கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் கைது.!!

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் கைது.!! தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ரோந்து செல்லும் போது சந்தேகப்படும் வகையில் உள்ளவர்களை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் சாலை மாரியம்மன் கோயில் அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி … Read more

வாட்டி வதைத்து எடுக்கும் வெயில்.. தமிழகத்தில் இன்று 12 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வெப்பம் வருகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் கடுமையான அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – … Read more

தேனி – 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை.!!

தேனி – 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை.!! தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். 73 வயதான இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த எட்டு மற்றும் ஆறு வயதுடைய சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். … Read more

அதிமுக பொதுக்குழுவே இறுதியானது! ஓபிஎஸ் வழக்கில் அதிரடி! அனல் பறந்த உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி வாதங்கள் நடந்து வருகின்றன அப்போது, கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடிப்படை உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் என்று, அதிமுக … Read more

லஞ்சம் தர வேண்டும்! நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.2,183 போதாது! மருத்துவர் இராமதாஸ் பகீர் அறிக்கை!

இந்தியாவில் 2023-24ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,183 ஆக  உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நெல் கொள்முதல் விலையை கட்டுபடியாகும் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று உழவர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், மிகக்குறைந்த அளவில் மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது உழவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய … Read more

மனைவி பிரிந்து சென்ற வேதனை… கணவர் விபரீத முடிவு…! ஈரோடு அருகே பரிதாபம்…!

ஈரோடு மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் தாசப்பகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (40). இவரது மனைவி மகேஸ்வரி (35). இந்நிலையில் மோகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மகேஸ்வரி அதை கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மகேஸ்வரி கணவரை பிரிந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து தொட்டம்பாளையத்தில் உள்ள தறிப்பட்டறையில் தங்கி நெசவுத் தொழில் செய்து வந்த மோகன், மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மேலும் … Read more

பொள்ளாச்சியில் அதிர்ச்சி: சிறுமி கர்ப்பம்… போக்சோவில் சிறுவன் கைது…!

பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கற்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.  இதைத்தொடர்ந்து பெற்றோர் சிறுமியை கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு … Read more

அறங்காவலர்களாக அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கும் பணி 34 மாவட்டங்களில் நடந்து வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் நடைமுறையை முடிக்க … Read more

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். மேலும் துவரம் பருப்பு, மக்காச்சோளம், நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம் … Read more

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? மின்சார வாரியம் சொன்ன முக்கிய தகவல்!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.   மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்ததையடுத்து, மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.  அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் … Read more