வேகமாக மாறி வரும் நெப்டியூனின் வெப்பநிலை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: நெப்டியூன் கிரகம் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4,49,82,52,900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது.  சூரிய குடும்பத்தை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் நெப்டியூன் பற்றிய சில அதிர்ச்சி தகவல்களை சேகரித்துள்ளனர். நெப்டியூனின் வளிமண்டலத்தின் வெப்பநிலை எதிர்பாராத விதமாக மாறுகிறது என்று ப்ளானெட்டரி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.  உலகம் முழுவதும் உள்ள பல தொலைநோக்கிகளின் உதவியுடன், நெப்டியூன் … Read more

உக்ரைன் சமாதானப் பேச்சுக்கள் முட்டுச்சந்தை எட்டியுள்ளது: விளாடிமிர் புடின்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில், முடிவே இல்லாமல் தொடர்கிறது . ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை.  இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாயன்று (ஏப்ரல் 12, 2022) ரஷ்யப் படைகள் வடக்கு உக்ரைனில் இருந்து பின்வாங்கிய பின்னர் … Read more

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPLல் இருந்து விலக வேண்டும்: அர்ஜுன ரணதுங்க

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில்,  இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்கின்றனர். இலங்கைக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, தனது நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஐபிஎல்லில் இருந்து வெளியேறி நாடு திரும்புமாறு  கேட்டுக் கொண்டுள்ள அவர், இலங்கையின் இத இக்கட்டான நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டுக்கு ஆதரவளிக்க … Read more

அதிக பணி நேரம், 6 நாட்கள் வேலை: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷரீபின் அதிரடி முடிவுகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பொறுப்பேற்ற உடனேயே, பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க ஒரு முடிவாக, அலுவலர்களுக்கு வாரந்தோறும் ஒரு நாள் விடுமுறையை அறிவித்ததோடு, அரசு அலுவலகங்களின் நேரத்தை 10 மணி நேரமாக அவர் மாற்றியுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.  “இனி ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை இல்லை. ஒரு அதிகாரப்பூர்வ வார விடுமுறை மட்டுமே இருக்கும் என பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் … Read more

இலங்கை நெருக்கடி: ஒரு கிலோ மஞ்சள் ரூ.3,853; ஒரு கிலோ பிரெட் விலை ரூ.3,583

இலங்கை  இதுவரை இல்லாத அளவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால்,  பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நெருக்கடி நிலைக்கான காரணமான அரசு பதவி விலக வேண்டும் என கோருகின்றனர். இதற்கிடையில், பல வாரங்களாக, மிகப் பெரிய அளவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் பெட்ரோல்-டீசல்  ஆகியவற்றுக்கும் மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு … Read more

India – US 2+2 Dialogue: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்; உறுதியாக பேசிய இந்தியா

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, வாஷிங்டனில் இந்தியா- அமெரிக்கா இடையிலான நான்காவது ‘2+2’ பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தலைமையில் அமெரிக்கா சென்றுள்ள இந்திய தரப்பிலான அமெரிக்க தூதுக்குழு, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அப்போது ரஷ்யாவிடம் … Read more

Lunar Samples: நீல் ஆம்ஸ்ட்ராங் சேகரித்த நிலவின் மாதிரிகள் ஏலம்

வாஷிங்டன்: நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்று அதிசயித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், அதனை  செயற்கைகோள் ‘அப்போலோ 11’ தகர்த்தெறிந்து. ஆம்.. அந்த சாதனையை நிறைவேற்றியவர், நிலவில் முதலில் கால் பதித்த நபர் நீல் ஆம்ஸ்ட்ராங்  என்பது அனைவரும் அறிந்ததே.  1969ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது.  செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோரும் பயணித்தனர்.  அப்போது நிலவிற்கு சென்று கால் … Read more

ஜெலென்ஸ்கியுடன் நேரடியாகப் பேசுமாறு புடினிடம் கூறினேன்: பிடனிடம் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஏப்ரல் 11, 2022) அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் மெய்நிகர் சந்திப்பை நடத்திய நிலையில், இருவரும் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர். “உக்ரைனில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நேரத்தில் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்று பிடனிடம் பிரதமர் மோடி கூறினார். பிப்ரவரி 24 அன்று படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பலமுறை பேசியதாகவும், உக்ரைன் அதிபர்  வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரைத்ததாகவும் … Read more

புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு; இம்ரான் கட்சியின் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான்கானின்  பிரதமர் பதவி பறிபோனதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க இன்று கூடின.   பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள்  இன்று மதியம் தொடங்கிய நிலையில்,  இன்னும் சிறிது நேரத்தில் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில், 174 வாக்குகள் பெற்றும் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும் பாகிஸ்தான் … Read more

Pakistan Crisis: பிரதமர் வேட்பாளர் ஷாபாஸ் ஷெரீப் முன் உள்ள சவால்கள்

பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, பொருளாதார அமைப்பு சீர்குலைந்து வருகிறது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்தார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் (பிஎம்எல்-என்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப் திங்கள்கிழமை பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கக்கூடும் நிலை உருவாகியுள்ளது.  ஆனால், ஷாபாஸ் ஷெரீப்புக்கு இது ஒரு சவாலான பணியாகவே இருக்கும். பாகிஸ்தான் எதிர்கொள்ளும் சவால்களை எளிதில் சமாளிப்பது இல்லை. பணவீக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கையாள்வது ஷாபாஸ் ஷெரீப்பின் முன் … Read more