நடிகர் விஜய் இப்படி செய்யலாமா? கொந்தளிக்கும் இணையவாசிகள்! நடந்தது என்ன? 

தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி தான்.  தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இருவர் இணைந்துள்ள இப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் படபிடிப்பானது வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாள் வருவதை ஒட்டி, லியோ படத்தின் அப்டேட் ஏதாவது வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.  … Read more

வனத்துறையின் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏன் 10 கோடி? – உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி.!

வனத்துறையின் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏன் 10 கோடி? – உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி.! தமிழகத்தில் வனத்துறையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களை நிரப்பக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு,  இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசுத்தரப்பில், பணியாளர்கள் தேர்வுக்கு 10 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்றும், இதற்கு அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் … Read more

#சிதம்பரம் | அரசுப் பள்ளியில் கொட்டிக்கிடந்த அமிலத்தில் அமர்ந்த 12ம் மாணவன் கவலைக்கிடம்!

கோடை விடுமுறை முடிந்து கடந்த 12 முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவன் அப்துல் ஹமீது, வழக்கம் போல் இன்று பள்ளி சென்றுள்ளார்.  அன்றைய தினம் வகுப்பறையில் உள்ள மின்விசிறி வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக, மாணவன் அப்துல் ஹமீது உள்பட அனைத்து மாணவர்களையும் பள்ளியின் அறிவியல் ஆய்வகத்தில் உள்ள இருக்கையில் அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தியுள்ளனர்.  மாணவன் … Read more

சாதிச்சான்றிதழ் வழங்க மறுத்த கோட்டாட்சியர் – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!

சாதிச்சான்றிதழ் வழங்க மறுத்த கோட்டாட்சியர் – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!! தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த வெயில் செல்வி என்பவர் தனது மகளுக்கு காட்டுநாயக்கர் சாதி என்பதற்கான சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்குச் சாதிச்சான்றிதழ் வழங்காமல் கால தாமதம் செய்துள்ளனர். இதையடுத்து வெயில் செல்வி இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி … Read more

நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ்!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இருவர் இணைந்துள்ள இப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  படத்தின் படபிடிப்பானது வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாள் வருவதை ஒட்டி, லியோ படத்தின் போஸ்டர் ஒன்றினை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  வெளியான போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியுடனும், விஜய்க்கு பின்னால் இருப்பவர்கள் … Read more

கிழிந்த உடையில் கம்ப்ளைண்ட் கொடுக்க வந்த மூதாட்டி.. புத்தாடை வாங்கி கொடுத்த காவல் தேவதை.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகே மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்திற்கு கிழிந்த ஆடையுடன் புகார் கொடுக்க வந்த நிலையில் அவருக்கு காவல் ஆய்வாளர் புத்தாடை வாங்கி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  வேலூர் மாவட்டத்தில் உள்ள சீவூர் பகுதியை சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர், குடியாத்தத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் லட்சுமி மூதாட்டியின் உடை கிழிந்து இருப்பதை பார்த்து அவருக்கு புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் மூதாட்டி … Read more

தாராபுரத்தில் பரபரப்பு..! தனியார் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் – அரசு பேருந்து ஓட்டுனர் உட்பட 7 பேர் கைது

தாராபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் பூபதி (36). இவரை நேற்று இரவு தாராபுரம் பேருந்து நிலையத்தில் 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் … Read more

ஒருபுறம் ஆள்குறைப்பு, மறுபுறம் ஒப்பந்தப் பணி! பொதுத்துறை நிறுவனங்களில் பலி கொடுக்கப்படும் சமூகநீதி – அன்புமணி இராமதாஸ் வேதனை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த பத்தாண்டுகளில் 2.7 லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, பொதுத் துறை நிறுவன வேலைவாய்புகளில் 42.50% பணியிடங்கள் ஒப்பந்தப் பணிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் சமூகநீதி பலி கொடுக்கப்படுவதையே இந்த புள்ளிவிவரம் காட்டுவதாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புச் சூழல் 2012-13 முதல் 2021-22 வரையிலான காலத்தில் எவ்வாறு … Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் … Read more

தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர் உள்பட 5 பேர் இடமாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர் உள்பட 5 பேர் இடமாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.! தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் துணை இயக்குனர்கள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆணை பிறப்பித்துள்ளார். அந்த ஆணையில், *தொடக்கக்கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக இருந்த ரா. பூபதி, பள்ளிக் கல்வி இயக்கத்தின் துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.   *பெற்றோர் ஆசிரியர் கழக … Read more