். வடகொரியாவில் சுமார் 4.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கடந்த ஒரு வாரமாக ஏராளமானோர் குடல் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

கத்தியால் வெட்ட முயன்ற ரவுடியை பாய்ந்து பிடித்த அஞ்சாத சிங்கம் போலீஸ்.. 2 அடி நீள கத்தியை மடக்கிப்பிடித்த காட்சிகள்.!

காவல் ஆய்வாளர் ஒருவரை வெட்டி கொலை செய்வதற்காக காத்திருந்த ரவுடி ஒருவன், 2 அடி நீள கத்தியால் அவரை வெட்ட முயலும் போது சினிமா பாணியில் சிங்கம் போல பாய்ந்து பிடித்து காவல் ஆய்வாளர், ரவுடியை மடக்கிய பரபரப்பான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது கேரள மாநிலம் ஆலப்புழா, நூறநாடு பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்து வருபவர் அருண் குமார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அருண் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போலீசாரால் … Read more