#BigBreaking | கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு – மாணவியின் பெற்றோர் மீது சிபிசிஐடி போலீசார் பரபரப்பு குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில், மாணவியின் பெற்றோர்கள் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக, அவரின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு, கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விரைந்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரித்தது. இந்த நிலையில், … Read more

கடலூர் அருகே சோகம்.! தனியார் சொகுசு பேருந்து மோதி கம்ப்யூட்டர் இன்ஜினியர் உயிரிழப்பு.!

கடலூர் மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்து மோதி கம்ப்யூட்டர் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் அப்போகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ராகுல் (31). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சொந்த வேலைக்காக காரணமாக மேலரதவீதிக்கு சென்றுள்ளார்.  அப்போது அந்த வழியாக சிதம்பரம் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட … Read more

#அரியலூர் : 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 57 வயது நபர்.. தப்பியோடி வந்து பெண்ணாடத்தில், திடீர் முடிவு.!

அரியலூர் மாவட்டம் வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்ற 57 வயது நபர் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி இருக்கிறார். இதை அறிந்த வங்காரம் கிராம மக்கள் அன்பழகனை கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். அவர் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன்பாக அந்த சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த … Read more

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, இன்று திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, … Read more

திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து – மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.!

கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து கனமழை காரணமாக திருவாரூர், நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் … Read more

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற கூலி தொழிலாளியின் மகள்.!

கூலித் தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கூலித் தொழிலாளியான இவருக்கு ரக்ஷயா என்ற இளம் வயது மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் ரக்ஷயாவுக்கு, சிறுவயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்று ஆசையும், இலட்சியமும் ஆகும்  பெற்றோர் கொடுத்த ஊக்கம் காரணமாக பகுதி நேர வேலை செய்தும் படித்தும் இதற்காக அவர் தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார். அதன்படி … Read more

தவறான செய்தியை வெளியிட்ட 10 யூடியூப் சேனல்கள் – வீடியோக்களை முடக்கிய மத்திய அரசு..!

மத்திய அரசு இணையதளத்தில் தவறான செய்திகளை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை புலனாய்வு அமைப்புகளின் தகவல் படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நடத்தியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக சில யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் ஒருமுறை முடக்கியுள்ளது.  யூடியூப் சேனல்களில் முடக்கப்பட்டுள்ள இந்த வீடியோக்களை ஏற்கனவே … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வு : வெண்கலத்தால் ஆன விலங்குகள் உருவம் கண்டுபிடிப்பு..!

கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் நிதியில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். தற்போது, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இதற்காக, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்படும் ஓவ்வொரு  பொருட்களும் இந்த பகுதியில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் வைத்து காட்சிப்படுத்தப்பட … Read more

தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி! நாளையும் தொடரப்போகும் போராட்டம்!

வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உடன் நடத்திய போச்சு வார்த்தை தோல்வி!  தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக இன்று காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களின் பிரதான கோரிக்கைகளான ” பிபி எண் 2 நாள் 14-4-2022 அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பை கைவிட வேண்டும், மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படையை உயர்த்தி வழங்கிட வேண்டும்” என்பன கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர்.  காலையில் தொடங்கிய காத்திருப்பு … Read more

Flipcart- கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்த நபருக்கு.. டெலிவரியின் போது ஏற்ப்பட்ட அதிர்ச்சி.! 

ஸ்ரீபெரும்புதூரில் மொய்தீன் 35 வயது என்ற நபர் சிவன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஏசி மெக்கானிக் இவருக்கு ட்ரோன் கேமரா வாங்க வேண்டும் என்பதால் பிலிப்கார்ட் செயலியில் 790,64 ரூபாய்க்கு ஒரு ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்துள்ளார். இந்த கேமராவை அவர் வாங்க கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி ஆர்டரை பிளேஸ் செய்துள்ளார். இன்று அவருக்கு பார்சல் டெலிவரி ஆகியுள்ளது. டோன் கேமரா கணமாக இருக்குமே இது என்ன மிகவும் லேசாக … Read more