அனைத்திற்கும் கருணாநிதி பெயர் வைத்தால் தமிழ் நாடு என்னவாகும்? – ஆர்.பி.உதயகுமார்.!!

அனைத்திற்கும் கருணாநிதி பெயர் வைத்தால் தமிழ் நாடு என்னவாகும்? – ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்.!! தமிழகத்தில், மருத்துவமனை, விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம் என்று அனைத்திற்கும் கருணாநிதியின் பெயரைச் சூட்டும் ஸ்டாலினின் செயலைக் கண்டு தமிழக மக்கள் முகம் சுளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,” திமுக அரசின் நிர்வாக குளறுபடி மற்றும் சட்டஒழுங்கு சீர்கேட்டால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. தமிழக விளையாட்டு … Read more

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதி.!!

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதி.!! இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதில், செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகள் குறித்து … Read more

புதுக்கோட்டை : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் – அதிரடி முடிவெடுத்த காதல் ஜோடி.!!

புதுக்கோட்டை : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் – அதிரடி முடிவெடுத்த காதல் ஜோடி.!! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் அரவம்பட்டியைச் சேர்ந்த சொர்ணபாப்பா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டைச் சேர்ந்த பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.  இனி பெற்றோரை நம்பினால் நாம் ஒன்று சேர முடியாது என்ற காதல் ஜோடி, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து தங்களுக்கு … Read more

மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு குறைவான நிதி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – நீதிபதிகள் கவலை.!!

மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு குறைவான நிதி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – நீதிபதிகள் கவலை.!! மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சிறையில் உள்ள கைதிகளுடன் வழக்குத் தொடர்பாக வழக்கறிஞர்கள் விசாரிப்பதற்கான உள்ள நடைமுறைகளால் ஒரு நாள் முழுவதும் வீணாவதாகவும், சிறைக் கைதிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் விசாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு … Read more

10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்… 20-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்…!

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் வருகின்ற 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை பனிரெண்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வும் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. … Read more

திமுகவின் ஆட்சி எப்படி? தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கருது கணிப்பு நடத்தும் தமிழக அரசு!

செந்தில் பாலாஜி கைது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.  234 தொகுதியிலும் ரகசியமாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, மாவட்டங்களில் உள்ள உளவுத்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி உள்ளது? திமுக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது? மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? உள்ளிட்ட கேள்விகளையும் மக்களிடம் கேட்க உள்ளதாக தகவல் … Read more

சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் யார்? – போலீசார் தீவிர விசாரணை.!!

சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் யார்? – போலீசார் தீவிர விசாரணை.!! பாஜக கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்கு கடந்த 12ம் தேதி மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அறையின் கதவை பூட்ட முயன்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பணியாளர் ஒருவர் அந்த நபரை அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டார். அதன் பின்னர் அந்த பணியாளர் உடனே சம்பவம் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் ஒதுக்கீடு.!

நேற்று தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும் செந்தில் பாலாஜியை 18 நாட்கள் … Read more

கள்ளக்காதலை கண்டித்த கணவர்… கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி…! தென்காசியில் பயங்கரம்…!

தென்காசி மாவட்டத்தில் கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (56). இவரது மனைவி முத்து (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முத்துவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த கணேசன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் முத்து கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் கணேசன் … Read more

தொடக்கக்கல்வி பட்டய படிப்பில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழ் முழுவதும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டய பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் நடப்பாண்டு கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டய பயிற்சி மாணவ சேர்க்கை நடைபெற உள்ளது. எனவே இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 5ம் தேதி  … Read more