திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மத்திய அரசு தீர்வை காணும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

தீவிரவாதத்தை திமுக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மத்திய அரசு தீர்வை காணும்; கோட்டையில் உள்ளவர்கள் கண்காணிக்கத் தவறிய நேரத்தில் கோட்டை ஈஸ்வரன்தான் காப்பாற்றினார் என சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கோட்டையில் உள்ளவர்கள் தீவிரவாதிகளின் செயல்களை கண்காணிக்க தவறிய நேரத்தில் கோட்டை ஈஸ்வரன்தான் மக்களை தீபாவளி சமயத்தில் காப்பாற்றி உள்ளார். டிஜிபி உடனே … Read more

பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உடல் தகனம்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த புதிய தலைமுறை உதவி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் உடலுக்கு அவரது சொந்த ஊரில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. முத்துகிருஷ்ணன் சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து காயமுற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துகிருஷ்ணன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து முத்துகிருஷ்ணன் உடல் அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் புளியங்குடிக்கு கொண்டுச்செல்லப்பட்டது. பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், அப்பகுதி … Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – இளைஞர் போலீசில் சரண்

கண்ணூர் அருகே காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த இளைஞர் போலீசில் சரணடைந்தார். கேரள மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரியா என்ற இளம்பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்ற இளைஞரும் நட்பாக பழகி வந்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷியாம்ஜித்துக்கு விஷ்ணு பிரியா மீது காதல் ஏற்பட்ட நிலையில், அவர் விஷ்ணு பிரியாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், நண்பனாக பழகி வந்த இளைஞனை காதலனாக விஷ்ணு பிரியா … Read more

அக்.25 ஆம் தேதி சூரிய கிரகணம்: தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் இருந்து பார்க்கலாம்?

அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் நடைபெற உள்ள நிலையில், இதனை எந்தெந்த பகுதிகளில் இருந்து பார்க்கலாம் என்பதை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம். பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இந்த நிழல் இருபகுதிகளைக் கொண்டது. ஒன்று முழுநிழல் பகுதி, மற்றது புறநிழல் பகுதி. முழுநிழல் பகுதியில் இருக்கும் ஒருவரால் சூரியனைக் காண இயலாது. … Read more

மாமல்லபுரம்: பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடிய பிரான்ஸ் நாட்டு தோழிகள்!

மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பட்டாசு வெடித்து பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கல்லூரியில் போராசிரியையாக வேலை செய்துவரும் தோழிகளான கரோலின் (52), மெலன் (45), இசபெல் (53), மோர்கன் (51), தெறிஸ்கா (54) ஆகிய 5 பெண்கள் சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில், அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, மாமல்லபுரம் பஸ் நிலையம் அருயேயுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதையடுத்து … Read more

தலை தீபாவளி கொண்டாடிய அண்ணன் மகள் – ஆத்திரத்தில் சித்தப்பா செய்த விபரீத செயல்!

மதுரையில் தலைதீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த அண்ணன் மகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சித்தப்பா மற்றும் அண்ணன் மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா (19) என்ற இளம்பெண் தனது வீட்டின் எதிரேயுள்ள பாலாஜி (21) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இன்று பவித்ரா – பாலாஜி தம்பதியினர் தலைதீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது … Read more

ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர் குடும்பம் – தருமபுரியில் நெகிழ்ச்சி!

தருமபுரியில் தன்னார்வலர் குடும்பத்தினர் ஆதரவற்றவர்களை மீட்டு மருத்துவமனை மற்றும் காப்பகங்களில் சேர்த்து வருகின்றனர். தருமபுரியைச் சேர்ந்த பாலசந்திரன் என்பவர் தருமபுரி நகராட்சியில் உள்ள ரோட்டரி தகன மேடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர், கொரோனா காலத்தில் இறந்தவர்களின் 1200 உடல்களை அடக்கம் செய்துள்ளார். இதனை பாராட்டி மாவட்ட நிர்வாகம் இவருக்கு சான்றிதழ்கள் வழங்கியுள்ளது. இந்நிலையில் இவர், தனியாக மீட்புக் குழு என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவக்கி அதன் மூலம் சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் … Read more

கோஷ்டி மோதல்: பீர் பாட்டிலால் தாக்கிக்கொண்ட இளைஞர்கள் – விருத்தாச்சலத்தில் பரபரப்பு

விருத்தாச்சலம் காவல் நிலையம் அருகே நடந்த கோஷ்டி மோதலில், பீர் பாட்டிலால் மாறி மாறி தாக்கிக்கொண்ட நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட கோஷ்டி சண்டையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி இரண்டு கோஷ்யினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இந்த நிலையில் ஒருவர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மற்றொருவர் மண்டையை அடித்து உடைத்ததில் ஏற்பட்ட படுகாயத்துடன் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

மருத்துவமனை படுக்கையின்கீழ் கூலாக படுத்திருந்த நாகபாம்பால் அலறிய நோயாளிகள் – வைரல் வீடியோ

வாராங்கலிலுள்ள மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்கு கீழே நாகபாம்பு படுத்திருந்ததை பார்த்து நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் வாராங்கலுள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆண்கள் வார்டிலுள்ள ஒரு படுக்கையின் கீழ் அசால்ட்டாக படுத்திருந்த நாகபாம்பை பார்த்த நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் பயந்து அலறியுள்ளனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அளித்த தகவல் அளித்து பின்னர் பாம்பை லாவகமாக பிடித்துள்ளனர். <blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>second … Read more

பத்திரிகையாளர் மரணம்: 'அது எங்க கட்டுப்பாட்டுலேயே இல்ல' – ககன்தீப் சிங் பேடி

சென்னையில் புதிய தலைமுறை உதவி ஆசிரியர், மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பகுதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அது நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ”தடுப்புகளில் குறைபாடுகள் இருந்தால் மக்கள் புகார் அளிக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள தடுப்புகளில் குறைபாடுகள் இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஊடகவியலாளர் விபத்துக்குள்ளான பகுதி … Read more