பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வீராணம் பகுதியில் நிலக்கரி சுரங்கமா? அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!

என்.எல்.சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று கடலூர் மாவட்ட மக்கள் போராடி வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக வீராணம் ஏரியை சுற்றியுள்ள  12 கிராமங்களில் நிலக்கரி வளங்களை மதிப்பிடும் பணியை மத்திய சுரங்கத்துறை மேற்கொண்டு வருகிறது. உழவர்களின் வாழ்வாதாரம், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி கவலைப் படாமல் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்களை  பறித்து நிலக்கரி சுரங்கங்களை அமைக்க மத்திய சுரங்கத்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று, … Read more

பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் – ஓட்டுநர் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(28). இவர் தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜ்க்கும், அதே கம்பெனியில் சில மாதங்கள் வேலை பார்த்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு பத்தாம் வகுப்பு படித்து … Read more

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! போக்சோவில் தொழிலாளி கைது.!

கடலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நடுத்திட்டு பகுதியை சேர்ந்தவர் மாயவன். இவருடைய மகன் கூலி தொழிலாளியான பாரதி(28) அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி பள்ளிக்கு செல்லும்போதும், வீட்டிற்கு வரும் பொழுதும், அவரை பின்தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் உயிரிழந்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் சிறுமியின் தாய், புதுச்சேரி … Read more

தைப்பூசத் திருவிழா : பழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்.!

தமிழ் கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உள்ளது. அதில், மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.  இந்த தைப்பூச திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், சிலர் பேருந்து மற்றும் ரெயில்கள் மூலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் … Read more

போதைப் பொருள் ஒழிப்பில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு..!!

தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது. தமிழக அரசு போதைப்பொருள் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அப்பொழுது சுற்றறிக்கைகள் வெளியிடுவது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் பொழுது தமிழக அரசை நீதிபதி புகழேந்தி பாராட்டியுள்ளார். மேலும் நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசு தரப்பில் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (29.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 29/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 20/18/16 ஆந்திரா வெங்காயம் 14/12 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 15/13 உருளை 23/18/15 சின்ன வெங்காயம் 60/40/30 ஊட்டி கேரட் 30/25 பெங்களூர் கேரட் 15 பீன்ஸ் 25/20 பீட்ரூட். ஊட்டி 30/25 கர்நாடக பீட்ரூட் 18/15 சவ் சவ் 12/10 முள்ளங்கி 15/13 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 60/40 … Read more

முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும்… அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம், கானை ஊராட்சி ஒன்றியம், பனைமலை ஊராட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியசாமி வழங்கினார். இந்த விழாவில் பேசிய அவர் தமிழகத்தில் 60 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும் … Read more

திருப்பூர் : மகளிர் சுய உதவி குழுவில் கடன்.! தலைமறைவான கணவன்-மனைவி கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் கடனை பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருந்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி ரேகா (35). இதே பகுதியை சேர்ந்த சாந்தாமணி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு, மகளிர் சுய உதவி குழு மூலம் ரேகா, சாந்தமணியிடமிருந்து ரூபாய் 68,000 கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து ரேவதி பெற்ற கடனை … Read more

#BREAKING | மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி | திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ம் தேதி அமைதிப் பேரணி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வாலாஜா சாலை முதல் காமராஜர் சாலை அண்ணா நினைவிடம் வரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பேரணி நடைபெற உள்ளது. பிப்ரவரி 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற உள்ளதாக திமுக தலைமை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், ”காஞ்சி தந்த … Read more

எச்சை பிழைப்பு., காவல்துறை வெறி நாய்களே., துணிவு இருந்தால் வெளியே வாடா! வைரலாகும் விசிகவினர் வீடியோ..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள அரசு நிலத்தை திலகவதி என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அந்த நிலத்தை விசிகவினர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக திலகவதி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஆரணி நகர காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் சாதி அடிப்படையில் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் … Read more