தேசிய நீர்வரைவியல் சபைக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

தேசிய நீர்வரைவியல் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (ஏப்ரல் 1) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இவர்களுக்கான நிமனக் கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வழங்கிவைத்தார். 2024ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க தேசிய நீர்வரைவியல் சட்டத்தின் கீழ் தேசிய நீர்வரைவியல் சபை நிறுவப்பட்டது. தேசிய நீர்வரைவியல் சபையின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சிசிர ஜெயக்கொடி இன்று பாதுகாப்பு … Read more

தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கான பாராளுமன்ற முறைமை குறித்து தெளிவுபடுத்தும் முதலாவது நிகழ்வு 

பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் முழுமையான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமைகள் பற்றிய விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் பிரதம நூலகர் சியாத் அஹமட், பிரதிப் பிரதான உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.ஷஹீட், பொதுமக்கள் தொடர்பு அதிகாரி யஸ்ரி மொஹமட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். … Read more

இலங்கை அணி பங்களாதேஷ் அணியை விட முதல் இன்னிங்சில் 455 ஓட்டங்கள் முன்னிலையில்..

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் (01) ஆட்டம் நிறுத்தப்படும் போது, தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களையும் பிரபாத் ஜயசூரிய 03 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஹசன் மஹ்மூத் 4 விக்கெட்டுக்களையும், காலிட் அஹமட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 178 … Read more

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில்; பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சுpல இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி … Read more

பங்களாதேஷ் முதல் இன்னிங்சில் இலங்கையை விட 476 ஓட்டங்கள்; பின்தங்கியுள்ளது

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (31) ஆட்டம் நிறுத்தப்படும் போது, தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பங்களாதேஷ் அணியில் மஹ்முதுல் ஹசன் ஜோய் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு, துடுப்பெடுத்தாடும் ஜாகிர் ஹசன் 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி … Read more

ஏப்ரல் மாதத்தில் 35 ரூபாயிற்கும் குறைவான விலையில் முட்டை…

ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவிற்கும் குறைவாக பெற்றுக்கொள்ள முடியும் என்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறிப்பாக சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், … Read more

2015இல் தேசிய கீதம் தமிழில் பாடவேண்டுமென தீர்மானம் எடுத்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – மனுஷ நாணயக்கார

“வவுனியாவுக்கு வந்து தமிழில் தேசிய கீதம் பாடினோம். யாழ்ப்பாணம் சென்ற போது தமிழில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட்டது. இன்று நாம் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்காக 2015 ஆம் ஆண்டு தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஸ்மார்ட் யூத் கிளப்’ இளம் தொழில் வல்லுனர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் எட்டாம் கட்டத்தின் இரண்டாம் … Read more

புதிய தொழில்நுட்பத்துடன் திரைப்படக் கூட்டுத்தாபனம் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும்

கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதற்காக வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள். நாட்டில் முதலாவது AI திரைப்படம் தயாரிப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் – 2023 ரைகம் விருது விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. பழமையான பாரம்பரியத்துடன் காணப்படும் திரைப்படக் கூட்டுத்தாபனம் நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இலங்கை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக அபிவிருத்தி நிறுவனமாக கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேவேளை, கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை நவீன தொழில்நுட்ப அறிவுடன் வலுவூட்டுவதற்கு வெளிநாட்டு பயிற்சி … Read more

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைப் போதனைகளின் மூலம் எமது வாழ்வை ஒளிபெறச் செய்வோம்

இன்றைய சிக்கலான சமூக புரிதலின்மைகளுக்கு மத்தியில் மனித உறவுகள் மற்றும் சமூக நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இந்த உயிர்ப்பு விழா நாளில் உறுதிபூணுவோம். தைரியத்தோடு நன்னோக்கங்களை அடைந்துகொள்வதற்காக மனிதனை பாவத்தில் இருந்து விடுவித்து, சமூக நீதி, அன்பு, கருணை மற்றும் மனித நேயத்திற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் வாழ்வு சிறந்த முன்னுதாரணமாகும். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும், அதற்குத் தேவையான மனநிலையை எம்மிடம் உருவாக்க சமயப் … Read more

10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரவு வெலிஓய, நிகவெவ பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இருபத்தி ஏழு (27) கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரன்வெலி மற்றும் கோட்டாபய நிருவனங்களின் கடற்படையினர் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வெலிஓய, நிகவெவ பிரதேசத்தில் மேற்கொண்ட … Read more