அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓபிஎஸ் எழுத்துப்பூர்வ வாதம் – தீர்ப்பு எப்போது?

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த வழக்குகளில் எழுத்துப்பூர்வமான வாதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி. டி. பிரபாகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விடுமுறை நாளான புதன்கிழமை முழுவதும் விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்தார். … Read more

அவதூறு வழக்கு எதிரொலி: ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு

அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி?” எனப் … Read more

“அன்பு காட்டினால் போதும்… நான் அடிமையாகி விடுவேன்” – நடிகர் சிம்பு உருக்கம்! #Video

‘அன்பு காட்டிவிட்டால் நான் அடிமையாகி விடுவேன்; இதை அனைவரும் என்னிடம் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்; அனைவரும் என்னிடம் அன்பு காட்டிட வேண்டும்’ என்று நடிகர் சிம்பு உருக்கமாக தெரிவித்துள்ளார். நடிகர் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி உள்ள ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன், ஏ‌.ஜி.ஆர்.எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு … Read more

நடிகர் அஜித்தின் தந்தை உடல் தகனம் – ஆறுதல் கூறிய திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல், பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.  இந்நிலையில், நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காலமானார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாதத்துக்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து 85 வயதாகும் சுப்பிரமணியம் உடல் … Read more

மும்பையில் தனி ஃப்ளாட்? முதல்முறையாக தனியாக குடியேறும் சூர்யா – ஜோதிகா தம்பதி!

நடிகர் சூர்யா, முதன் முறையாக தனது பெற்றோரை பிரிந்து மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் தனியாக குடியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சூர்யா. சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றிருந்தார் சூர்யா. சூரரைப் போற்று படத்துக்குப்பின் விக்ரம் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தார் சூர்யா. போலவே எதற்கும் துணிந்தவன் படத்தில் நாயகனாக நடித்தார். இந்நிலையில் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் … Read more

மாவட்ட ஆட்சியர்களின் பெயரை பயன்படுத்தி ‘குரல் மாற்று ஆப்’ மூலம் மோசடி! சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டில் பல மாவட்ட ஆட்சியர்களின் பெயரைக் கூறி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தானம் (எ) சந்தான பாரதி. டாக்ஸி ஓட்டுநரான இவர், பட்டுச்சேலை வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகாமையல் இருந்த டீக்கடையில் பேப்பர் பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பேப்பரில் இருந்த ஒரு செய்தியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி என இருந்துள்ளது. இதையடுத்து பட்டுச்சேலை கடையின் தொலைபேசியை தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசிய அந்த … Read more

நாகப்பட்டினம்: ஆட்சியர் பங்குபெற்ற அரசு விழாவில் பள்ளி மாணவர்களை டீ வாங்க அனுப்பிய அவலம்!

நாகை அருகே வடக்கு பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசுமையான மற்றும் தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு, டீ வாங்க பள்ளி மாணவர்களை கடைக்கு அனுப்பியதால் சர்ச்சை எற்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க அறக்கட்டளை சார்பில் 10 வகையான நிபந்தனைகளுடன் பசுமையான – தூய்மையான பள்ளி தேர்வுக்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு … Read more

100 % இந்தி மொழி விவகாரம்: சுற்றறிக்கையை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

மத்திய அரசு அலுவலகங்களில் நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். தனது கோரிக்கையில் அவர், “தென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்ட சுற்றறிக்கையில் உடல் நலம் பற்றிய வழிகாட்டி நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அக்கூட்டத்தில் 100 சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பான பயிற்சி தரப்பட்டதாக அந்த சுற்றறிக்கை கூறுகிறது. உடல் … Read more

சென்னை: நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த நகைக்கடை உரிமையாளர்? 1.4 கிலோ தங்கம் மீட்பு!

திருவள்ளூரில் கடந்த 20 ஆம் தேதி நகை வியாபாரியிடம் 1.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மற்றொரு நகைக்கடை உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், அவரிகளிடம் இருந்து 1.4 கிலோ தங்கததை மீட்ஷடுள்ளனர். சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ராமேஸ்வர லால் என்பரிடம் வேலை பார்க்கும் காலுராம் (35) மற்றும் சோகன் (30), கடந்த 20 ஆம் தேதி தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடையொன்றில் நகைகளை கொடுத்து பணம் வசூலித்து விட்டு … Read more

நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: ‘மருத்துவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்’- சகோதரர்கள் அறிக்கை

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. ‘துணிவு’ படத்துக்குப்பின், அடுத்தப் படத்திற்கான பணிகளுக்கு இடையே தனது குடும்பத்துடன் ஓய்வில் இருந்து வருகிறார் நடிகர் அஜித். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை உயிரிழந்தார். அஜித்தின் தந்தை, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, நடிகர் … Read more