தடையை நீக்குங்கள்! – இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக பல ஐரோப்பிய தயாரிப்புகள் இலங்கை சந்தைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை  சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி தடை … Read more

வீடு அற்றவர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

மாலபேயில் 256 வீட்டுத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் வீடற்ற நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான 5,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நடுத்தர குடும்பங்களுக்கான இந்த அடுக்குமாடி குடியிருப்பு மாலபே புதிய புபுது மைதானத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 20 மாடிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஜனவரி … Read more

ஐரோபிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு பிரசல்ஸ், 08/02/2022

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கும் இடையிலான 24 ஆவது கூட்டு ஆணைக்குழு கூட்டம் 08 பெப்ரவரி 2022 அன்று பிரசல்ஸில் இடம்பெற்றது. சினேகபூர்வமானதும் வெளிப்படையானதுமான சூழலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இருதரப்பு உறவுகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், ஆளுகை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முதல், இருதரப்பு நலன்கள் சம்பந்தமான வர்த்தகம், அபிவிருத்திக் கூட்டுறவு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், பிராந்திய ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் பல்தரப்பு மன்றங்களில் கூட்டுறவு வரையிலான … Read more

டொலர் நெருக்கடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொலர்களுக்கு பற்றாக்குறை இருந்தால் கடந்த ஆண்டினுள் 22 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும், கடந்த மாதம் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தது எப்படி என்று அவர் கேள்வி … Read more

“வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவோர், பொதுமக்கள் பற்றிச் சிந்தியுங்கள்..!” ஜனாதிபதி தெரிவிப்பு

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்டவாறு, விவசாயப் பெருமக்களின் வருமானத்தை நூற்றுக்கு நூறு வீதத்தால் அதிகரிக்கவும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அநுராதபுரத்தில் “பொதுஜன பேரணி” ஆரம்பம்… “மக்களைத் தவறாக வழிநடத்தி, நாட்டைப் பாதாளத்துக்குள் … Read more

அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் (Video)

டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து … Read more

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமாதான வேலைத்திட்டம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது. இம்மாவட்டத்திலிருந்து கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதார நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட வழிப்புனர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்கொண்டுள்ளார். அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொது இடங்களில் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வாராந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சிரமதான நடவடிக்கை … Read more

புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுமா? வெளியானது அறிவிப்பு

கோவிட் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளது. இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  Source link

மட்டக்களப்பில் தடுப்பூசி அட்டை: பாதுகாப்பு பிரிவினரால் பல இடங்களிலும் பரிசோதனை

மட்டக்களப்பில் கொவிட்19 தடுப்பூசி அட்டை ,பொலிஸ் மற்றும் இரானுவத்தினரால் பல இடங்களிலும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது ஒரு தற்காலிக பாதுகாப்பாக இருந்தாலும் ,தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே உயிரிழப்புகளில் இருந்து பாதுகாப்பு ஏற்படுத்தும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை ,பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடுபூராகவும் … Read more