பேருந்து கட்டணம் ஏறவே ஏறாது – அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது, அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களின் கூட்டம், போக்குவரத்துத் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து கழகங்கள் சார்பாக ஒரு வாட்ஸ்ஆப் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.  இந்த கூட்டத்தில், பெண்களை ஓசியில் பயணிப்பதாக கூறிய … Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, இன்று ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, … Read more

தென்காசி சோதனைச் சாவடி || கேரளா பேருந்தில் சிக்கிய ரூ.27 லட்சம்.! போலீசார் தீவிர விசாரணை.!

தென்காசி சோதனைச் சாவடியில் சிக்கிய ரூபாய் 27 லட்சம் பணம் குறித்து போலீசார் வாலிபரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களையும் புளியரை மற்றும் அரியங்காவு சோதனை சாவடிகளில் சோதனை செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை வழக்கமாக அரியங்காவு மதுவிலக்கு பிரிவு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தென்காசியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் கேரளா அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டதில், ஒரு வாலிபரின் கைப்பையில் பேப்பரில் … Read more

#கோவை | உச்சகட்ட பாதுகாப்பு பணியில் போலீசார் – போராட வந்த இஸ்லாமிய பெண்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்!

முஸ்லீம் சமுதாய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பு, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வின்போதும் மக்களுக்கு சேவை செய்து வந்தது.  அதகே சமயத்தில் நாடு முழுவதும் இந்த அமைப்புமீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக பயங்கரவாத கும்பலுக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் மீது தொடர் புகார் எழுந்து வந்தது.’ புகார்களின் அடிப்படையில், கடந்த … Read more

குறைவதை போல் குறைந்து அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்.!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (28.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 28/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/18/14 நவீன் தக்காளி 30 நாட்டு தக்காளி 26/25 உருளை 34/26/25 சின்ன வெங்காயம் 50/35/32 ஊட்டி கேரட் 120/110/100 பெங்களூர் கேரட் 90/80 பீன்ஸ் 50/40 பீட்ரூட். ஊட்டி 60/50 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 45/40 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 20/18 வரி … Read more

சாலை விபத்தில் மூளை உயிரிழப்பு அடைந்த இளைஞரின் உடல் பாகங்கள் தானம்.!

சாலை விபத்தில் மூளை உயிரிழப்பு அடைந்த இளைஞரின் உடல் பாகங்கள் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் மோட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் என்பவரது மூத்த மகன் திவாகர்(27). இவர் கடந்த 23-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக ஜோலார்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஆசிரியர் நகர் பகுதி அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலையின் மையத்தில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. … Read more

ஈஷா அறக்கட்டளை கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி விதியிலிருந்து விலக்கு அளித்தது ஏன்? உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கோவை ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டிடங்களை கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வருடம் நவம்பர் 19-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த … Read more

சொந்த அக்காவை.. தம்பியே பல வருடமாக பலாத்காரம்.. 48 வயதில் போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்த அக்கா.!

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு 48 வயது பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் 20 ஆண்டுகளுக்கு முன் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் அவரை பிரிந்து பிறந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருடைய இளைய சகோதரர் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தனது சொந்த அக்கா என்றும் பார்க்காமல் அந்த திருமணமாகாத தம்பி அக்காவிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு … Read more

மது போதையில் தகராறு.! மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது.!

திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கோரிப்பள்ளம் மாத்தியூ தெருவை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஐசக் சாமுவேல் (29). இவருடைய மனைவி சித்ரா. இந்நிலையில் ஐசக் சாமுவேல் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடையே தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து நேற்றும் மது அருந்திவிட்டு வந்த ஐசக் சாமுவேல், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஐசக் சாமுவேல், மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். … Read more