மயிலாடுதுறை- செங்கோட்டை: 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட விரைவு ரயில்

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மெயின் லைன் ரயில் பாதையில் சென்னை – செங்கோட்டை பயணிகள் ரயிலுக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது. மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகல பாதையாக மாற்றும் பணிக்காக இந்த ரயில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை, தஞ்சை, திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி ஆகிய வழித் தடங்களில் … Read more

நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை

நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் இருந்து நேற்று அதிகாலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மகேஸ்வரன், ராஜ்குமார், முனீஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட 9 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், மீனவர்கள் நேற்று நள்ளிரவு தனுஷ்கோடிக்கும் பாம்பனுக்கும் இடையே 8 நாட்டிக்கல் தென் கிழக்கு கடல் பகுதியில் சூடை மீன் பிடிப்பில் … Read more

முறைத்து பார்த்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் – மும்பையில் 3 பேர் கைது

மும்பையில் முறைத்து பார்த்தற்காக 28 வயது இளைஞரை 3 பேர் அடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது. மும்பையின் மாடுங்கா நகர் பகுதியிலுள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது நண்பருடன் நின்றுகொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், அங்கு அருகில் நின்றிருந்த 3 பேர் கொண்ட நண்பர் குழுவில் ஒருவரை முறைத்து பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை பெல்ட் கொண்டு தலையில் அடித்ததுடன், குத்தி, அடித்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். … Read more

பெரம்பலூர்: கார் உதிரி பாகங்கள் விற்பனை மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே தனியாருக்குச் சொந்தமான கார் உதிரி பாகங்கள் விற்பனை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் வீல் அலைன்மென்ட் மற்றும் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் மையத்தை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை இளையராஜா விற்பனை மையத்தை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து … Read more

தீபாவளிக்காக மதுரையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரிக்ஷாக்காரன் – எம்ஜிஆர் ரசிகர்கள் உற்சாகம்

மதுரையில் புது படங்களுக்கு போட்டியாக தீபாவளி திருநாளில் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படம் திரையிடப்பட்டு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பெரும்பாலும் பழைய திரைப்படங்கள்தான் திரையிடப்படும். இந்த திரைப்படங்களை காணவே தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. பண்டிகை நாட்களில் புதிய ரிலீஸ் படங்களை மற்ற தியேட்டர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு திரையிட்டுக் கொண்டிருக்க, வழக்கம்போல் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடித்த பழைய படங்களை … Read more

''வன விலங்குகளை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கும் இருக்கு'' – பட்டாசு வெடிக்காத கிராமம்

முதுமலை வனப்பகுதிக்குள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக பட்டாசுகளை வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஜாதி, மத பேதமின்றி அனைத்துவித மக்களும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள். திரும்பும் பக்கம் எல்லாம் பட்டாசு சத்தங்களை காதை துளைக்கின்றன. ஆனால், முதுமலை புலிகள் காப்பக அடர் வனப்பகுதிக்குள் வசிக்கக் கூடிய கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதை அறவே தவிர்த்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பக அடர் வனப் … Read more

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற மருதுபாண்டியர் நினைவு தினத்தில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…. “தூத்துக்குடி சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் பார்த்து, பொய்யான பேட்டி அளித்தது நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி தமிழக அரசு தக்க … Read more

'இந்திய ராணுவ வீரர்களே என் குடும்பம்' – பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

தீபாவளி பண்டிகையை கார்கிலில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வரும் பிரதமர் மோடி, “இந்திய ராணுவ வீரர்கள் எனது குடும்பம்” என்று தெரிவித்துள்ளார்.  2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இந்தாண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) காலை கார்கில் வந்தார். அங்கு அவர் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். பின்னர் … Read more

பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம்: மன்னிப்பு கோரிய கர்நாடக அமைச்சர்

பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைச்சர் சோமண்ணா மன்னிப்பு கேட்டுள்ளார். ஹங்கலா  கிராமத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவரை அமைச்சர் சோமண்ணா கன்னத்தில் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு  பட்டா வழங்கும் நிகழ்ச்சியில்,  தான் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும், யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு … Read more

தீபாவளியை முன்னிட்டு ரூ.464 கோடிக்கு மது விற்பனை – கடந்த ஆண்டை விட கலெக்‌ஷன் அமோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் 464 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதற்கு அடுத்ததாக திருச்சி மண்டலத்தில் 41  கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும் கோவை மண்டலத்தில் 39 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.  மேலும் சென்னை மண்டலத்தில் 38 கோடி ரூபாய் என மொத்தமாக … Read more