கேரளா: `திருமணமான ஒரே வாரத்தில் வரதட்சணை கொடுமை' – இளம்பெண் புகார்… ஜெர்மனுக்குத் தப்பிய கணவன்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், பந்தீரங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பி.கோபால் (29). இவர் ஜெர்மன் நாட்டில் இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார். ஜெர்மன் நாட்டில் அவருக்கு குடியுரிமை உள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் பி.கோபாலுக்கும் எர்ணாகுளம் பறவூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 5-ம் தேதி குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இன்ஜினீயரிங் முடித்த அந்த இளம்பெண்ணும் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சணை எதுவும் வேண்டாம் எனக் கூறிய … Read more

Inga Naan Thaan Kingu Review: காமெடியில் சாதிக்கும் சந்தானம் & கோ; படமாக க்ளிக் ஆகிறதா?

திருமணத் தகவல் மையத்தில் வேலை பார்க்கும் வெற்றி (சந்தானம்), சொந்தமாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கியதில் 25 லட்ச ரூபாய் கடனில் உள்ளார். ஆதரவற்றவரான அவரை மணந்துகொள்ளப் பெண்ணையும் கடனை அடைக்க 25 லட்சம் வரதட்சணையும் தரும் வரனைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரத்னபுரி ஜமீனான விஜய்குமார் (தம்பி ராமையா) தன் மகளான தேன்மொழியை (பிரியாலயா) வெற்றிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் அக்குடும்பமே ஏற்கெனவே கடனிலுள்ள குடும்பம் என்பது வெற்றிக்குத் தெரிய … Read more

மெட்ரோ Vs மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம்… மாநில அரசை விமர்சிக்கும் மோடி!

பாஜக ஆட்சி நடைபெறாத தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் டெல்லியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் சேவை வழங்கப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், கல்லூரி முடித்த பெண்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கிறது. இன்றும் கூட பள்ளி, கல்லூரி முடித்தவுடனேயே பெண்களைத் திருமணம் செய்துவைக்கும் சூழலில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் பெண்களை சுயமாக சம்பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. மகளிர் கட்டணமில்லா பேருந்து இப்படியிருக்க, தெலங்கானாவில் ஹைதராபாத் … Read more

Swati Maliwal: `மாதவிடாய் என்றபோதும், வயிற்றில் உதைத்தார்' – கெஜ்ரிவால் PA குறித்து ஸ்வாதி மாலிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் இடைக்கால ஜாமீனில் வெளிவந்ததையடுத்து, திங்களன்று அவரைச் சந்திக்கச் சென்ற ஆம் ஆத்மி எம்.பி-யும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஸ்வாதி மாலிவால் போலீஸில் அன்றே புகார் அளித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாகவே, பிபவ் குமார் ஸ்வாதி மாலிவாலிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும், கெஜ்ரிவால் முழு சம்பவத்தையும் அறிந்து … Read more

நிறம் மாறும் டாய்லெட்டுகள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

நிறங்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது, பச்சை, மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, ஊதா… பல வண்ணங்கள், பல அடையாளங்கள். ஆனால், இந்த அனைத்து நிறங்களும் உங்களின் கழிவறையில் கறையாகப் படிந்திருந்தால், நிறங்களையே வெறுத்து விடுவோம், அல்லவா? ஒரு வீட்டில், டாய்லெட் சுத்தமாக இருந்தால் தான் அந்த வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்நிலையில், நம் டாய்லெட்டில் உண்டாகியிருக்கும் பிரச்னைகள் என்ன, டாய்லெட்டில் உருவாகும் கறைகளால் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். … Read more

What to watch on Theatre & OTT: எலெக்ஷன்; இங்க நாங்க தான் கிங்கு,கன்னி; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Election (தமிழ்) Election தமிழ் இயக்கத்தில் விஜய்குமார், பிரீத்தி அஸ்ரானி, ஜார்ஜ் மரியன், பாவேல் நவகீதன், திலீபன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Election.’ தேர்தல் அரசியலில் நடக்கும் பிரச்னைகளைப் பேசும் இத்திரைப்படம் மே 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இங்க நாங்கதான் கிங்கு (தமிழ்) இங்க நாங்கதான் கிங்கு ஆனந்த நாரயணன் இயக்கத்தில் சந்தானம், தம்பி ராமையா, பிரியா லையா, விவேக் பிரசண்ணா, பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இங்க நாங்கதான் கிங்கு’. … Read more

"கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகச் சிறப்பாகயிருக்கிறது" – ராஷ்மிகா மந்தனா!

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான, `அடல் சேது’ பாலம் கடந்த ஜனவரி மாதம் மும்பையில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. ஆறுவழிச் சாலையாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பாலம், மொத்தம் 21.8 கி.மீ நீளம்கொண்டது. இதில், 16.5 கி.மீ தூரம் கடலில் கட்டப்பட்டிருக்கிறது. மும்பையின் செவ்ரி பகுதியில் தொடங்கி, நவி மும்பையின் நவசேவா துறைமுகத்தை இந்தப் பாலம் இணைப்பதால், `மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்’ என்று அழைக்கப்படுகிறது. அடல் சேது `பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தலாம்!’ – `அடல் சேது’ பால … Read more

கீழே கிடந்த விலை உயர்ந்த வாட்ச்..! – நேர்மைக்காக இந்திய சிறுவனை கெளரவித்த துபாய் காவல்துறை!

உலக நாடுகளில் சுற்றுலாவுக்கென பெயர்பெற்ற நாடுகளில் முக்கியமானது துபாய். ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவனைத் துபாய் காவல்துறை பாராட்டி, சான்றிதழ் வழங்கி பாராட்டியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலில்,“சுற்றுலா தலத்துக்குத் தன் தந்தையுடன் சென்ற சிறுவன் முகமது யூனுஸ், அங்கு ஒரு விலை உயர்ந்த கை கடிகாரத்தைப் பார்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, உடனடியாக, சுற்றுலாத் துறை காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். #News | Dubai … Read more

மும்பை விளம்பர போர்டு விபத்து: 3 நாள் தேடுதலுக்கு பிறகு ராஜஸ்தானில் சிக்கிய உரிமையாளர்!

மும்பையில் திடீரென வீசிய புழுதிப்புயல் காரணமாக காட்கோபரில் பெட்ரோல் பம்ப் மீது ராட்சத விளம்பர போர்டு விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பெட்ரோல் பம்பில் மழைக்கு ஒதுங்கிய 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 16 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டனர். மேலும் 70 பேர் காயம் அடைந்தனர். விபத்துள்ளான விளம்பர போர்டை ஈகோ மீடியா என்ற நிறுவனம் தான் அமைத்து இருந்தது. விபத்து நடந்த பிறகு ஈகோ மீடியாவின் இயக்குனர் பாவேஷ் பிண்டே தலைமறைவாகிவிட்டார். அவர் மீது … Read more