பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உடல் தகனம்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த புதிய தலைமுறை உதவி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் உடலுக்கு அவரது சொந்த ஊரில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
முத்துகிருஷ்ணன் சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து காயமுற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துகிருஷ்ணன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து முத்துகிருஷ்ணன் உடல் அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் புளியங்குடிக்கு கொண்டுச்செல்லப்பட்டது. பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், அப்பகுதி மக்கள் திரண்டு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் சிந்தாமணி மின்மயானத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.