'டெல்லி மக்கள் கைகூப்பி கேட்கிறார்கள்'- பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்காததால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கடிதத்தில் அவர், “கடந்த 75 ஆண்டுகளில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட் முடக்கப்படுவது இதுவே முதல் முறை. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். டெல்லி மக்கள் கைகூப்பி கேட்கிறார்கள்; பட்ஜெட்டை நிறுத்தி விடாதீர்கள்” என அவர் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது. அதே வேளையில் … Read more

கோவை: அரசு வேலை வாங்கித் தருவதாக தொடர் மோசடி – மத்திய அரசு அதிகாரி மீது வழக்கு

கோவையில் மத்திய அரசின்கீழ் வேலை வாங்கித் தருவதாக தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு, இவரது நண்பர் மூலம் சில வருடங்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பிரசாந்த் உத்தமன், Hindustan scout and giudes state chief commissinor பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர், ராஜேஷ் குமாரிடம் கோவை NSR சாலையில் … Read more

இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை – டெல்லி பட்ஜெட் தாக்கல் நிறுத்திவைப்பு! என்ன காரணம்?

இன்று தாக்கல் செய்யப்படவிருந்த டெல்லி பட்ஜெட் , மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார் டெல்லி … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மாயமான விவகாரம்: 4 ஆண்டுகளாக சிறுக சிறுக திருடிய பெண்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவர் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஈஸ்வரிதான் சிறுக சிறுக நகையை திருடி விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருப்பதாக இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருந்தார். தனது புகாரில் அவர் … Read more

வேளாண் பட்ஜெட் 2023-2024: முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவான விவரம்!

தமிழக சட்டப்பேரவையில் 2023 – 2024க்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். தொடர்புடைய செய்தி: TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்! இதனைத் தொடர்ந்து 2023 – 2024க்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பச்சைத் துண்டு அணிந்து வந்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் … Read more

PS-2 அக நக பாடலின் ட்யூன் இந்த பட BGM-ன் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனா? – ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

தமிழ் சினிமா இசை ரசிகர்களுக்கு மெகா விருந்து படைக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் படைப்பு குறித்த அடுத்தடுத்த ஒவ்வொரு அப்டேட்களும் அமைந்திருக்கின்றன. அண்மையில்கூட ரஹ்மான் இசையில் உருவான ‘பத்து தல’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி மேடையில் பாடி, குதூகலித்து அசத்திய வீடியோக்களே சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதற்கடுத்தாக சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களுக்காக நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட wings of love என்ற … Read more

“அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்” ஆளுநருக்கு அமைச்சர் பதில்

அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என ஆளுநர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்?” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, … Read more

கே.எஸ்.அழகிரி ஏற்றிய கட்சிக்கொடியை அவசர அவசரமாக இறக்கிய தொண்டர்கள்! என்ன ஆனது?

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி கட்சிக் கொடியை தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு ஏற்பட்டது. கொடியேற்றிய உடனேயே அதை கண்டுபிடித்துவிட்டதால், விரைந்து அதை இறக்கியுள்ளனர் தொண்டர்கள். மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று முன்தினம் மதுரை சென்றார். அங்கு கட்சி கூட்டங்கள், மாற்றுக் கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதையடுத்து பல இடங்களில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அவர். அந்தவகையில் … Read more

‘நாட்டு நாட்டு’க்கு நடனமாடும் எலான் மஸ்க் கார்கள்… ட்விட்டரை தெறிக்கவிடும் வைரல் வீடியோ!

ஆஸ்கர் விருது பெற்ற `நாட்டு நாட்டு’ பாடலின் இசைக்கு ஏற்றவாறு டெஸ்லா கார்களின் விளக்குகளை அந்நிறுவனம் ஒளிரச் செய்யும் வீடியோ, இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.  இதனால் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினருக்கு உலகம் முழுவதுமிருந்து  பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், தங்கள் கார்களின் மின் விளக்குகளை … Read more

கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி!

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழுதப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (25). இவர், கல்லாவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் “எனக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னிடம் தவணை முறையில் தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புஷ்ப லிங்கம் … Read more