ஷாங்காய் நகரில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளருடன் சந்திப்பு

துணைத் தூதுவர் அனுர பெர்னாண்டோ 2022 பெப்ரவரி 23ஆந் திகதி சீனாவின் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஃபூ ஜிஹோங்கை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.  2022ஆம் ஆண்டு சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65வது ஆண்டு நிறைவையும் ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 70வது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. சகோதர நகரங்களாக, ஷாங்காய் மற்றும் கொழும்பு பல துறைகளில் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.  இரு தரப்பினரும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் … Read more

கிழக்கு மாகாணத்தில் 1,272 சிறுவர்கள் ,சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் பராமரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட செயலமர்வு இன்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் கருத்து தெரிவிக்கையில், அனாதைகள், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான சேவையினை ஆற்றிவருகின்ற சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் திருகோணமலையில் தலைமைக் காரியாலத்தினையும், கிழக்கு மாகாணத்திலுள்ள … Read more

தவறான  செய்திகளை வெளியிட்டு பாராளுமன்றம் , உறுப்பினர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடுக்கு எதிராக நடவடிக்கை

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடு இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு சதி செய்து சீர் குலைப்பதாயின் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரை அழைத்து கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். பேச்சு சுதந்திரம் மற்றும் செய்திகளை வெளியிடும் … Read more

இடி மழையுடன் பலத்த காற்று

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

இந்தியாவில் புதிதாக 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 4ஆயிரத்து 184 பேர் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் இந்திய மாநிலமான கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 இலட்சத்து 15ஆயிரம்து 459 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4Mapuj;J 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளdu;. இதில் … Read more

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 … Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸூடன் சந்திப்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 09ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவர் சுங்கை அன்புடன் வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கையிலான அவரது பதவிக் காலத்தின் போது தூதுவருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்காவை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கருதுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் … Read more

கச்சத்தீவு திருவிழா நாளை ஆரம்பம்

கச்சத்தீவு திருவிழா நாளை (11) ஆரம்பம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்யவுள்ளனர். இந்திய-இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம். இந்திய-இலங்கை பக்தர்களிடையே இணக்கமான உறவை மேம்படுத்த பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் இந்த திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக … Read more

பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பிணை

இந்தியாவின் முன்னள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பிணையில் செல்ல இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதித்துள்ளது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த வந்த நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்குவதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தது. இதற்கு இந்திய  அரசு வழக்கறிஞர் சிபிஐ … Read more

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 'மித்துறு பியஸ' மூலம் ஆலோசனை சேவை   

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட  ‘மித்துறு பியஸ’ ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இலவசமாக சேவை வழங்கப்படும். சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதுடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும். சில நிலையங்களில் வார … Read more