கார்களில் நடு இருக்கைக்கும் மும்முனை சீட் பெல்ட் கட்டாயம்

காரின் பின் இருக்கையில் நடுவில் அமருவோருக்கும் சீட் பெல்ட் அமைக்க வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கார்களில் முதல் வரிசையில் இரண்டு இருக்கைகள் மற்றும் பின்வரிசையில் இரண்டு ஓர இருக்கைகளுக்கு மும்முனை சீட் பெல்ட் வசதி வழங்கப்படுகிறது. பின்வரிசைகளில் நடுஇருக்கைகளுக்கு விமானங்களில் இருப்பதுபோல இருமுனை சீட் பெல்ட் ஒதுக்கப்படுகிறது. இனி, நடுஇருக்கைகளுக்கும் மும்முனை சீட்பெல்ட் அமைப்பதை வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். … Read more

“90% காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்”- உயர்நீதிமன்றம் வேதனை

காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். காவல்துறையில் ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய சரியான தருணம் இது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், தவறான புகார் … Read more

'தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு நிலையங்கள் எத்தனை? – மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் 890 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இதுவரை தமிழகத்தில் 69 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 8,181 இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த ஆண்டு வரை 3,628 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நின்றிருந்த லாரி மீது மாநகர பேருந்து மோதி விபத்து: நொறுங்கிய கார்

சாலையில் நின்றிருந்த லாரி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த கரசங்கால் அருகே சாலையில் யூ டர்ன் செய்வதற்காக வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்த டாரஸ் லாரி வேனை இடது பக்கமாக முந்தி செல்ல முயன்றது. ஆனால் முடியாததால் லாரி நின்றிருந்தது. இதை கவனிக்காத மாநகர பேருந்து ஓட்டுநர் லாரி மீது மோதியதில் ஓட்டுநர் வெங்கடேசன், நடந்துநர் ஹரிஹரன் உட்பட … Read more

திருப்பதி: வாகன சோதனையில் சிக்கிய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள்

திருப்பதி அருகே பாக்கராபேட்டை மலைப்பாதையில் வாகன சோதனையில் ₹10 லட்சம் மதிப்பிலான 25 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்கராபேட்டை வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி மலைப்பாதை வழியாக கடத்தப்படுவதாக பாக்கராபேட்டை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த மலை பாதையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த பொலிரோ வாகனத்தை மடக்கியபோது, அது நிற்காமல் சென்றது. இதையடுத்து சற்று தூரத்தில் அந்த வாகனத்தில் இருந்து சிலர் … Read more

யார் நலனில் அக்கறை கொள்கிறது ஒன்றிய அரசு? – மதுரை எம்பி. சு.வெங்கடேசன் கேள்வி

35 சதவிகித பங்குகள் வைத்திருந்தாலும் உரிமையாளராக முடியாத ஒன்றிய அரசு, சிறு தொழில்களை காக்க நிதியில்லை என்பது நியாயமா? யார் நலனில் அக்கறை கொள்கிறது அரசு? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சு. வெங்கடேசன் கூறியபோது, ’’தனியார் தொலைதொடர்புத் துறை நிறுவனங்கள் வைத்திருக்கிற பாக்கி, அதற்கு தரப்பட்டுள்ள தவணை காலம், பங்குகளாக மாற்றிக்கொள்ள அரசு கொடுத்த வாய்ப்பு குறித்து அவையில் கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கு பதில் அளித்துள்ள தகவல் தொடர்பு இணை … Read more

வேலைவாய்ப்பின்மை மற்றும் கடன் தொல்லையால் அதிகரிக்கும் தற்கொலைகள்

வேலைவாய்ப்பின்மையால் நாடெங்கும் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகவலை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மையால் தற்கொலைகள் 2018 – 2,841 2019 – 2,851 2020 – 3,548 கடன் தொல்லையால் தற்கொலைகள் 2018 – 4,970 2019 – 5,908 2020 – 5,213 வேலையின்மையில் 2018-ஆம் ஆண்டு 2,841 பேரும் 2019ஆம் ஆண்டு 2,851 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2020-ஆம் ஆண்டு இது 3,548 … Read more

‘தமிழ் படமா? ஹாலிவுட் ரொமான்ஸா?’: கவனம் ஈர்க்கும் வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை’ கிளிம்ப்ஸ்

காதலர் தினத்தையொட்டி இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை’ கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மதலீலை’ படத்தினை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகும் இப்படம் குறித்து, “மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்குப் பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கண்ட … Read more

காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த போலீசார், இது தவறான புகார் என வழக்கை முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை நாமக்கல் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த மனுவை … Read more

"நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும்" – அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவையில் கீழ்காணும் தகவல்களை இன்று வழங்கியுள்ளார். “ இந்தியாவில் புதிய பசுமை  விமான நிலையங்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வழங்கும் பசுமை விமான நிலையக் கொள்கை, 2008-ஐ இந்திய அரசு வகுத்துள்ளது. நாடு முழுவதும் 21 பசுமை  விமான நிலையங்கள். அதாவது கோவாவில் உள்ள மோபா, மகாராஷ்டிராவில் நவி மும்பை, ஷிர்டி மற்றும் சிந்துதுர்க், கர்நாடகாவில் கலபுரகி, பிஜப்பூர், ஹாசன் மற்றும் … Read more