“தாக்கரே குடும்பத்துக்கு பிரச்னை என்றால் முதல் ஆளாக நான் இருப்பேன்!” – மோடி போடும் புது கணக்கு?

மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்ததாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு இருக்கிறது. சிவசேனாவை இரண்டாக உடைத்தாலும் வரும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே மீதான பா.ஜ.கவின் அணுகுமுறை இருக்கும் என்ற கருத்துகள் வெளி வர தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் பா.ஜ.க கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பா.ஜ.க வட்டாரங்கள் பேச தொடங்கியுள்ளதாம். அதனை நிரூபிக்கும் வகையிலே … Read more

Sundar.C Press Meet 4: “விஜய்-கிட்ட சொன்ன கதையை அஜித்தை வைத்துப் பண்ணினேன்" – சுந்தர்.சி

‘பொன்னியின் செல்வன்’ தமிழ் சினிமாவின் நீண்ட கால கனவு. அதை திரைப்படமாக்கித் திரைக்குக் கொண்டுவருவது பல முன்னணி இயக்குநர்களின் கனவாக இருந்தது. அதைச் சாத்தியப்படுத்தினார் மணிரத்னம். எல்லா இயக்குநர்களுக்குள்ளும் அப்படியொரு கனவுப் படம் இருக்கும். அதுபோல சுந்தர் சி யின் கனவுப் படம் ‘சங்கமித்ரா’. இது குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் சுந்தர் சி, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை விட பிரமாண்டமானது தன்னுடைய ‘சங்கமித்ரா’ என்று பெருமிதத்துடன் சொல்கிறார். விஜய்க்குச் சொன்ன கதையில் அஜித் நடித்தது, ஹாரர் … Read more

Lok Sabha Election 2024: வாக் ஷோ… பிரஸ் மீட்..! – குஜராத்தில் வாக்களித்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா … Read more

Doctor Vikatan: வீஸிங் பிரச்னை உள்ளவர்கள் சம்மரில் பழைய சாதம் சாப்பிடலாமா?

Doctor Vikatan: வீஸிங் பிரச்னை. ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள், கோடைக்காலத்தில் பாதாம் பிசின், இளநீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா? கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பழைய சோறு சாப்பிடலாமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் கட்டுரையாளர்: சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் வீஸிங் (wheezing) பிரச்னை உள்ளவர்களை இரண்டாகப் பிரிக்கலாம். சிலருக்கு குளிர்காலத்தில் வீஸிங் பிரச்னை வரும். அவர்கள் கோடைகாலத்தில் நார்மலாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பழையசோறு, பாதாம் பிசின், இளநீர், வெந்தயம் என … Read more

தெலங்கானா: `சட்டசபை தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் முந்துமா காங்கிரஸ்?' – களநிலவரம் என்ன?

தெலங்கானாவில் கடந்த 2014 தேர்தலில் டி.ஆர்.எஸ் 11, காங்கிரஸ் 2, பா.ஜ.க, ஏ.ஐ.எம்.எம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியது. 2019 தேர்தலை பொறுத்தவரையில் டி.ஆர்.எஸ் 9, பா.ஜ.க 4, காங்கிரஸ் 3, ஏ.ஐ.எம்.எம் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. இந்தசூழலில்தான் கடந்த ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற்றது. மூன்றாவது முறையாக முதல்வராகிவிடும் கனவில் இருந்தார், சந்திரசேகர் ராவ். அதேநேரம் கர்நாடகாவில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள விரும்பிய காங்கிரஸ் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டது. … Read more

Tarot Review: எதிர்காலத்தைச் சொல்லும் கார்டுகளும் அமானுஷ்யமும்! பயமுறுத்துகிறதா இந்த ஹாரர் சினிமா?

ஹாலிவுட்டிலிருந்து மற்றொரு சூப்பர்நேச்சுரல் ஹாரர் படைப்பாக திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `டாரோ’ (Tarot). ஹாலிவுட் இயக்குநர்கள் ஸ்பென்சர் கோஹெனும் அன்னா ஹால்பெர்க்கும் இணைந்து இந்தத் திகில் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இயக்குநர் அன்னா ஹால்பெர்க் இயக்கும் முதல் திரைப்படம் இதுதான். 1992-ல் எழுத்தாளர் நிக்கோலஸ் ஆடம்ஸ் எழுதிய ‘ஹோரோஸ்கோப்’ என்ற நாவலைத் தழுவித்தான் இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். Tarot Movie Review வருங்காலத்தில் நிகழக்கூடிய விஷயங்களைக் கணிப்பதற்காக இந்த டாரோ அட்டையை வெளிநாடுகளில் பயன்படுத்துவார்கள். சுருங்கச் சொன்னால், டாரோ அட்டையை வாசிப்பதும் … Read more

கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்களின் நிலை என்னவாகும்? மருத்துவ விளக்கம்..!

கொரோனா குழப்பம் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போது கோவிஷீல்டு வடிவத்தில் மீண்டும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், அனைத்து நாடுகளையும் ஸ்தம்பிக்க வைத்தது. இதனை எதிர்கொள்ளும் முயற்சியாக தடுப்பூசி முயற்சிகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டன. கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை இந்தியா தனது சொந்த முயற்சியில் தயாரித்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா என்ற மருந்து நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பூசியைத் தயாரித்தது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலுடன் பெரும்பாலான … Read more

`காலிஸ்தான் அமைப்பிடமிருந்து கெஜ்ரிவாலுக்கு நிதி..!' – NIA விசாரணைக்கு டெல்லி ஆளுநர் பரிந்துரை

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலைக் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைதுசெய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலை, திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, திகார் சிறையில் அவர்மீதான நீதிமன்ற காவல் மே 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் – அமலாக்கத்துறை – கெஜ்ரிவால் இதற்கிடையில், தன்மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை சட்ட விரோதம் என … Read more

சென்னை: கடும் வாக்குவாதம்… ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர்!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (55) , இவரின் மனைவி பத்மினி (52). இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். எண்ணூரில் உள்ள தனியார் கம்பெனியில் செல்வம் வேலை செய்து வந்தார். விருப்ப ஓய்வு பெற்ற அவர், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வருகிறார். இந்நிலையில் செல்வத்துக்கும் அவரின் மனைவி பத்மினிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வம், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பத்மினியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே … Read more