இன்று சில பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

இன்று (09) நாட்டில் சில பிரதேசங்களில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இன்று (09) மாலை 4.00 மணி தொடக்கம் நாளை (10) 6.00 மணி வரையிலான 14 மணித்தியாலய காலப்பகுதியில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. கட்டுநாயக்க, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம், கட்டான (தெற்கு), சீதுவ, உடுகம்பொலவில் ஒரு பகுதி, மினுவாங்கொடையில் ஒரு பகுதியில், கட்டுநாயக்க விமானப்படை முகாம், ஏகல, கொடுகொட, உதம்மிட, ரஜ … Read more

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்ப இலகுவழி: செய்திகளின் தொகுப்பு(Videos)

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்குப் பணம் அனுப்பும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. LANKA REMIT என்ற செயலியே இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் வைத்து நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலியின் மூலம் எந்த நாட்டிலிருந்தும் இலங்கையில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடி பணப் பரிமாற்றச் சேவைகளைப் பெற முடியும். இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,  … Read more

75 உதவி செயலாளர்கள் நியமனம்

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை வெற்றிக்கொள்வதற்கு, அனைத்து பொதுமக்களின் பொறுப்புகளை ஆகக்கூடிய வகையில் நிறைவேற்றுவதே அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ  தெரிவித்துள்ளார் .அரச நிர்வாக சேவையில் புதிதாக உதவி செயலாளர்கள் சிலருக்கு நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 75 பேருக்கு இந்த நிகழ்வின்போது நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. புதிய அதிகாரிகள் நாட்டின் பல்வேறு நிர்வாக நிறுவனங்களில் சேவைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்நிகழ்வில் பொது நிர்வாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் … Read more

டொலர் நெருக்கடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொலர்களுக்கு பற்றாக்குறை இருந்தால் கடந்த ஆண்டினுள் 22 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும், கடந்த மாதம் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தது எப்படி என்று அவர் கேள்வி … Read more

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜகான் செபகன் கௌரவ பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) பொதுச் செயலாளர் ஜகான் செபகன் (Jagan Chapagan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று (08) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தனர். உலகின் மிகப்பெரிய மனிதாபிமான சேவையாற்றும் அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனம் 192 நாடுகளில் காணப்படுகின்றன. கொவிட் தொற்று உள்ளிட்ட வரலாற்றில் இலங்கை மக்கள் முகங்கொடுத்த ஒவ்வொரு பேரிடரின் போதும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை … Read more

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறாக மாறியுள்ள ஆளும் கட்சி

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் முதலாவது பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஏனைய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பொது மக்கள் பேரணி நடைபெறவுள்ளது. நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக இருந்தாலும் இந்தப் பேரணியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள 3000 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக … Read more

கடற்பரப்புகளில் பலத்த காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 … Read more

2 ஆண்டுகளில் எத்தனை கோடி ரூபாவிற்கு மக்கள் முகக் கவசம் கொள்வனவு செய்துள்ளனர் தெரியுமா?

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக இலங்கை மக்கள் இரண்டாண்டு காலப் பகுதியில் பெருந் தொகை பணத்தை முகக் கவசம் கொள்வனவு செய்ய செலவிட்டுள்ளனர். கடந்த இரண்டாண்டு காலப் பகுதியில் முகக் கவசங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 18000 கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளனர். நுகர்வோர் விவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இந்த தகவலை நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இதன்படி, நாள் ஒன்றுக்கு முகக் கவசம் கொள்வனவு செய்வதற்காக 25 கோடி ரூபாவினை மக்கள் செலவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். … Read more

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர். தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது. முன்பதாக இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(07) நடைபெற்றது. மயிலிட்டி மீ்ன்பிடித் துறை முகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் … Read more

ஹிட்லர், புட்டினை ஜனாதிபதி பின்பற்ற வேண்டும் – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி

சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி ஆட்சி செய்ய வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் கருத்து வெளியிட்ட போது, “நாம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தற்போதைய பிரச்சினைகள் பற்றி பேசினோம். நாம் அவரிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம். ஜனாதிபதி ஆட்சி … Read more