தென்னாப்பிரிக்க இரவு விடுதியில் 21 பதின்ம வயதினர் மர்மமான வகையில் மரணம்

தென்னாப்பிரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிழக்கு லண்டனின் கடலோர நகரத்தில் உள்ள இரவு விடுதியில் குறைந்தது 21 பேர் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து தென்னாப்பிரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர், மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குளிர்கால பள்ளித் தேர்வுகள் முடிவடைந்ததைக் கொண்டாடுவதற்காக ஒரு விருந்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. உள்ளூர் செய்தித்தாள் டெய்லி டிஸ்பாட்ச், … Read more

Gold Import Ban: ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்

மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளை இறுக்கும் விதமாக ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய ஜி 7 நாடுகளின் குழு தடை விதிக்கும் என்று தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடக்க, ஏழு (G7) நாடுகளின் குழு ரஷ்ய தங்கம் இறக்குமதியை தடை செய்யும் என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (2022 ஜூன் 26) தெரிவித்துள்ளது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டில் இது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் … Read more

கருக்கலைப்பு தடை; அமெரிக்க தெருக்களில் வலுக்கும் மக்கள் போராட்டம்

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்த முடிவுக்கு சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெரும்பாலான அமைப்புகள் மற்றும் சமூக சேவையாளர்கள் இந்த முடிவை பழமைவாத முடிவு என எதிர்க்கின்றனர்.  தெருக்களில் மக்கள் போராட்டம் அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டதை அடுத்து, மனித உரிமைகள் உணர்வுள்ள மக்கள், ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் வீதியில் இறங்கி  போராடி வருகின்றனர். நீதிமன்றத்தின் இந்த முடிவு … Read more

World War III: மூன்றாம் உலகப் போர்? லண்டன் மீது முதலில் குண்டு வீசப்படும்

மூன்றாம் உலகப் போர் நடந்தால் முதலில் லண்டன் மீது குண்டு வீசப்படும் என்று விளாடிமிர் புட்டினின் நெருங்கிய வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. உக்ரைன் மீதான படையெடுப்பால் ஏற்கனவே உலக அரங்கில் அதிருப்தியை ரஷ்யா எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது. மூன்றாம் உலகப் போர் வெடித்தால், நேட்டோவின் இலக்காக முதலில் லண்டன் மீத் தாக்குதல் நடத்தப்படும் அது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான … Read more

Monkeypox: வேகமாக பிறழும் குரங்கு அம்மை வைரஸ்; WHO கூறுவது என்ன…

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோய், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குறைந்த அளவில் பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை வைரஸ் தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்தியாவில், சில சந்தேகத்திற்கிடமான சில தொற்று பாதிப்புகள் இருப்பதாக அறிக்கைகள் இருந்தாலும், அது இன்னும் கண்டறியப்படவில்லை. அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை போர்ச்சுகலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுகையில், இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவுவதால் … Read more

10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தவறவிட்ட ஐபோன்… புதுசுபோல வேலை செய்யும் அதிசயம்!

கடந்த ஆகஸ்ட் 2021 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவைன் டேவிஸ் என்பவர் இளங்கலை படிப்பை முடித்தார். அதை கொண்டாடுவதற்காக சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதி அருகே நடத்தப்பட்ட கிராஜுவேஷன் பார்ட்டியில் பங்கேற்றார். அப்போது அவர், கைதவறி தனது ஐபோனை நதியில் போட்டுவிட்டார். இதையடுத்து அவர் நதியில் இருந்து போனை மீட்டெடுப்பது சாத்தியமற்றது என எண்ணி வீடுதிரும்பிவிட்டார். இதையடுத்து ஏறக்குறைய பத்து மாதங்களுக்குப் பிறகு, அதே ஆற்றில் தனது குடும்பத்துடன் மிகுவல் பச்சேகோ என்பவர் கேனோயிங் சென்றார். … Read more

அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை; அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வழங்கும் போது, ​​உச்ச நீதிமன்றம், தனது 50 அண்டு கால பழைய தீர்ப்பை ரத்து செய்துள்ளது.  ஐந்து தசாப்தங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தி, விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யும் உரிமை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய வழக்கில், கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  உச்சநீதிமன்றம் Roe Vs Wade வழக்கின் தீர்ப்பு … Read more

முத்து மாலையாய் நேர்கோட்டில் அணிவகுத்து நிற்கும் கோள்கள்: வானில் ஒரு அதிசய நிகழ்வு

நியூயார்க்: நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஐந்து முக்கிய கிரகங்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்கும் அரிய கிரக இணைப்பு ஏற்பட்டுள்ளது. இது மனித கண்களுக்குத் தெரியும் என்பது கூடுதல் செய்தி.  பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நேற்று காணப்படத் தொடங்கிய இந்த நிகழ்வை இன்னும் நான்கு நாட்கள் வரை வானில் காணலாம் என்றும் வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிய நிகழ்வை அதிகாலை … Read more

தந்தைக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டு உறவு இல்லை – பாலினம் மாறிய எலன் மஸ்க்கின் மகன் ஆவேசம்

கடந்த 2000 ஆம் ஆண்டு எலன் மஸ்க்கும் ஜெனிபர் ஜஸ்டீன் வில்சன் என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளன. பின்னர் 2008ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர். இந்நிலையில் எலன் மஸ்க்கிற்கு முதலாவதாக பிறந்த இரட்டை குழந்தைகள்  சேவியர், கிரிப்ஃபின் என பெயரிடப்பட்டனர். இதில் மூத்த மகன் தான் சேவியர் மஸ்க். இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன் தங்களது 18வது பிறந்த நாளை கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு … Read more

நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா

1969 ஆம் ஆண்டு நாசாவின் அப்போலோ 11 மிஷனாக நிலவில் இருந்து  இருந்து  47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) எடை கொண்ட பாறை பூமிக்கு கொண்டு வரப்பட்டது.  இந்த பாறையின் துகள்களை வைத்து நிலவின் மண் மற்றும் பாறைகளில் நச்சுத்தன்மையுள்ளதா என்ற ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சில பூச்சிகள், மீன்கள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு அந்த நிலவு பாறையின் துகள்கள் உணவாக அளிக்கப்பட்டன. பின்னர் அவை சாகும் வரை அவற்றை கண்காணித்தனர்.  பின்னர் … Read more