கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி

SARS-CoV-2 vs Guillain-Barre Syndrome: தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் பதிவு செய்யப்பட்ட மரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்தவர், தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் என்றும், அவர் குய்லின்-பாரே சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்றும், தென்னாப்பிரிக்காவின் சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நோயாளியின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையே தொடர்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த சுகாதார கண்காணிப்பு … Read more

போர்ப்பயிற்சித் தொடங்கிய சீனா : தைவான் கடற்பகுதியில் உச்சக்கட்ட பதற்றம்

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வரும் நிலையில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது இந்தப் பயணம் சீனாவைக் கொந்தளிப்படைய வைத்துள்ளது.  இதுகுறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங், அமெரிக்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இந்த நிலையின் தைவானின் கடற்பரப்பைச் சுற்றி சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளதால் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் … Read more

தைவானில் கால் வைத்த நான்சி பெலோசி : சீனா இனி என்ன செய்யும்?

சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இதற்கு சீனா எப்படியெல்லாம் எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம். சீன உள்நாட்டுப் போரின்போது பிரிந்து சென்ற தைவானை, தங்களது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா கூறி வருகிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும்,  ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதியுமான நான்சி பெலோசி தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தைவானையும் சேர்த்துக் கொண்டார். … Read more

புடின் காதலியின் சொத்துக்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு நிறைந்தவர்களை குறி வைத்து, அமெரிக்கா பொருளாதார தடை விதித்து வருகிறது. அந்த வகையில், விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவின் விசாவை பிடன் நிர்வாகம் முடக்கியுள்ளதாகவும், அவரது சொத்துகள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதாகவும் அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.   உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிக்கும் ரஷ்ய ஊடக … Read more

தாய்லாந்தின் புதிய கஞ்சா கொள்கையால் நாட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Cannabis in Thailand: தாய்லாந்தில் மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கியதன் விளைவாக அந்த நாட்டின் சுற்றுலாவில் மிகப் பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கொண்டாடும் பல நிகழ்வுகள் தாய்லாந்தில் களைகட்டியுள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் களிப்புடன் தாய்லாந்திற்கு வருகை தருகின்றனர். 2018 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மரிஜூவானாவை மருத்துவ பயன்பாட்டிற்காக சட்டபூர்வம் ஆக்கிய தாய்லாந்து, இந்த ஆண்டு, … Read more

Cartwheel Galaxy: சுழலும் வண்ண வளையத்தை வெளிப்படுத்தும் கார்ட்வீல் கேலக்ஸியின் புதிய படம்

James Webb Space Telescope: ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கிடைத்த புகைப்படங்கள் கார்ட்வீல் கேலக்ஸியின் வண்ண வளையத்தை இதுவரை இல்லாத அளவு தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) செவ்வாயன்று தெரிவித்தன. இந்த படத்தில், ஹப்பிள் தொலைநோக்கியுடன் ஒப்பிடுகையில், வெப் தொலைநோக்கியானது, அரிய வளைய விண்மீனின் படங்களை இதற்கு முன்பு எடுக்கப்பட்டதை விட மிக அதிகமான தெளிவுடன் எடுத்துள்ளது. இதில், பெரிய அளவிலான தூசிகளை … Read more

சீனாவின் மிரட்டலை மீறி, தைவான் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் செல்லும் நான்சி பெலோசி செல்லும் நிலையில், ​​தைவானுக்கு கிழக்கே நான்கு போர்க்கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.  நான்சி பெலோசி தற்போது மலேசியாவில் உள்ள நிலையில், அதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு நான்சி செல்ல உள்ளதாக அமெரிக்கா, தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவுப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. சீனாவின் தீவிர எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி செவ்வாய்கிழமை தைவான் … Read more

அய்மன் – அல் – ஜவாஹிரி : மருத்துவரில் இருந்து அல்கொய்தா தலைவரானது எப்படி?

பொதுவாக ஏழ்மையான குடும்பப் பின்னனியைச் சேர்ந்த இளைஞர்கள், தீவிரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களில் சேர்வதுண்டு. ஆனால், அய்மன் – அல் – ஜவாஹிரியின் கதை அதுவல்லை. அவர் எகிப்தின் கெய்ரோ நகரைச் சேர்ந்த செல்வாக்கான குடும்பத்தில் 1951-ம் ஆண்டு பிறந்தவர். ஜவாஹிரியின் தாத்தா கெய்ரோவில் உள்ள மிக முக்கியமான மசூதிகளில் ஒன்றான அல்-அஸ்ரினின் இமாம் ஆவார். இவரது தந்தை மருத்துவர் ஆவார். 15 வயதில் அய்மன் – அல் – ஜவாஹிரி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை … Read more

பிரபஞ்சத்தின் அழகு கிரகம் செவ்வாய்: சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் படத்தை வெளியிட்ட நாசா

புதுடெல்லி: பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டறிவது அசாத்தியமானது என்றாலும் அதை சாத்தியமாக்கும் முயற்சிகளில் விண்வெளி ஆய்வுகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக நாசா பல்வேறு முன்னெடுப்புகளை செய்கிறது. அதில் இருந்து பெறப்படும் சில அதிசயமான மற்றும் வித்தியாசமான முயற்சிகளை சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடுகிறது நாசா. நாசா வெளிப்படுத்தும் பிரபஞ்சத்தின் ரகசியங்கள் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது என்று சொன்னாலும், பல ஆகிய காட்சிகளும் காணக் கிடைக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீல நிற கோடுகள் இருக்கும் ஒரு அழகான காட்சியை … Read more

பின் லேடனின் வலது கையாக இருந்த அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்: ஜோ பைடன்

கடந்த 2011ம் ஆண்டு அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர்  ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, மிகப்பெரிய பின்னடைவாக,  ஒசாமா பின் லேடனின் வலது கையாக இருந்த அதன் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் உத்தரவின் படி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்த உலகளாவிய பயங்கரவாதி மற்றும் அல்-கொய்தா தலைவன் அய்மன் அல்-ஜவாஹிரியை ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தியது. இதை அமெரிக்க … Read more