‘ஒத்தைக்கு ஒத்தை வா’ – உச்சகட்ட மதுபோதையில் புதுச்சேரியில் ரகளை செய்த தமிழக காவலர்

புதுச்சேரியில் தமிழக காவலர் ஒருவர் உச்சகட்ட மது போதையில் புதுச்சேரி காவலர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து புதுச்சேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புதுச்சேரி கடலூர் எல்லையில் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட கன்னியகோயில் எல்லை பகுதி உள்ளது. அங்கு ஏராளமான மதுபான கடைகள் உள்ளன. அங்கு நேற்று மாலை 37 வயது மதிக்கதக்க நபரொருவர் உச்சகட்ட மது போதையில் அவ்வழியே செல்லும் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்திருக்கிறார். இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் காவல் … Read more

IPS அதிகாரியின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச்சென்ற அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு!

சென்னை தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை மண்டல இயக்குனரின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்று, விபத்தும் ஏற்படுத்திய விவகாரத்தில் கார் சாவி எடுத்து கொடுத்தவர் மற்றும் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில், இரு அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு பதியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, அயப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இந்திய அரசு போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை சென்னை மண்டல அலுவலகம் உள்ளது. இந்த … Read more

பள்ளி மாணவியை கடத்தி குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை.. தருமபுரி இளைஞர் போக்சோவில் கைது

தருமபுரி அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி, திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரொருரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரியை அடுத்த செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர் தருமபுரியை சேர்ந்த ஒரு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் … Read more

உயிரிழந்தவர் உடலுக்கு சுவர் ஏறி குதித்து இறுதி அஞ்சலி… 14 மணி நேரமாக தவித்த குடும்பம்!

ஆலங்குடியில் 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வர பாதை இல்லாததால் 14 மணி நேரத்திற்கு மேலாக அவரது உறவினர்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (75). இவர், தனது குடும்பத்தோடு அப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டிற்குச் செல்லும் பாதையை அருகே வசிப்பவர்கள் காம்பவுண்ட் சுவர் எடுத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேற பாதை … Read more

“பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு மாநிலங்களவையில் எப்படி அனுமதியளிப்பது?”- திருச்சி சிவா

அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒப்புக் கொள்ளாத நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை மாநிலங்களவையில் நடத்தக்கூடாது’ என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை நடத்த அவகாசம் இல்லை. அந்த ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல்களை விரைவாக அளிக்க வேண்டும்’ என அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள … Read more

புனித ரமலான் நோன்பு தொடக்கம்: நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை!

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள். இன்று வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து, ரமலான் … Read more

மக்களவையில் விவாதமின்றி பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல்! என்ன காரணம்? சபாநாயகர் விளக்கம்

இந்த வருட பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கான ஒப்புதலை மக்களவை அளித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மக்களவை கூடி குரல் வாக்கெடுப்பு மூலம் பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளித்தது. நேரமின்மை காரணமாக விவாதம் இன்றி ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார். பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் தொடங்கிய நாளிலிருந்து தினமும் பாஜக – எதிர்க்கட்சிகள் மோதல் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் … Read more

மத்திய அரசு அலுவலகங்களில் 100% இந்தி மொழி: டெமோ செயலி வெளியிட்டது தெற்கு ரயில்வே

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை 100% நடைமுறைபடுத்துவதை வலியுறுத்தி தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்டத்தில் டெமோ செயலி வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழுவின் 169வது கூட்டம் இன்று (23.03.2023) தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீ கவுஷல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. அதில் முதன்மை தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர் முக்யா ராஜ்பாஷா மற்றும் ஸ்ரீ கவுதம் தத்தா ஆகியோர் ‘இந்தியை … Read more

இந்தியாவிலிருந்து 16.80 கோடி பேரின் தகவல்கள் விற்பனை! எப்படி திருடப்பட்டது? பகீர் பின்னணி

இந்தியாவிலிருந்து 16.80 கோடி பேரின் ரகசிய தகவல்களைத் திருடி விற்பனை செய்திருக்கும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று கை விரல்களுக்குள்ளேயே விஞ்ஞானம் விரிவடைந்திருந்தாலும் அதனால் ஏராளமான ஆபத்துகளும் வளர்ந்திருக்கின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்தும் செல்போன், கணினி, மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களில்தான் நம்முடைய பல்வேறு ரகசியமான தகவல்களைச் சேமித்து வைக்கிறோம். குறிப்பாக வங்கி சம்பந்தப்பட்ட கடவுச்சொல்களையும் சேமித்து வைக்கிறோம். ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து நம்மில் பலர் சிந்திப்பதில்லை. … Read more

மின்வேலி தாக்கி 3 யானைகள் பலியான விவகாரம்: குட்டியானைகள் இருப்பிடம் பற்றி வனத்துறை தகவல்

மின்வேலியில் சிக்கி யானைகள் பலியான விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் முரளிதரன் மற்றும் … Read more