நாகர்கோவில் : மதுபோதையில் பேருந்து ஒட்டிய அரசு ஓட்டுநர் இடைநீக்கம்.!

நாகர்கோவில் : மதுபோதையில் பேருந்து ஒட்டிய அரசு ஓட்டுநர் இடைநீக்கம்.! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காட்டுப்புதூர் என்னும் கிராமத்திற்கு நேற்று இரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அது தான் அந்த ஊருக்குச் செல்வதற்கு கடைசி பேருந்து என்பதால் பேருந்தில் அதிகளவு கூட்டம் இருந்தது. இந்தப் பேருந்தை மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பென்னட் என்பவர் ஓட்டினார். இதையடுத்து இந்த பேருந்து அசம்புரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை … Read more

தமிழகத்தில் இனி சிபிஐ விசாரணைக்கு முன்அனுமதி பெற வேண்டும் – அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது. மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, {Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXV of 1946)-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை … Read more

சங்கரன் கோவில் – நாய் கடித்து முப்பத்திரெண்டு ஆடுகள் பலி.!

சங்கரன் கோவில் – நாய் கடித்து முப்பத்திரெண்டு ஆடுகள் பலி.! தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே செந்தட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் செந்தட்டிக்கும் வேப்பங்குளத்திற்கும் செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் ஆட்டிற்கான கொட்டகை அமைத்து சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் இவர் இன்று வழக்கம் போல் கொட்டகைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முப்பத்து இரண்டு ஆடுகள் நாயால் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தன. இதையடுத்து அவர் ஆடுகள் திருட்டைத் … Read more

சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி!

சென்னையில், ஆண்டுதோறும் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே  வரும் நிலையில், 4 முதல் 5 வருடங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். கடைசியாக 2018 -ஆம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்திய போது, சென்னையில் மொத்தமாக 57 ,366 தெருநாய்கள் இருப்பதாக தெரியவந்தது.  இந்த நிலையில், 5 வருடங்களில் 2 மடங்காக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக தெரிகிறது.  இந்நிலையில், இந்த ஆண்டு தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளதாக தகவல் … Read more

புதுக்கோட்டையில் கைப்பற்றப்பட்ட 388 கிலோ கஞ்சா! தலைதெறிக்க தப்பியோடிய குற்றவாளிகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒரு வாகனத்தை நிறுத்தி வாகன சோதனை செய்யுமாறு தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.  மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும், செக்போஸ்ட்களிலும், வாகன சோதனை நடைபெற்றது. மேற்கண்ட வாகன சோதனையில் நெடுஞ்சாலை ரோந்து காவல் அலுவலர்களும் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது, இரவு 0830 மணியளவில், அம்மாசத்திரம் ராயல் பாலிடெக்னிக் கல்லூரி அருகே, நெடுஞ்சாலை … Read more

அரசியலில் நுழைய உள்ளேன்.!! அதிகாரபூர்வமாக வெளியிட்ட நடிகர் சத்தியராஜ் மகள்.!!

அரசியலில் நுழைய உள்ளேன்.!! அதிகாரபூர்வமாக வெளியிட்ட நடிகர் சத்தியராஜ் மகள்.!! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவருடைய  மகன் சிபிராஜ். இவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார். தமிழ் சினிமாவில் தந்தை மகன் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடித்துள்ளனர்.  நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. மருத்துவராக இருக்கும் இவர் விரைவில் அரசியலுக்குள் நுழைய இருப்பதாகத் தகவல் வெளியானது. இது குறித்து சத்யராஜ் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.  அந்தப் … Read more

பொது மரத்தை வெட்டியதை தட்டி கேட்ட வாலிபர் – அரிவாளால் வெட்டிய தீயணைப்பு வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை.!!

பொது மரத்தை வெட்டியதை தட்டி கேட்ட வாலிபர் – அரிவாளால் வெட்டிய தீயணைப்பு வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை.!! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மேலப்பெருவிளை பிளசண்ட் நகர் பகுதியில் பொதுப் பாதையில் நின்ற முருங்கை மரத்தை தீயணைப்பு வீரர் ஆரோக்கிய செல்வன் என்பவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு வெட்டிக் கொண்டிருந்தார்.  இதை மேலபெருவிளைப் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஆண்டனி என்பவர் தடுத்து, நிழல் தரும் மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, வரும் 28 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமலாக்கத்துறையினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சோதனை நடத்தப்பட்டதில், அவரின் இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28 ஆம் தேதிவரை நீதிமன்ற … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் – மருத்துவமனை தகவல்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் – மருத்துவமனை தகவல்.!! தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஈசிஜி இயல்பாக இல்லை என்றும், காலை 9 மணிக்குப் பிறகுதான் உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியானது. … Read more

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.!!

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.!! தமிழக மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தது. ந்தக் குற்றச்சாட்டையடுத்து அமலாக்கத்துறையினர் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.  இதேபோல், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றது.  மத்திய ரிசர்வ் படை … Read more