கடற்பரப்புகளில் பலத்த காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 … Read more

2 ஆண்டுகளில் எத்தனை கோடி ரூபாவிற்கு மக்கள் முகக் கவசம் கொள்வனவு செய்துள்ளனர் தெரியுமா?

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக இலங்கை மக்கள் இரண்டாண்டு காலப் பகுதியில் பெருந் தொகை பணத்தை முகக் கவசம் கொள்வனவு செய்ய செலவிட்டுள்ளனர். கடந்த இரண்டாண்டு காலப் பகுதியில் முகக் கவசங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 18000 கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளனர். நுகர்வோர் விவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இந்த தகவலை நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இதன்படி, நாள் ஒன்றுக்கு முகக் கவசம் கொள்வனவு செய்வதற்காக 25 கோடி ரூபாவினை மக்கள் செலவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். … Read more

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர். தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது. முன்பதாக இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(07) நடைபெற்றது. மயிலிட்டி மீ்ன்பிடித் துறை முகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் … Read more

ஹிட்லர், புட்டினை ஜனாதிபதி பின்பற்ற வேண்டும் – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி

சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி ஆட்சி செய்ய வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் கருத்து வெளியிட்ட போது, “நாம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தற்போதைய பிரச்சினைகள் பற்றி பேசினோம். நாம் அவரிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம். ஜனாதிபதி ஆட்சி … Read more

சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகீஷ்கரிப்பு: நியாயமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி நியாயமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். உரிய தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள சில கோரிக்கைகளுக்குத் துரிதமாக தீர்வு வழங்க முடியும். இது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சில் நேற்று (08) இடம்பெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சில கோரிக்கைகள் பற்றி கவனம் செலுத்துவதற்காக இரண்டு வாரங்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் … Read more

முன்னணி பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தரவரிசை!

சர்வதேச Webometrics தரவரிசையின் படி கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 சிமாகோ (எகிப்து) கூட்டுத்தாபன தரவரிசை சுட்டெண்ணின் படி கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் முதல் பல்கலைக்கழகமாக தரப்படுத்தப்பட்டு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிற பல்கலைக்கழக தரவரிசைகளின் பட்டியலில் கொழும்பு பல்கலைக்கழகமும் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு மையமான கொழும்புப் பல்கலைக்கழகம், ஒன்பது பீடங்கள், ஏழு நிறுவனங்கள், ஏழு மையங்கள், … Read more

இந்தியாவில் 5 வீதமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2ஆவது நாளாக 1 இலட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று (08) காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 611 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 22,524 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தினசரி பாதிப்பு விகிதம் 7.25 சதவீதத்தில் இருந்து 5.02 … Read more

தமிழர்களின் சுய உரிமையை உறுதி செய்யுங்கள்! – இந்தியா இலங்கைக்கு அழுத்தம்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி மற்றும் சுய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளார். புது டில்லியில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேவைப்படும் காலங்களில் இந்தியா எப்போதும் இலங்கையுடன் துணை நிற்கும் என்றும் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்தார் என்று இந்திய வெளிவிவகார … Read more

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையில் 249 மில்லியன் ரூபா செலவில் பன்சேனை கொங்கிறீட் வீதி வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும்நோக்கில் முன்னெடுக்கப்படும்“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராமத்திற்கான குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (08) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, காஞ்சிரங்குடா கிராமத்திற்கான குடி நீர் வழங்கும் திட்டத்தினையும், காஞ்சிக்குடா தொடக்கம் பன்சேனை வரையிலான 6 கிலோமீற்றர் பிரதான வீதியினை … Read more

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம் மற்றும் பணம் அனுப்பும் தொகையின் அடிப்படையில் வரிச் சலுகையில் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதேவேள, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அனுப்பும் ஒரு டொலர் ஒன்றிற்கு 240 ரூபாவை வழங்க முன்மொழிந்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் … Read more