ஹிஜாப் விவகாரம்: `இவர்களின் தாத்தாக்கள் ஏன் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை' -சுப்ரமணியன் சுவாமி

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், கர்நாடகாவில் நேற்று பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப்பை கழற்றிய பிறகே பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கர்நாடகாவில் உள்ள ஷிவமோக கல்லூரியில், 30 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் வருவோம் எனக் கூறி வகுப்பை புறக்கணித்தனர். ஹிஜாப் சர்ச்சை இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக … Read more

உள்ளாட்சி ரேஸ்: அடித்து ஆடும் அதிமுக; குஸ்தி சண்டையில் திமுக! -திருப்பூர் மாநகரம் யாருக்கு?

திருப்பூர் மாநகராட்சி ஆளும்கட்சியாக இருந்தாலும் தி.மு.க-வுக்கு கொங்கு மண்டலம் எப்போதும் கண்டம்தான். தற்போதைய அமைச்சரவையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தி.மு.க-வுக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். பார்ப்பதற்கு பவர்புல்லாக தெரிந்தாலும், கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டும்தான் தி.மு.க வென்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் `ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!’ – அரசுக்குக் கடிதம் எழுதிய திருப்பூர் கான்ட்ராக்டர் அதில் 2 தொகுதிகள் புறநகர் பகுதியை சேர்ந்தவை. மாநகராட்சி பகுதிகளில் … Read more

அண்ணியை அடித்த `லட்சிய நடிகர்' எஸ்.எஸ்.ஆர்., மகள்; அதிகாலையில் விசாரித்த முதல்வர் அலுவலகம்?!

‘லட்சிய நடிகர்’ என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப் ஶ்ரீபட்ட மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் வீட்டுச் சண்டை காவல் நிலையம் வரை வந்து பரபரப்புச் செய்தி ஆகியிருக்கிறது. எம்.ஜி.ஆர்., நம்பியார் காலத்தில் சினிமாவில் நடித்து, பிறகு அரசியலிலும் ஈடுபட்ட மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. எஸ்.எஸ்.ஆர் இருந்த போது மட்டுமல்ல, அவர் மறைந்து வருடங்கள் பல கடந்தும் இன்றும் கூட்டுக்குடும்பமாகவே வசித்து வருகின்றனர், அவரது வாரிசுகள். எஸ்.எஸ்.ஆர். மகள் லட்சுமி, எஸ்.எஸ்.ஆரின் மகன் கண்ணனின் … Read more

நாட்டின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு விரைவில் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்த நிலையில், நாட்டின் இளம் மேயராகப் பொறுப்பேற்றார். 21 வயதில் ஆர்யா ராஜேந்திரன் மேயராகப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், அவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தொகுதி எம்.எல்.ஏ சச்சின் தேவ் என்பவரைத்தான் ஆர்யா கரம்பிடிக்க உள்ளார். ஆர்யா ராஜேந்திரன் சிறுமியாக இருக்கும்போதே சி.பி.எம் அமைப்பின் பால சங்கத்தில் … Read more

"என் மகளிடம் நான் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்வேன்" – மிஷ்கின் நெகிழ்ச்சி!

கடைசி விவசாயி படம் பார்த்த பிறகு மிஷ்கின் வெளியிட்டுள்ள காணொலியில் ‘நூற்றாண்டில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படம் இது’ எனப் பாராட்டியுள்ளார். கடைசி விவசாயி படம் இயக்குனர் மணிகண்டனால் எடுக்கப்பட்டு பிப் 11 திரையரங்குகளில் வெளியானது. விஜய்சேதுபதி இந்தப் படத்தைத் தயாரித்ததோடு அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். “இன்டெர்வெல் பார்த்துட்டு விழுந்து விழுந்து அழுதுருக்கணும். இரண்டு கண்ணீர் துளியோடு அமர்ந்திருந்தேன். இந்த இரவு முழுதும் என் வாழ்நாளை காட்டிய படமாக இதை நான் பார்க்கிறேன். என் தாயும் தந்தையரும் … Read more

உள்ளாட்சி ரேஸ்: அதிர வைக்கும் நேரு பாலிட்டிக்ஸ்; சுணக்கத்தில் அதிமுக! -திருச்சி மாநகர் யாருக்கு?

திருச்சி மாநகராட்சி தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராகவே அவ்வப்போது பேசப்படும் திருச்சி மாநகரம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஆரவாரமாகச் சந்தித்து வருகிறது. மலைக்கோட்டை மாநகரின் தலைமைப் பதவியைப் பிடிப்பதற்காகக் கட்சிகளிடையே பிரசார யுத்தங்கள் நடந்து வருகின்றன. கே.என்.நேரு, அன்பில் மகேஷ் திமுக  ‘திருப்பு முனையை ஏற்படுத்தும் திருச்சி’ என்கிற சென்டிமென்ட்டில் தீர்க்கமாக இருக்கிறது தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வை ஒன்பது தொகுதிகளிலும் ‘வாஷ் அவுட்’ செய்து திருச்சியை தங்களது கோட்டையாக மாற்றிக் காட்டினார் அமைச்சர் கே.என்.நேரு. அதே … Read more

“பூவே உனக்காக படம் ஒரு வருஷம் ஓடும்னு நினைச்சேன். ஆனா…" – நினைவுகள் பகிரும் இயக்குநர் விக்ரமன்

விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று `பூவே உனக்காக’. இந்தப் படத்துக்கு முன் அவர் ‘ரசிகன்’, ‘தேவா’, ‘ராஜாவின் பார்வையிலேயே’ சந்திரலேகா’ என ‘சி’ சென்டர் படங்களைக் கொடுத்து வந்தார். அவரை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்ததில் இந்தப் படத்துக்கு முக்கிய பங்கிருக்கிறமு. அதைப் போல இயக்குநர் விக்ரமன் கரியரிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘புதிய மன்னர்கள்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ இரண்டுமே பெரிய வெற்றிபெற்றவில்லை. ஆனால், இந்தப் படம் 270 … Read more

BB Ultimate -17: `கல்யாணம் முக்கியம் குமாரு!' – நிரூப்புக்கு கிடைத்த அட்வைஸ்; வனிதாவின் புதிய உறவு!

“வேலன்டைன்ஸ் டே கொண்டாட்டம்’ என்கிற பெயரில் பிக் பாஸ் வீடு முழுக்க இன்று ஒரே அன்பு மயமாக இருந்தது. இத்தனை நாளாக முறைத்துக் கொண்டிருந்தவர்கள் கூட ‘நாம ஒரு குடும்பம்’ என்று கட்டியணைத்துக் கொண்டார்கள். ஆக அளவிற்கு மிஞ்சினால் அன்பும் ஒரு காமெடியாகி விடும் என்கிற விதமாக இந்த நெகிழ்ச்சி அளவில்லாமல் பெருகி ஓடிக் கொண்டிருந்தது. எது உண்மையான அன்பு, எது நிகழ்ச்சிக்காக காட்டப்படும் தற்காலிக அன்பு என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இரண்டறக் கலந்திருந்தது. எபிசோட் 17-ல் … Read more

சுதந்திர இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த கோவை முதியவர்! – 106 வயதில் மரணம்!

கோவை கருப்பராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். 106 வயதான, அவர் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்தார். விவசாயியான மாரப்பனுக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் மூலம் 4 பேரன்கள், 4 பேத்திகள் உள்ளனர். சுதந்திர இந்தியாவுக்கு முன்பே பிறந்ததால் காந்தி, நேரு போன்ற தலைவர்களின் பணிகளை நேரடியாக பார்த்தவர். வாக்கு கோவை: வாகனம் மோதியது தொடர்பாகத் தகராறு… கொலைவெறித் தாக்குதலில் ஒருவர் கொலை! – போராட்டம், பதற்றம் சுதந்திர இந்தியாவின் … Read more

பாலிவுட்டில் டிஸ்கோ டான்ஸை பிரபலப்படுத்திய பாடகர் பப்பி லஹிரி மறைந்தார்!

பாலிவுட்டில் 1980, 90 களில் டிஸ்கோ நடனத்தை அறிமுகம் செய்து பிரபலமானவர் பப்பி லஹரி. சிறந்த இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விளங்கிய பப்பி லஹிரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த திங்கள் கிழமை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய் கிழமை மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடனே டாக்டர் ஒருவரை உடனே வீட்டிற்கு அழைத்து குடும்பத்தினர் சிகிச்சை கொடுத்தனர். ஆனால் டாக்டரின் பரிந்துரையின் பேரில் … Read more